Tuesday, January 21, 2014

முதலில் ஜெயலலிதா இப்போது கெஜ்ரிவால்

டில்லி மாநில முதல்வராக பதவியில் இருக்கும், அரவிந்த் கெஜ்ரிவால், வீதியில் இறங்கி, மத்திய அரசுக்கு எதிராக, போராட்டம் நடத்தியது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்குப் பிறகு, இப்போது, கெஜ்ரிவால் போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

சித்துதோஷ் முகர்ஜி தலைமையிலான, காவிரி நதிநீர் ஆணையம், 1992ல், காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக, இடைக்கால தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை, மத்திய அரசின், கெஜட்டில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டது.பல முறை கோரிக்கை வைத்தும், இடைக்கால தீர்ப்பை வெளியிடாமல், அப்போதைய பிரதமர், நரசிம்ம ராவ் தலைமையிலான மத்திய அரசு, இழுத்தடித்தது.இதை கண்டித்து, 1993ல், அப்போதைய தமிழக முதல்வர், ஜெயலலிதா, சென்னை மெரினா கடற்கரையில், உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்.ஒரு மாநிலத்தின் முதல்வராக இருந்தவரே போராட்டத்தில் ஈடுபட்டது, அப்போது, நாட்டிலேயே, முதல் முறை. எனவே, ஜெயலலிதா உண்ணாவிரதம், நாடு முழுவதும், பெரிய அளவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. உண்ணாவிரதம், பல நாட்கள் நீடித்த நிலையில், மத்திய அரசு, தன் நிலையில் இருந்து இறங்கி வந்தது.அப்போதைய மத்திய நீர்வளத்துறை அமைச்சர், வி.சி.சுக்லா, உண்ணாவிரதப் பந்தலுக்கு வந்து, இடைக்கால தீர்ப்பை, மத்திய அரசின் கெஜட்டில், வெளியிட உறுதியளித்தார். பிறகு, அவரே, முதல்வருக்கு பழச்சாறு கொடுத்து, உண்ணாவிரதத்தை முடித்தும் வைத்தார்.

ஆயினும், இதுவரையில், வட மாநிலங்களில், எந்த ஒரு முதல்வரும், மத்திய அரசுக்கு எதிராக, உண்ணாவிரதமோ, தர்ணா போராட்டமோ, செய்ததாக தகவல் இல்லை.ஜெயலலிதாவுக்கு பிறகு, வட மாநிலங்களின், அரசியல் சரித்திரத்திலேயே, முதன் முறையாக, டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தர்ணா போராட்டத்தில் இறங்கியுள்ளார்.

-  தினமலர்


Monday, January 20, 2014

எந்தச் சூழலில் தூக்கு தண்டனை ரத்து ஆகும்?

கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்தியதால், வீரப்பன் கூட்டாளிகள் நால்வர் உள்பட 15 பேரின் தூக்கு தண்டனை உச்ச நீதிமன்றம் இன்று ரத்து செய்தது.

மரண தண்டனை நிறைவேற்றம் தொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.சதாசிவம் தலைமையிலான அமர்வின் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளவை:

* கருணை மனுவை நிராகரிக்க காலம் தாழ்த்துவது தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பதற்கு, தக்க அடித்தளத்தை ஏற்படுத்தித் தரும்.

* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நபர், மன நலம் குன்றியவராக இருந்தாலோ அல்லது அவர் மனச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்ற முடியாது. எனவே அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுளாக குறைக்கலாம்.

* தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளையும், இதர கைதிகளையும் தனிமைச் சிறையில் அடைத்து வைப்பது அரசியலமைப்புக்கு எதிரானது.

* தூக்கு தண்டனை கைதியின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட 14 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும்.

* தூக்கு தண்ட்னை கைதியின் கருணை மனு குடியரசுத் தலைவராலோ அல்லது ஆளுநராலோ நிராகரிக்கப்படும் பட்சத்தில், அந்த விபரம் குறித்த தகவல் உடனடியாக சம்பந்தப்பட்டவரின் குடும்பத்திற்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

* காலம் கடந்து கருணை மனு நிராகரிக்கப்பட்டதன் அடிப்படையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

* தூக்கு தண்டனை கைதிக்கு தண்டனை நிறைவேற்றப்படும் முன்னர் அவரது குடும்பத்தினரை சந்திக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.

இவ்வாறு உச்ச நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவர் தூக்கு தண்டனையும் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட சாத்தியம் உள்ளது என செய்தித் தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன. 

தி இந்து 


ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை


ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்று வருகிறது.

