Monday, January 20, 2014

சுனந்தா புஷ்கர் சொத்தின்மதிப்பு 112 - கோடி : கணவர் சசி தரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை


சுனந்தா புஷ்கர் மரணம் கணவர் சசி தரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை

மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர்  கடந்த 17-ந் தேதி டெல்லியில் உள்ள லீலாபெலஸ் நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.

பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசிதரூருக்கும் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சுனந்தாவின் திடீர் மரணம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதனால் சுனந்தாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்ன என்பது சந்தேகங்கள் எழுந்தன.சுனந்தாவுக்கு இயற்கைக்கு மாறாக திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அவரது உடலில் சிறு காயங்கள் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறி இருந்தனர். 

இன்று சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.அவர் 30க்கும் அதிகமாக மனநல சிகிச்சை மாத்திரையை சாப்பிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.சுனந்தா பிணமாக கிடந்த ஓட்டல் அறையில் தூக்க மாத்திரை பாடில் கிடைத் துள்ளது. எனவே அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டிருப்து உறுதியாகி உள்ளதாக போலீ சார் தெரிவித்தனர்.

சுனந்தாவின் மரணம் குறித்து துணை ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். சசிதரூரிடம் துணை ஆட்சியர் அசோக்சர்மா விசாரணை நடத்தி வருகிறார்.
சுனந்தா மரணம் குறித்து சசிதரூர்  உள்பட , சுனந்தாவின் மகன், சகோதரர் மற்றும் 5 பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சுனந்தாவின் சகோதரர் நளினிசிங் தனது சகோதரியை அவர் இறக்கும் முன்பு சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். அப்போது சுனந்தா மிகவும் விரக்தியுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். சசிதரூரின் அந்தரங்க உதவியாளர் அபினவ்குமார், ஓட்டலில் சுனந்தாவுக்கு உதவியாளராக இருந்த நாராயணசுவாமி ஆகி யோரும் தங்களுக்கு தெரிந்த பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். சசிதரூர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112 கோடியிருக்கும். 2012-13&ம் ஆண்டு சசிதரூர் தாக்கல் செய்த சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பில் இருந்து இதுதெரியவந்தது. துபாயில் அவருக்கு 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 95 கோடியிருக்கும் இது ரூ.15 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கனடாவிலும் ரூ.3 கோடிக்கு வீடு உள்ளது. இது ரூ.1.65 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.6 கோடிக்கு தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் வைத்திருந்தார். வங்கியில் டெபாசிட் செய்தது மற்றும் கையில் வைத்திருந்த மொத்த பணம் ரூ. 7 கோடியாகும்.

இது தவிர  ஜம்மு காஷ்மீரில் ரூ.12 லட்சத்தில் நிலம் இருக்கிறது. ஆனால் சசிதரூரின் சொத்து மதிப்பு ரூ.6.34 கோடிதான்.

சுனந்தாவுக்கு அடுத்தப் படியாக 2-வது இடத்தில் இருப்பவர் பிரபுல்பட்டேல் மனைவி ஆவார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரியான அவரது மனைவி விர்ஷா பட்டேலின் சொத்து மதிப்பு ரூ. 97 கோடியாகும்.

செய்தி : தினத்தந்தி 

No comments:

Post a Comment