Thursday, January 9, 2014

நடிகை ராதா புகார் வழக்கு :தொழில் அதிபர் பைசூலின் 4–வது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி

சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணி தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி ‘செக்ஸ்’ உறவு வைத்துக் கொண்டார் என்றும், ரூ.50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமறைவாக இருந்த பைசூலை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் 3 முறை கோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானது.

இதனால் எந்த நேரத்திலும் பைசூல் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே பைசூல் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வந்த ராதா, யாரும் எதிர்பார்க்காத வகையில் மனம் மாறி தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ‘‘என்னதான் இருந்தாலும் பைசூல் எனது கணவர்தானே எத்தனை நாள்தான் அவர் ஓடி ஒளிவார் என்று விளக்கம் அளித்தார்.


இதனால் ராதா–பைசூல் விவகாரம் முடிவுக்கு வந்தது போல தெரிந்தது. இதன் பிறகு 2 நாட்கள் ராதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. புகார் மனுவை வாபஸ் பெற்றவுடன் அவர் பைசூலுடன் போய் சேர்ந்து கொண்டார்.

இதன்பிறகு திடீரென ஒரு நாள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு தனது வக்கீல் அனந்தகுமாருடன் ராதா மீண்டும் வந்தார். அப்போது அவர், என்னை மிரட்டி புகார் மனுவை வாபஸ் பெறச் செய்தனர் என்னை தனி அறையில் அடைத்து வைத்து பைசூல் தன்னை சித்ரவதை செய்ததுடன், செல்போனையும் உடைத்துப் போட்டு விட்டார் என்று பரபரப்பான புதிய குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் ராதா–பைசூல் பிரச்சினை சிக்கலானது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து 4–வது முறையாக பைசூல் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானது.

போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக பைசூல் தொடர்ந்து தலை மறைவாகவே இருந்து வருகிறார். வழக்கமாக கோர்ட்டில் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசார் வேகம் காட்டுவார்கள்.

ஆனால் 4 முறை முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான பின்னரும், பைசூல் கைது செய்யப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராதா, போலீஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் கண்ணை மறைத்து விட்டு இத்தனை நாளும் பைசூல் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

இது தொடர்பாக தி.நகர் துணை கமிஷனர் பகலவனிடம் கேட்ட போது, ராதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பைசூலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பைசூலை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.                                                                                 

செய்தி : மாலைமலர் 

No comments:

Post a Comment