ஆனந்த்நாக் மாவட்டத்தின் சாம்ஸ்போரா என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் தீவிரவாதிகள் தேடும் பணியில் ஈடுபட்ட போது மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். தொடர்ந்து பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி சூடு நடத்தினர். இரு தரப்பினர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது என்று காவல்துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல் சம்பவத்தில் யாரும் காயம் அடைந்தனரா என்பது குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை என்று அவர் கூறியுள்ளார். 

செய்தி : தினத்தந்தி 

சுனந்தா புஷ்கர் சொத்தின்மதிப்பு 112 - கோடி : கணவர் சசி தரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை


சுனந்தா புஷ்கர் மரணம் கணவர் சசி தரூர் உள்பட 8 பேரிடம் விசாரணை

மத்திய மந்திரி சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர்  கடந்த 17-ந் தேதி டெல்லியில் உள்ள லீலாபெலஸ் நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார்.

பாகிஸ்தான் பெண் பத்திரிகையாளர் மெஹர் தராருக்கும், சசிதரூருக்கும் தொடர்பு இருப்பதாக சுனந்தா குற்றம் சாட்டி இருந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் சுனந்தாவின் திடீர் மரணம் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

இதனால் சுனந்தாவின் மரணத்திற்கு என்ன காரணம் என்ன என்பது சந்தேகங்கள் எழுந்தன.சுனந்தாவுக்கு இயற்கைக்கு மாறாக திடீர் மரணம் ஏற்பட்டுள்ளது என்று டாக்டர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். அவரது உடலில் சிறு காயங்கள் இருப்பதாகவும் டாக்டர்கள் கூறி இருந்தனர். 

இன்று சுனந்தாவின் பிரேத பரிசோதனை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.அவர் 30க்கும் அதிகமாக மனநல சிகிச்சை மாத்திரையை சாப்பிட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.சுனந்தா பிணமாக கிடந்த ஓட்டல் அறையில் தூக்க மாத்திரை பாடில் கிடைத் துள்ளது. எனவே அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டிருப்து உறுதியாகி உள்ளதாக போலீ சார் தெரிவித்தனர்.

சுனந்தாவின் மரணம் குறித்து துணை ஆட்சியர் விசாரணை நடத்தி வருகிறார். சசிதரூரிடம் துணை ஆட்சியர் அசோக்சர்மா விசாரணை நடத்தி வருகிறார்.
சுனந்தா மரணம் குறித்து சசிதரூர்  உள்பட , சுனந்தாவின் மகன், சகோதரர் மற்றும் 5 பணியாளர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சுனந்தாவின் சகோதரர் நளினிசிங் தனது சகோதரியை அவர் இறக்கும் முன்பு சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். அப்போது சுனந்தா மிகவும் விரக்தியுடன் காணப்பட்டதாகவும் தெரிவித்து இருக்கிறார். சசிதரூரின் அந்தரங்க உதவியாளர் அபினவ்குமார், ஓட்டலில் சுனந்தாவுக்கு உதவியாளராக இருந்த நாராயணசுவாமி ஆகி யோரும் தங்களுக்கு தெரிந்த பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளனர். சசிதரூர் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

மத்திய மந்திரிகளின் மனைவிகளில் மிகவும் பணக்காரர் சுனந்தா ஆவார். அவரது சொத்து மதிப்பு ரூ.112 கோடியிருக்கும். 2012-13&ம் ஆண்டு சசிதரூர் தாக்கல் செய்த சுனந்தா புஷ்கரின் சொத்து மதிப்பில் இருந்து இதுதெரியவந்தது. துபாயில் அவருக்கு 12 அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளன. இதன் மதிப்பு ரூ. 95 கோடியிருக்கும் இது ரூ.15 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர கனடாவிலும் ரூ.3 கோடிக்கு வீடு உள்ளது. இது ரூ.1.65 கோடிக்கு அடமானம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் ரூ.6 கோடிக்கு தங்க நகைகள், கைக்கடிகாரங்கள் வைத்திருந்தார். வங்கியில் டெபாசிட் செய்தது மற்றும் கையில் வைத்திருந்த மொத்த பணம் ரூ. 7 கோடியாகும்.

இது தவிர  ஜம்மு காஷ்மீரில் ரூ.12 லட்சத்தில் நிலம் இருக்கிறது. ஆனால் சசிதரூரின் சொத்து மதிப்பு ரூ.6.34 கோடிதான்.

சுனந்தாவுக்கு அடுத்தப் படியாக 2-வது இடத்தில் இருப்பவர் பிரபுல்பட்டேல் மனைவி ஆவார்.  தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மத்திய மந்திரியான அவரது மனைவி விர்ஷா பட்டேலின் சொத்து மதிப்பு ரூ. 97 கோடியாகும்.

செய்தி : தினத்தந்தி 

Sunday, January 19, 2014

சுனந்தா மரணம்: விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கத் தயார்

"எனது மனைவி சுனந்தா மரணம் தொடர்பாக நடத்தப்படும் எல்லா விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயாராக உள்ளேன்' என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல் குமார் ஷிண்டேவுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் சசி தரூர் கடிதம் எழுதியுள்ளார்.

 இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

 "எனது மனைவியை இழந்த சோகத்திலும் துக்கத்திலும் நான் தவித்துவருகிறேன். ஆனால், ஊடகங்களில் எனது மனைவியின் மரணம் தொடர்பாக பலவிதமான ஊகச் செய்திகள் வெளிவந்துள்ளன. அவற்றைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளேன். ஆகவே, எனது மனைவி மரணம் தொடர்பாக சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து விசாரிக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். அப்போதுதான் விரைவிலேயே உண்மை தெரியவரும். சுனந்தா மரணம் தொடர்பான எல்லா விசாரணைக்கும் எனது முழு ஒத்துழைப்பை அளிக்கத் தயாராக உள்ளேன்' என்று கடிதத்தில் சசி தரூர் குறிப்பிட்டுள்ளார்.

 ஆர்டிஓ விசாரணை: இதற்கிடையே, சுனந்தா மரணம் தொடர்பாக சசி தரூரிடம் உதவி கோட்டாட்சியர் அலோக் சர்மா ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினார்.  அப்போது சசி தரூர் தனது தரப்பு வாக்குமூலத்தை அளித்தார்.

 ஏற்கெனவே சனிக்கிழமை அதிகாலையில் சசி தரூரிடம் உதவி கோட்டாட்சியர் விசாரணை நடத்தினார். ஆனால், மிகவும் சோகத்துடன் காணப்பட்ட சசி தரூர், வெள்ளிக்கிழமை இரவு நெஞ்சு வலி ஏற்பட்டதாகக் கூறி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சனிக்கிழமை காலையில்தான் வீடு திரும்பினார். இதனால், அவரது வாக்குமூலத்தை ஞாயிற்றுக்கிழமை காலையில் உதவி கோட்டாட்சியர் பதிவு செய்தார்.

 மத்திய இணை அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா, தில்லி சாணக்கியபுரியில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தபோது, வெள்ளிக்கிழமை இரவில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, அவரது உடலை போலீஸார் கைப்பற்றி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அவரது மரணம் இயற்கையானதல்ல என்று பிரேத பரிசோதனையின்போது தெரியவந்தது. திருமணமாகி இரண்டு ஆண்டுகளுக்குள்ளாக சுனந்தா மரணம் அடைந்ததால், அச் சம்பவம் தொடர்பாக ஆர்டிஓ விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது.

 "சுனந்தாவின் உடலில் சில காயங்கள் உள்ளன. அவரது மரணம் இயற்கைக்கு மாறானது; திடீரென நிகழ்ந்துள்ளது' என பிரதே பரிசோதனை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.                                                     

செய்தி  தினமணி : 

ரூ.90 திருடியதற்காகக் கைதானவர் 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுவிப்பு

ரூ.90 திருடியதற்காக 7 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நபரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லி உயர்நீதிமன்றம் விடுவித்துள்ளது.

வேறு ஒருவருக்குப் பதிலாக இவர் தவறாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் வாய்ப்பை மறுப்பதற்கில்லை என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

தில்லியைச் சேர்ந்த காலித் குரேஷி என்பவரும் அவரது கூட்டாளி ஜீது சௌத்ரியும் 1999ஆம் ஆண்டில் இரண்டு பேரிடம் 90 ரூபாயைத் திருடியதாக போலீஸார் கைது செய்தனர்.

இவ்வழக்கில் காலித் குரேஷி குற்றவாளி என்று தில்லி நீதிமன்றம் 2001 ஏப்ரல் 9ஆம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 அபராதமும் விதித்தது.

இதை எதிர்த்து காலித் குரேஷி, தில்லி உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.

அதை விசாரித்த நீதிபதி எஸ்.பி.கர்க் தலைமையிலான அமர்வு, இவ்வழக்கில் இருந்து குரேஷியை விடுவித்து தீர்ப்பளித்தது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறியிருப்பதாவது:

இவ்வழக்கில் அரசுத் தரப்பு, தகவல்களைச் சரியான விதத்தில் சமர்ப்பிக்கவில்லை. இந்தப் புலன்விசாரணையின் எந்தக் கட்டத்திலும் சுதந்திரமான சாட்சிகள் யாரிடமும் வாக்குமூலம் பெறப்படவில்லை. குற்றம் நடைபெற்ற இடத்தில் காலித் குரேஷி கைது செய்யப்படவில்லை. மாறாக, சம்பவத்துக்குப் பிறகு ஒன்று அல்லது 2 மணிநேரம் கழித்தே கைது செய்யப்பட்டுள்ளார் என்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.          

செய்தி : தினமணி 

Saturday, January 18, 2014

சுனந்தாவின் மரணம் இயற்கைக்கு மாறானது: எய்ம்ஸ் டாக்டர் தகவல்

மத்திய மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் நேற்று மாலை மர்மமான முறையில் இறந்தார். டெல்லியில் அவர் தங்கியிருந்த ஐந்து நட்சத்திர ஓட்டலில் அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது மறைவையடுத்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சசி தரூர் எய்ஸ்ம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

இதற்கிடையே சுனந்தாவின் உடல் இன்று எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவரது சாவு இயற்கைக்கு மாறானது என்பது தெரியவந்துள்ளது.

எதிர்பாராத, இயற்கைக்கு மாறான முறையில் சுனந்தா மரணம் அடைந்திருப்பதாகவும், அவரது உடலில் காயங்கள் இருப்பதாகவும் தடய அறிவியல் துறை தலைவர் டாக்டர் குப்தா தெரிவித்தனர். இந்த காயம் காரணமாக அவர் இறந்திருக்கலாம், அல்லது வேறு காரணம் இருக்கலாம் என்று கூறிய குப்தா, மற்ற விவரங்களை தெரிவிக்கவில்லை. முழு பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாக இரண்டு மூன்று நாட்கள் ஆகும் என தெரிகிறது. அதேசமயம் முதற்கட்ட பிரேத பரிசோதனை அறிக்கை விரைவில் நீதிபதியிடம் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுனந்தாவின் உடல் சசிதரூரிடம் ஒப்படைக்கப்பட்டு, டெல்லி லோதி சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு அவரது குடும்பத்தினர் உறவினர்கள் அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் மாலையில் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது..

செய்தி : மாலைமலர்

Saturday, January 11, 2014

மணிப்பூரில் பாதுகாப்பு படை-போராளிகள் கடும் துப்பாக்கி சண்டை



மணிப்பூர் மாநிலம் டாமங்லாங் மாவட்டத்தில் உள்ள கெம்ஜி மலைப்பகுதியில் நுழைந்த ஜெலியங்ராங் ஐக்கிய முன்னணி போராளிகள் அப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயற்சிப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று மாலை அசாம் ரைபிள் பிரிவு மற்றும் 9-வது டோக்ரா படைப்பிரிவு போலீசார் அங்கு விரைந்து சுற்றி வளைத்தனர்.

அப்போது போலீசாரை நோக்கி போராளிகள் தாக்கத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் திருப்பி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து இரு தரப்பினருக்குமிடையே பல மணி நேரம் கடும் சண்டை நடந்தது. அதிகாலை வரை நடந்த இந்த சண்டையில் உயிரிழப்பு, காயம் பற்றிய தகவல் வெளியாகவில்லை.

அதேசமயம் இதே மாவட்டத்தில் ஈராங் என்ற இடத்தில், மத்திய ரிசர்வ் படை போலீசாரை குறிவைத்து போராளிகள் சக்திவாய்ந்த வெடிகுண்டை வீசி தாக்கியது குறிப்பிடத்தக்கது.                                                                                                      

செய்தி : மாலை மலர் 



பழங்கால திபெத்திய நகரம் தீக்கிரையானது


சீனாவில் பழங்கால திபெத்திய நகரம் தீக்கிரையானது 

சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் அமைந்துள்ள புராண கால பெருமை கொண்ட திபெத்தியன் நகரம் சுமார் 10 மணி நேரம் கொளுந்து விட்டு எரிந்த தீக்கு இரையானது.

சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வரும் இப்பகுதியில் தீ விபத்து நேரிட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. இவ்விபத்தில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.                                                                

செய்தி : தினமணி 

Thursday, January 9, 2014

காஷ்மீர்: மாச்சில் பகுதியில் பனிப்பாறை சரிந்ததில் ராணுவ வீரர் பலி



காஷ்மீரில் பனிப்பாறை சரிந்ததில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளார். காஷ்மீரின் மாச்சில் பகுதியில் பனிச்சரிவு அதிகமாக உள்ளது. இதில் சிக்கி ஒரு ராணுவ வீரர் பலியாகியுள்ளார் என்று பாதுகாப்பு துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

 காஷ்மீர் மாநிலம் முழுவதும் கடுமையான பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. சில பகுதிகளுக்கு பனிச்சரிவு அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.                             

செய்தி : தினத்தந்தி

மனைவியுடன் மாவோயிஸ்ட் சரண்


சத்தீஸ்கர் மாநில மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்களில் ