Sunday, March 16, 2014

லூசாப்பா நீ... கோபத்தில் மகன் மூக்கைக் கடித்துத் துண்டித்த தந்தை!

சாக்ரமென்டோ, அமெரிக்கா: அமெரிக்காவில் அழுது கொண்டிருந்த மகனை அடக்கத் துப்பில்லாத ஒரு அப்பா, மகனுடைய மூக்கை கடுமையாக கடித்து விட்டார். இதனால் அந்தக் குழந்தையின் மூக்கில் கடும் காயம் ஏற்பட்டு எலும்பும் முறிந்து விட்டது. அந்த அப்பாவை போலீஸார் கைது செய்துள்ளனர். மகனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கடித்ததால் ஏற்பட்ட அதிர்ச்சியால் குழந்தையின் மூளையிலும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாம். மூக்கும் பாதி அளவுக்கு துண்டிக்கப்பட்டு விட்டது. தீவிர சிகிச்சைப் பிரிவில் தற்போது குழந்தையைச் சேர்த்துள்ளனர்.

பேர்பீல்ட் என்ற இடத்தில்தான் இந்த துயரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த தந்தையின் பெயர் ஜோஷுவா கூப்பர். இவருக்கு 18 வயதுதான் ஆகிறது. இந்த இளம் வயதிலேயே தந்தையாகி விட்டார். இவரது குழந்தை பிறந்து ஒரு மாதம்தான் ஆகிறது. சம்பவத்தன்று கூப்பர் தனது வீட்டில் மகனுடன் இருந்தார். அப்போது குழந்தை வீறிட்டழுதுள்ளது. இதைப் பார்த்த கூப்பர் மகனை அமைதிப்படுத்த முயன்றார். ஆனால் முடியவில்லை, அதற்கு மேல் என்ன செய்வது என்று தெரியாத அவர் கோபமடைந்து, குழந்தையைத் தூக்கி மூக்கைப் பலமாக கடித்துள்ளார். இதனால் மேலும் குழந்தை வீறிட்டழுதது. குழந்தையின் அழுகைச் சத்தம் பலமாக இருந்ததால் அக்கம் பக்கத்தினர் என்னவென்று பார்க்க வந்தனர். நடந்தைதப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த போலீஸார் கூப்பரைக் கைது செய்தனர். 

குழந்தையை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். கடித்த அதிர்ச்சியால் குழந்தையின் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மண்டை ஓட்டிலும், மூக்கின் எலும்பிலும் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மூக்கும் பாதி துண்டிக்கப்பட்டுள்ளதாம். கூப்பரின் செயலால் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏன் இப்படி பைத்தியக்காரத்தனமாக கூப்பர் நடந்து கொண்டார் என்றே தெரியவில்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். கூப்பரின் செயலைப் பார்த்து எனக்கு இதயமே வெ்டிப்பது போல ஆகி விட்டது என்றார் கூப்பரின் செயலை முதலில் பார்த்த பக்கத்து வீட்டுக்காரர். போலீஸார் விரைந்து வந்து பார்த்தபோது குழந்தையின் மூக்கு பாதி துண்டிக்கப்பட்ட நிலையில் படுக்கை அறையில் கிடந்தது. போலீஸாரும் நடந்ததை அறிந்தும், குழந்தையைப் பார்த்தும் பெரும் அதிர்ச்சி அடைந்து விட்டனராம்.

ஒன் இந்தியா  

Friday, March 14, 2014

பிளஸ் 2 கணிதத் தேர்வில் தவறான கேள்வி: மதிப்பெண் வழங்க கோரிக்கை



பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கியது. பொறியியல் மற்றும் மருத்துவம் படிப்பில் சேர முக்கியமான தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

அதில் இன்று கணித தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் 6 மதிப்பெண்கள் வினாவில் 47வது கேள்வி தவறாக கொடுக்கப்படிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே இந்த வினாவுக்கு மாணவர்களுக்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என்று கணித அசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் விஜயகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். 

தினமணி

18 தொகுதிகளில் போட்டியிட இடதுசாரிகள் முடிவு


வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சிகள் இணந்து தலா 9 தொகுதிகள் வீதம்  மொத்தம் 18 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜி.என். ராமகிருஷ்ணன் ஆகியோர் இதனைத் தெரிவித்தனர். 

புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, தருமபுரி, திருவள்ளூர், தென்காசி, நாகை, தூத்துக்குடி, கடலூர், திருப்பூர் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுவதாகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோவை, மதுரை, கன்னியாகுமரி, வடசென்னை, திண்டுக்கல், திருச்சி, விருதுநகர், விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் போட்டியிடுகிறது.

தினமணி

குறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம்

போதிய உறக்கமின்மை காரணமாக ஏற்படும் குறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம் சென்னை கீழ்ப்பாக்கம் ஹோட்டல் பெவர்லியில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

உலக உறக்க விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று குறட்டை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.

இக்கருத்தரங்கில் பங்கேற்க இதுவரை 150 டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நெஞ்சுவலி ஆகியவற்றைத் தடுப்பதற்குரிய வழிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுதல் ஆகியவை பற்றியும், நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

முன்னதாக, கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை சார்பில் உறக்கமின்மை பிரச்னையால் ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்காக பிப்ரவரி 12-ஆம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு கே.கே.ஆர். மருத்துவமனையில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, கருத்தரங்கம் நடைபெறும் ஹோட்டலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு டாக்டர்களுக்கு விளக்கப்படும் என்றார் டாக்டர் கே.கே.ராமலிங்கம்.

தினமணி

Tuesday, March 11, 2014

சத்த்தீச்கர் : நக்சல் தாக்குதலில் 16 பேர் பலி



சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்ட நக்ஸலைட்டுகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜீரம் நுல்லா வனப் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் 30 பேரும், மாநில போலீஸார் 14 பேரும் புதிதாக சாலை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை சுமார் 200 நக்ஸலைட்டுகள் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை வெடிக்க செய்ததுடன், பாதுகாப்பு படையினரையும் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள், 4 போலீஸார் உள்பட 16 பேர் பலியாகினர். அவர்களில் சிஆர்பிஎஃப் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்திய இன்ஸ்பெக்டர் சுபாஷ் என்பவரும் ஒருவராவார். மேலும் 3 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர்.

பின்னர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் படையினர் மற்றும் போஸீஸாரின் உடல்கள் அருகே கிடந்த துப்பாக்கிகளை நக்ஸலைட்டுகள் கொள்ளையடித்துக் கொண்டு வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். தப்பியோடும்போது அப்பகுதியில் இருந்த 3 வாகனங்களை நக்ஸலைட்டுகள் தீவைத்து எரித்து விட்டனர்.

நக்ஸலைட்டுகள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது யாரேனும் காயமடைந்தனரா ?என்பது குறித்து தகவல் இல்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தண்டேவாடா பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 76 பேர் பலியாகினர். 2013ஆம் ஆண்டு மே மாதம் பஸ்தர் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நக்ஸலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை நக்ஸலைட்டுகள் இயக்கத்தை சேர்ந்த ராமண்ணா, சுரீந்தர் மற்றும் தேவா ஆகிய 3 பேர் தலைமை தாங்கி நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களுக்கு, புலனாய்வுப் படை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியிருப்பது சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேடும் பணி தீவிரம்: தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்ட நக்ஸலைட்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சிஆர்பிஎஃப் படையினர் மற்றும் போலீஸார் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜெகதால்பூர் மற்றும் ராய்ப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடைபெற்ற பகுதியை பார்வையிடுவதற்காக சிஆர்பிஎஃப் டிஜிபி திலீப் திரிவேதி மற்றும் ஐஜி ஜுல்பிகர் ஹாசன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கமுள்ள சோனேபத்ரா, சாந்தௌலி, மிர்ஜாபூர் ஆகிய 3 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பிரணாப் வலியுறுத்தல்: இந்நிலையில் நக்ஸல்கள் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நக்ஸல்கள் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் பலியானது குறித்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் மீது இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நக்ஸலைட்டுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், அந்த இயக்கம் தயக்கமின்றி ஒடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறுகையில், "இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது' என்றார்.

ராகுல் கண்டனம்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "இந்தத் தாக்குதல் முட்டாள்தனமானது. தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை பாஜக கண்டிக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலின்போது இதேபோல் நக்ஸலைட்டுகள் தாக்குதலை நடத்தினர். ஆனால் அவர்களின் திட்டம் அப்போது தோல்வியடைந்தது. அதுபோல் மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போதும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த முறை போன்று இம்முறையும் அவர்கள் தோல்வியடைவர்' என்றார்.

மாநில அரசே பொறுப்பு- காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்," தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்துவதை நக்ஸல்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக பாஜக தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்' என்றார்.

தினமணி

மதுரை: தினமும் 100 குடம் தண்ணீர் சுமந்த கொத்தடிமைச் சிறுவன் மீட்பு




பீகாரில் இருந்து அழைத்து வரப்பட்டு, தினமும் 100 குடம் தண்ணீர் சுமக்க வைக்கப்பட்ட கொத்தடிமைச் சிறுவன் மீட்கப்பட்டுள்ளான்.

மதுரை ஹாஜிமார் தெருவில் உள்ள ஒரு பணக்காரர் வீட்டில் பீகாரைச் சேர்ந்த 9 வயது சிறுவன் வேலைபார்த்து வந்தான். தற்போது தண்ணீர் தட்டுப்பாடு என்பதால், தினமும் பொதுக்குழாயில் இருந்து 100 குடம் தண்ணீர் எடுக்கச் சொல்லி வேலை வாங்கியுள்ளனர். மேலும் அந்த வீட்டில் இச்சிறுவனை கொத்தடிமையாக நடத்தியுள்ளனர்.

இது குறித்த புகாரின் பேரில், சைல்டு லைன் அமைப்பைச் சேர்ந்த செல்வகுமார், திடீர் நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் உதயசூரியன் மற்றும் போலீஸாருடன் சென்று அச்சிறுவனை மீட்டார். தற்போது முத்துப்பட்டியில் உள்ள சக்தி விடியல் மையத்தில் சிறுவன் தங்க வைக்கப்பட்டுள்ளான்.

இது குறித்து மாவட்டக் குழந்தைகள் நலக் குழுமத் தலைவர் ஜிம் ஜேசுதாஸ் கூறுகையில், "இச்சிறுவனை பீகார் மாநிலத்தில் இருந்து மதுரையைச் சேர்ந்த முகம்மது பக்கீர், முகம்மது தௌசீக் ஆகியோர் அழைத்து வந்துள்ளனர். விசாரணையில், அவனது பெற்றோர் பெயர் முகம்மது ஜாப்பிடி-சாந்தினி என்றும், அவர்களுக்கு 5 குழந்தைகள் என்றும் தெரிய வந்துள்ளது.

அவர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்து, இவர்கள் சிறுவனை அழைத்து வந்தார்கள் என்று தெரியவில்லை. செவ்வாய்க்கிழமை குழந்தைகள் நலக் குழுமத்தில் விசாரணை நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரத்தில் சிறுவனின் பெற்றோருடன் தொடர்பு கொள்ளவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்றார்.

மதுரையைச் சேர்ந்த முகம்மது பக்கீர், முகம்மது தௌசீக் ஆகியோர் அழைத்து வந்துள்ளனர். அவனது பெற்றோர் பெயர் முகம்மது ஜாப்பிடி-சாந்தினி என்றும் தெரிய வந்துள்ளது. 

தி இந்து 

Sunday, March 9, 2014

கோவிலுக்கு வசூலாக வேண்டிய தொகை மக்கள் பார்வைக்கு

appar thirukkovil
sundar
8, மார்ச் ,2014 , சனிக்கிழமை. அருமை நண்பர் சுந்தர்   புருஷோத்தமன் அழைத்தன் பேரில் , சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அப்பர்சாமி திருக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னையிலே இருந்தும், அந்தப்பகுதி வழியே பலமுறை சென்றிருந்தும், அச்சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையையும், அப்பர்சாமிக் கோவிலையும் இன்றுதான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.  . அவன்தாள் வணங்க அவனருள் வேண்டும் என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுவதன் பொருளை அனுபவாயிலாக உணர முடிந்தது. நண்பருக்கு நன்றி.
 சென்னை மயிலாப்பூரில் , திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது 'மயிலை அருள்மிகு அப்பர்சாமி உடனுறை விஷாலாட்சி அம்பாள்  திருக்கோவில். பரபரப்பும் ,நெருக்கடியும் நிறைந்த நெடுஞ்சாலை. சாலையை விடுத்துக் கோவிலுக்குள் சென்றுவிட்டால் நிலவும் அமைதியே ஆனந்தமளிக்கும்.. கோவில்வெளிப் புறவழியில் மெளனமாக அமர்ந்திருந்தாலே போதும். மனம் அமைதி பெறும். குழப்பங்கள் நீங்கும். தெளிவு பிறக்கும்.  தியான மண்டபமும் திருக்கோவிலுள் அமைந்துள்ளது பிறிதொரு சிறப்பு.
tn44appa004
திருக்கோவிலின் நிர்வாக அலுவலகத்தின் முன்புறம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையும்  , அதில் இடம்பெற்றிருந்த தகவல்களுமே இன்றைய இந்தப் பதிவுக்கான  அகத்தூண்டுதல்.
மயிலை அப்பர்கோவில் பரம்பரை  அறங்காவலர்,  துணிச்சலாக யார் யாரிடமிருந்து எவ்வளவு தொகை  வசூலாக வேண்டியுள்ளது என்பதை நிர்வாக அலுவலகம் முன்பாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்துள்ளார்.  அதனையே மேற்கண்ட  படத்தில்  காண்கின்றோம்.
மேற்காணும் அறிவிப்புப் பலகையில் எழுதிவைத்துள்ளபடி ,  மயிலை அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோவிலுக்கு  வசூலாக வேண்டிய  மொத்தத் தொகை ரூ.68,79,577. 
திருக்கோவில்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து வரவேண்டிய வருமானம் முறையாக வசூலாவதில்லை. அவற்றை வசூலித்திட நேர்மையான முறைகளில் முயற்சிகள் தொடர்வதும் இல்லை.
இது  நல்லதோர்  முயற்சி. வழிகாட்டுதலும் ஆகும்.    இதே வழி முறைதனை இதர திருக்கோவில் நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டும் .
சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சுய மரியாதையுள்ளோர்  மட்டுமாவது உடனே  கோவிலுக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிகளைக் கொடுக்கத் துவங்குவர்.
இம்முயற்சியை மேற்கொண்டுள்ள மேற்படி மயிலை அப்பர்சுவாமிகள் உடனுறை விஷாலாட்சி அம்மையார் திருக்கோவில் பாரம்பரிய அறங்காவலர் P.V.இராஜ்குமார் அவர்களை மனமாரப் பாராட்டுகின்றோம்.
எல்லாம்வல்ல மயிலை அப்பர்சுவாமிகள் உடனுறை விஷாலாட்சி அம்மன் திருவருட் கருணையால் பாக்கித்தொகை விரைவில் வசூலாகும் என்றும் நம்பிக்கை கொள்வோம்.
சமயக்குரவர் நால்வர் , தக்கோலம்
சமயக்குரவர் நால்வர் , தக்கோலம்

Thursday, March 6, 2014

கனவுகளின் மீதான தாக்குதல்


நீங்கள் என் முகத்தின் மீது திராவகத்தை வீசவில்லை; என் கனவுகளின் மீது வீசினீர் கள். உங்கள் இதயத்தில் அன்பில்லை; திராவகத்தால் அது நிறைந்திருக்கிறது. நேசத்தை ஒருபோதும் வெளிப்படுத்தாத உங்கள் கண்கள், சுட்டெரிக்கும் பார்வையால் என்னை எரியூட்டின. நான் இம்முகத்தைச் சுமந்தலையும் போது, என் அடையாளத்தின் ஒரு பகுதியாய் உங்களின் அரித்தழிக்கும் பெயர்களும் இணைந்திருப்பது எனக்குச் சோகமூட்டுகிறது. காலம் என்னை மீட்க வரவில்லை. பிரதி வியாழக்கிழமையும் உங்களை எனக்கு நினைவூட்டுகிறது”

சர்வதேச வீரப்பெண் விருது வழங்கும் விழாவில், இந்தியாவின் லட்சுமி வாசித்த கவிதை வரிகள் இவை. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் சர்வதேச வீரப் பெண் விருது ஆப்கானிஸ்தான், பிஜி உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பெண்களுக்கு வழங்கப்பட்டது. இந்தியாவின் லட்சுமிக்கு, திராவகத் தாக்குதல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் துணிச்ச லாக ஈடுபட்டு வருவதற்காக இவ் விருது வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபரின் மனைவி மிஷெல் ஒபாமா இவ்விருதை வழங்கினார்.

2005-ம் ஆண்டு திராவக தாக்குதலுக்கு ஆளான லட்சுமி, முடங்கிப்போய்விடாமல் இத்தகு தாக்குதல்களுக்கு எதிரான சட்டப்பாதுகாப்பு கோரி போராடினார். பல்வேறு சட்டத் திருத்தங்களுக்குக் காரணமாகவும் விளங்கினார். இதைப் பாராட்டும் விதத்தில் சர்வதேச வீரப் பெண் விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்ற பின் லட்சுமி கூறுகையில், “ இந்த விருதுக்குப் பிறகு, லட்சுமியால் முடியும்போது என்னாலும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்ப முடியும் என்பதை இந்தியப் பெண்கள் உணர வேண்டும்” என்றார். கடந்த ஆண்டு சர்வதேச வீரப் பெண் விருது, டெல்லியில் ஒரு கும்பலால் பாலியல் வன்முறைக்கு ஆளான நிர்பயாவுக்கு வழங்கப் பட்டது குறிப்பிடத்தக்கது 

தி இந்து 

Tuesday, March 4, 2014

சென்னை : பெண்களைக் கட்டிப்போட்டு 40 சவரன், 1 லட்சம் கொள்ளை




சென்னை, இராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கத்திமுனையில் மிரட்டி, கட்டிப்போட்டு, 40 சவரன் நகைகள், 1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகள் செக்யூரிட்டியைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இராயபேட்டை பாலாஜி நகர் அனுமந்தப்ப தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கலீலுர் ரஹ்மான். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். வீட்டில் அவரது மனைவி, தாய் சகோதரி மற்றும் உறவினர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த 2 ஆசாமிகள் கத்திமுனையில் அங்கிருந்த பெண்களை மிரட்டி உள்ளனர். பயந்துபோன பெண்கள் அலறினர். அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, அவர்கள் அணிந்திருந்த மற்றும் பீரோவில் இருந்த ^9 லட்சம் மதிப்புள்ள 40 சவரன்  நகைகள், ^1 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். 

சத்தம் கேட்டு வந்த செக்யூரிட்டி தடுக்கவே அவரைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். கத்தியை வீட்டிலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் முகமூடி போட்டு இருந்ததால் யார் என்று வீட்டிலுள்ள பெண்களால் அடையாளம் காட்ட முடியவில்லை. 

கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தன்பேரில் இராயப்பேட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை மீண்டும் தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டை ஆராய்ந்தனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கத்தியில் கைரேகை பதிந்துள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர், 

குடியிருப்பில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பார்த்து வருகின்றனர். சென்னையின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

தினகரன்

ஐரோப்பாவின் முதல் தமிழ் வானொலி



ஐரோப்பாவிலிருந்து 24 மணி நேரமும் ஒலிக்கும் முதல் தமிழ் வானொலியாக ஆரம்பிக்கப்பட்டது ‘ரி-ஆர்-ரி’ (T.R.T)  தமிழ்ஒலி வானொலி என்பது எல்லோரும் அறிந்ததே…

தன்னலமற்று உழைக்க பலரின் கூட்டுமுயற்சியில் ‘ரி.ஆர்.ரி’ தமிழ்ஒலி பல வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழர் நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்தது. ஆனால் அதன்மூலம் எவ்வித பயனையும் அதற்கென உழைத்தவர்கள் கிஞ்சித்தும் பெறவில்லை.  இந்தக் கலைஞர்களின் தன்னலமற்ற உழைப்பும், நேயர்களின் அதிக பங்களிப்பும் தமிழ் ஒலியின் வளர்ச்சியை வானளாவ உயர்த்தியது.

இந்நிலையில், 2000ம் ஆண்டின் இறுதியில் ‘ரி.ஆர்,ரி’ தமிழ் ஒலியின் இயக்குனர் அந்த நிறுவனத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, தமிழ்ஒலிக் கலைஞர்கள் அனைவரும் நன்றியுணர்வுடன் அவரோடு சென்றனர்.

‘ரி.ஆர்.ரி’ தமிழ்ஒலிக் கலைஞர்களின் இந்த வெளியேற்றம் நேயர்கள் மத்தியில் மிகப் பெரும் வேதனையை ஏற்படுத்தியது.  அதன் காரணமாக அவர்களின் நிறைவான நிதியுதவியுடன் புதியதொரு வானொலி ஆரம்பிக்கப்பட்டுத் திறம்பட இயங்கி வந்தது.

இந்த வேளை சேவையுணர்வுடன் பணியாற்றிய பல கலைஞர்கள், குடும்ப சூழ்நிலை – பணிச்சுமை காரணமாக வெளியேறிய நிலைமையில்,  அங்கு பணியாற்றிய கலைஞர்களுக்கும் தெரியாமலேயே, அந்த வானொலி தனது ஆரம்பகால இலக்கு – நோக்கத்திலிருந்து விலகி எதிர்நிலையெடுத்தது.

இச்சூழ்நிலையிலேயே நேயர்களின் விருப்பத்திற்கேற்ப வானொலியொன்று பிறப்பெடுப்பது காலத்தின் கட்டாயமானது. 

ஆரம்ப காலத்திலிருந்து சேவையுணர்வுடன் பணியாற்றிய கலைஞர்களின் உழைப்பாலும், நேயர்களின் ஆதரவாலும் புகழ்பெற்ற ” ‘ரி.ஆர்.ரி’  தமிழ்ஒலி” என்ற பெயரையே அது மீண்டும் தனக்குச் சூடிக்கொண்டதுடன் அத்தனை கலைஞர்க

http://www.tamilolli.com

Sunday, March 2, 2014

டெல்லியில் மனைவி, குழந்தைகளை கொன்று உளவுத்துறை அதிகாரி தற்கொலை



புதுடெல்லி :டெல்லியில் உளவுத்துறை அதிகாரிஆனந்த் சக்ரவர்த்தி இன்று குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்டார். டெல்லியில் உள்ள வீட்டில் தூக்கில் பிணமாகத் தொங்கிய ஆனந்த் சக்கரவர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் 2 குழந்தைகளின் உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தினகரன்