Thursday, November 26, 2015

ரூ.22 கோடியுடன் வேன் ஓட்டுநர் மாயம்


தில்லி நகரின் தென்கிழக்குப் பகுதியான கோவிந்தபுரியில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள வங்கிப் பணத்துடன் வேன் ஓட்டுநர் ஒருவர் வியாழக்கிழமை தப்பி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது
:
 தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்த ரூ.38 கோடி மதிப்புள்ள பணத்தை, நான்கு வேன்கள் மூலமாக வேறொரு பகுதிக்கு அந்த வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

 அவற்றில் ஒரு வேனுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வினய் படேல் என்பவர், கோவிந்தபுரி ரயில் நிலையம் அருகே இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்துமாறு கூறினார். அதையடுத்து, அரை சாலையோரத்தில் இறக்கி விட்ட அந்த வேன் ஓட்டுநர் பிரதீப் சுக்லா என்பவர், அடுத்த தெருவில் காத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், திரும்பி வந்த பாதுகாவலர் வேனையும் ஓட்டுநரையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த வேனில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கியின் தரப்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து, தில்லி போலீஸார் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிறிது நேரத்தில் பாதுகாவலர் வினய் படேலை இறக்கி விட்ட இடத்துக்கு அருகில் அந்த வேனை கண்டுபிடித்தனர். எனினும், ஓட்டுநரையும், வேனில் இருந்த பணப் பெட்டிகளையும் காணவில்லை.
தினமணி

சென்னையில் 24 பள்ளிகளுக்கு நவ.29 வரை விடுமுறை




சென்னையில் 24 அரசுப் பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 29 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி, ''சென்னையில் உள்ள 24 பள்ளிகளுக்கு மட்டும் நவம்பர் 29 வரை விடுமுறை. பிற அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும்'' என்று அறிவித்துள்ளார்.

விடுமுறை அறிவித்துள்ள 24 பள்ளிகளின் பட்டியல்

* மேற்கு மாம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி
* வேளச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி
* ஆசிர்வாதபுரம் அரசு முஸ்லிம் உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை சின்னமலை புனித பிரான்சிஸ் சேவியர் உயர்நிலைப்பள்ளி
* ஆர்.ஏ.புரம் ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளி
* ஆர்.ஏ.புரம் ராஜா முத்தையா மேல்நிலைப்பள்ளி
* எழும்பூர் மேரி கிளப்வாலா ஜாதவ் மேல்நிலைப்பள்ளி
* வேளச்சேரி அட்வென்ட் கிறிஸ்டியன் மேல்நிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி
* ஓட்டேரி கோட்டி எம். அப்புசெட்டி உயர்நிலைப்பள்ளி
* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி
* சாலிகிராமத்தில் உள்ள அம்பத்தூர் லயன்ஸ் கிளப் நடுநிலைப்பள்ளி
* சைதாப்பேட்டை திருவள்ளுவர் குருகுலம் நடுநிலைப்பள்ளி
* ராஜா அண்ணாமலைபுரம் சபேசன் பால பிருந்தா தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு புனித அந்தோணியார் தொடக்கப்பள்ளி
* ஆயிரம் விளக்கு சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி
* அரும்பாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளி
* கோயம்பேடு சென்னை தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை பஜார் ரோடு சென்னை தொடக்கப்பள்ளி
* சைதாப்பேட்டை திடீர் நகர் சென்னை தொடக்கப்பள்ளி
* வில்லிவாக்கம் சிட்கோ நகர் அரசு தொடக்கப்பள்ளி
* எம்ஜிஆர் நகர் சென்னை நடுநிலைப்பள்ளி


ஆப்கானில் அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல் பாகிஸ்தான் தலீபான் தளபதி பலி மேலும் 12 தீவிரவாதிகள் உயிரிழப்பு



கராச்சி,
ஆப்கானில் அமெரிக்கா நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் பாகிஸ்தான் தலீபான் தளபதி சஜ்னா கொல்லப்பட்டார். அவருடன் மேலும் 12 தீவிரவாதிகள் பலியாகினர்.


தலீபான் தளபதி சஜ்னா

பாகிஸ்தான் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தளபதி கான் சயீத் சஜ்னா. இவர் கடந்த ஆண்டு பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மத்திய தலைவர் முல்லா பஸ்லுல்லாவை நிராகரித்துவிட்டு தான் தனது குழுவுடன் தனியாக இயங்கப்போவதாக அறிவித்தார்.

முல்லா பஸ்லுல்லாவின் தலைமை தனக்குரிய ‘பாதையை’ இழந்து விட்டதாக கூறி சஜ்னா பிரிந்து வந்தார்.


ஆளில்லா விமானத் தாக்குதல்

இந்த நிலையில், நேற்று முன்தினம் ஆப்கானிஸ்தானில் கோஸ்ட் மாகாணத்தில், தம்மா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் பல்வேறு குழுக்களாக இயங்கி வந்த தலீபான் அமைப்புகள் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை களைவது தொடர்பாக சமரச பேச்சு வார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அங்கு அமெரிக்காவின் ஆளில்லா விமானம் குண்டு வீச்சு நடத்தியது.

கொல்லப்பட்டார் சஜ்னா

இந்த குண்டு வீச்சில் சஜ்னாவும், மேலும் 12 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. 20 தீவிரவாதிகள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இதுதொடர்பாக அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘நியூயார்க் டைம்ஸ்’ நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.


பாக். உளவு அதிகாரி உறுதி செய்தார்

ஆளில்லா விமான தாக்குதலில் சஜ்னா கொல்லப்பட்டு விட்டதை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரி ஒருவர் உறுதி செய்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகள் இது குறித்து எதுவும் தகவல் வெளியிடவில்லை.

அதே நேரத்தில் சஜ்னா தலைமை தாங்கி வந்த தலீபான் தீவிரவாதிகள் குழு இந்த தகவலை மறுக்கவில்லை.


மிகப்பெரிய அடி

சஜ்னா தொடர்பாக பெஷாவர் ராணுவ அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் தளபதியாக திகழ்ந்து வந்த சஜ்னாவை நீண்ட காலமாக பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க பாதுகாப்பு படைகள் பின்தொடர்ந்து வந்தன’’ என குறிப்பிட்டார்.

‘‘சஜ்னா, அமெரிக்காவின் ஆளில்லா விமான தாக்குதலில் கொல்லப்பட்டது உண்மை என்றால், அது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்துக்கு விழுந்துள்ள மிகப்பெரிய அடியாக அமையும்’’ என பாகிஸ்தான் தலீபான் இயக்கத்தின் மற்றொரு தளபதி கூறி உள்ளார்.

2 தினங்களுக்கு முன் ஆப்கானில், குனார் மாகாணத்தில், காஜி மாவட்டத்தில் அமெரிக்கா நடத்திய மற்றொரு ஆளில்லா விமான தாக்குதலில் அல் கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தளபதி பிலால் அல் தாயிப் கொல்லப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினத்தந்தி
கருத்துகள்
0
வாசிக்கப்பட்டது
3
பிரதி
Share

கருத்துக்களை பதிவு செய்ய இங்கே லாக் ஆன் செய்யவும்:
OR
 *
இயல்பாக நீங்கள் ஆங்கிலத்தில் டைப் செய்யும் எழுத்துக்கள் “Space bar” ஐ அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G ஐ அழுத்தவும். மறுபடியும் தமிழில் டைப் செய்ய மீண்டும் CTRL+G ஐ அழுத்தவும்.
அதிகபட்ச எழுத்துக்கள் -1500
முக்கிய குறிப்பு: தினத்தந்தி இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு தினத்தந்தி நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு ஆவர் . கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு webeditor@dt.co.in என்ற இந்த இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

அதிக கருத்துக்கள் பதிவு செய்தவர்கள்
img
Bronze 2513crone
1
img
Bronze 1479crone
2
img
Bronze 439 crone
3
img
Bronze 378 crone
4
img
Bronze 295 crone
5

சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து நேரில் ஆஜர்

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


கடந்த மாதம் சென்னையில் டி.நகரில் முன்னாள் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, நீதிபதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு விலைபோய் விடுகின்றனர் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா என்பவர் வைரமுத்து மீது உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி அமர்வு உத்தரவிட்டது
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதாகரன், பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு முன் வைரமுத்து ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து அவர் மீதான அவதூறு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

http://tamil.webdunia.com/

ரஷ்ய ஹெலிகாப்டர் வெடித்து 15 பேர் பலி


ருஷ்யாவில் பயணிகள் ஹெலிகாப்டர் ஒன்று வெடித்துச் சிதறியதில் அதில் பயணம் செய்த 15 பேர் பலியாயினர்.

இதுதொடர்பாக அந்நாட்டு மண்டல போக்குவரத்து அதிகாரிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தலைநகர் மாஸ்கோவிலிருந்து 2,800 கி.மீ. தொலைவில் உள்ள மேற்கு சைபீரியாவின் இகர்கா விமான நிலையத்திலிருந்து எம்ஐ-8 ரக ஹெலிகாப்டர் காலை 9.30 மணிக்கு புறப்பட்டது. 22 பயணிகள் மற்றும் 4 ஊழியர்களுடன் அப்பகுதியில் உள்ள எண்ணெய் பம்பிங் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த அந்த ஹெலிகாப்டர், புறப்பட்ட 15 நிமிடங்களில் வெடித்துச் சிதறியது. 

இந்த விபத்தில் 15 பேர் பலியாயினர். மேலும் படுகாயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



நன்றி :- தி இந்து

Wednesday, November 25, 2015

ரஜினியுடன் பணியாற்றிய நாட்கள்: உருகும் மெய்க்காப்பாளர்

ரஜினியுடன் ராஜ் அபுக்கா ஜோ

ரஜினியுடன் ராஜ் அபுக்கா ஜோ


ரஜினியுடன் மெய்க்காப்பாளர்கள்.

ரஜினியுடன் மெய்க்காப்பாளர்கள்.

மலேசியாவில் ‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பியுள்ளார் ரஜினி. இன்னும் ஒரு கட்டப் படப்பிடிப்பு அங்கே நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘கபாலி’ படப்பிடிப்பின்போது மலேசியாவில் ரஜினிக்கு மெய்க்காப்பாளராக பணியாற்றிய ராஜ் அபுக்கா ஜோவை தொடர்புகொண்டு பேசினோம். ரஜினியுடன் பணியாற்றிய நாட்கள் குறித்து ராஜ் அபுக்கா ஜோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:

“நான், மைக், சாம்மாட், சாரி உள்ளிட்டவர்கள்தான் ரஜினிக்கு மெய்க் காப்பாளர்களாக பணியாற்றினோம். கமல், சூர்யா உள்ளிட்ட தமிழ் நட்சத்திரங்கள் மலேசியாவுக்கு படப்பிடிப்புக்கு வரும் போது நான் மெய்க்காப்பாளராக பணியாற்றி இருக்கிறேன். ரஜினி சாரின் தீவிர ரசிகன் நான். அவருடைய சிலை ஒன்றை என் வீட்டில் வைத்திருக்கிறேன்.

அப்படிப்பட்ட எனக்கு ரஜினியுடன் பணியாற்றும் அனுபவம் கிடைக்கும் என்று நான் நினைத்துப் பார்க்கவில்லை. அவருடைய வேகத்தை நான் வேறு எந்த நடிகரிடமும் பார்க்கவில்லை. ரஜினி வெளியே கிளம்பிவிட்டால், அவருக்கு ஈடுகொடுத்து செல்வது மிகப்பெரிய சவாலாக இருக்கும்.

ஒருமுறை அவர் அறையில் இருக்கும்போது, நாங்கள் வெளியில் நின்று கொண்டிருந்தோம். அப்போது அறையில் இருந்து வெளியே வந்த அவர், “வீட்டுக்கு செல்லவில்லையா?” என்றார். “இல்லை சார்.. உங்கள் பாதுகாப்புக்காக இருக்கிறோம்” என்றோம்.

உடனடியாக அவர் தனது அறைக்குச் சென்று தன் உதவியாளர் சுப்பையாவிடம் “நான் உள்ளே நிம்மதியாக தூங்குவேன். ஆனால் அவர்களோ வெளியே நின்று கொண்டிருக்கிறார்கள். கஷ்டமாக இருக்கிறது. அவர்களை வீட்டுக்கு போகச் சொல்லுங்கள். போன் நம்பர் வாங்கிக் கொள்ளுங்கள். உதவி தேவைப்படும் போது நாம் அவர்களை அழைக்கலாம்” என்று கூறியிருக்கிறார். இது அவருடைய பெருந்தன்மையைக் காட்டுகிறது.

இந்திய திரையுலகம் கொண்டாடும் ஒரு நடிகர், மலேசியாவில் மிகவும் எளிமையாக இருந்தார். காரில் சென்று கொண்டிருப்பார். சிக்னலில் யாராவது கையை காட்டினால் உடனே கண்ணாடியை இறக்கிவிட்டு அவர்களுடன் பேசுவார், கை குலுக்குவார். சில சமயங்களில் நாங்கள் சென்று அவருக்கு ஏதேனும் சிரமம் ஏற்பட்டு விடக் கூடாதே என்று தடுப்பதற்குள் அவருடைய கைகளில் அடிபட்டுவிடும். அதைக் கூட அவர் பெரிதுபடுத்தவில்லை. அடுத்த நாளும் அப்படியே செய்வார். தனது ரசிகர்கள் மீது அவர் அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறார்.

எங்களை எல்லாம் மெய்க்காப்பாளர்கள் என்றே அவர் நினைக்கவில்லை. நண்பர்கள் போன்று நடத்தினார். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் சாப்பிட்டீர்களா என்று விசாரிப்பார். பத்திரமாக வீட்டுக்கு போக வேண்டும் என்று சொல்வார். நான் ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டிருக்கிறேன். ஒரு நாள் என்னை அழைத்து ஆசிர்வாதம் செய்து மாலை ஒன்றை போட்டுவிட்டார். எனக்கு கண்ணீர் வந்துவிட்டது. அவருட னான 19 நாட்களும் என் வாழ்க்கையின் பொன்னான தருணங்கள்.

ஒருநாள் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில், தங்கியிருந்த ஓட்டலுக்கு கீழே கைலியுடன் வந்துவிட்டார். நாங்கள் அவரைத் தடுத்தபோது, “எனக்காக என் ரசிகர்கள் மழை, வெயில் என பார்க்காமல் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்கள் நிற்பதை விட, நான் கீழே இறங்கி வந்தது ஒன்றும் பெரிய விஷயமில்லை” என்றார்.

தமிழ்நாட்டை அடுத்து மலேசியாவில் தான் அவருக்கு ரசிகர்கள் அதிகம். ரஜினிக் காக தமிழ் கற்றுக் கொண்டவர்கள் இங்கு அதிகம். இங்கு அவர் இருக்கும்போது வெவ் வேறு இடங்களில் இருந்து ரசிகர்கள் அவரை பார்க்க வந்து நின்றது மறக்க முடியாதது. அவர் மீண்டும் மலேசியாவுக்கு வருவார் என்று நம்புகிறேன். அவரிடம் மீண் டும் பணியாற்ற இருக்கும் நாட்களுக்காக காத்திருக்கிறேன்.

இவ்வாறு ராஜ் அபுக்கா ஜோ கூறினார்.

மேலும் சினிமா தகவல்களுக்கு...
Keywords: ரஜினி, பணியாற்றிய நாட்கள், உருகும் மெய்க்காப்பாளர், கபாலி, தமிழ்நாடு, ரசிகர்

நன்றி :- தி இந்து :- 

நாமக்கல்லில் பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாக 4 மாணவிகள் நீக்கம்


Image result for teenage girls drinking alcohol in class rooms clip arts in india

நாமக்கல் அரசுப் பள்ளியில் வளாகத்திலேயே மது அருந்தியதாக 4 மாணவிகள் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு பயிலும் 4 மாணவிகள் தேர்வு அறையில் மது அருந்திய நிலையில் இருந்ததால் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். அந்த மாணவிகளுடன் இருந்த மேலும் 3 மாணவிகள் இது குறித்து ஆசிரியர்களிடம் தெரிவிக்காமல் மறைத்ததால் நீக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் கடந்த 21-ம் தேதி நடந்துள்ளது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ளது. இப்பள்ளியில் மொத்தம் 2,500 மாணவிகள் பயில்கின்றனர்.

பள்ளியில் கடந்த 16-ம் தேதி தேர்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கனமழை காரணமாக அன்று தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. மறுதேர்வு நவம்பர் 21-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 21-ம் தேதி கணினி அறிவியல், அறிவியல், வணிக கணிதம் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெறும் என்றும் மாணவிகள் தேர்வு எழுத வருமாறும் பள்ளி அறிவுறுத்தியிருந்தது.

காலை 8.30 மணிக்கு மாணவிகள் பள்ளிக்கு வரத் துவங்கினர். அப்போது ஆசிரியர்கள் யாரும் வரவில்லை. பிளஸ் 1 மாணவிகள் சிலர் தாங்கள் கொண்டுவந்திருந்த மது பாட்டிலைத் திறந்து அதில் குளிர்பானத்தை கலந்து அருந்தியுள்ளனர். சிலருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மாணவிகள் தேர்வு அறைக்குச் சென்றுள்ளனர். தேர்வு அறையில் இருந்த கண்காணிப்பாளர் மாணவிகள் நிலையைக் கண்டு அதிர்ந்துபோய் தலைமை ஆசிரியர் கிருஷ்ணவேணியிடம் தெரிவித்தார். உடனடியாக பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது.

இதனையடுத்து பள்ளி வளாகத்தில் மது அருந்தியதாக 4 மாணவிகளும், அதற்கு துணை போனதாக 3 மாணவிகளும் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டனர். கடந்த சனிக்கிழமை 4 மாணவிகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. மற்ற மூன்று மாணவிகளின் பெற்றோர்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளின் மாற்றுச் சான்றிதழை வாங்கவில்லை.

இது தொடர்பாக பள்ளியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சி.இ.ஓ எஸ்.கோபிதாஸ் விசாரணை மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியைகளிடம் விசாரணை மேற்கொண்டார்.

இன்று பள்ளியில் சி.இ.ஓ. விரிவான விசாரணை மேற்கொள்கிறார். ஆசிரியைகள், மற்ற மாணவிகள், நீக்கப்பட்ட 7 மாணவிகளிடமும் விசாரணை செய்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மூன்றாவது சம்பவம்:

கடந்த ஆண்டு திருச்செங்கோடு அரசு ஆண்கள் பள்ளியைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் பள்ளி விழாவில் மது அருந்திவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக நீக்கப்பட்டனர். கடந்த ஜூலையில் மாணிக்கம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்ற பிளஸ் 1 மாணவர்கள் 4 பேர் நீக்கப்பட்டனர்.

Keywords: பள்ளி வளாகம், மது அருந்தியது, 4 மாணவிகள் நீக்கம்
Topics: தமிழகம்|

தி   இந்து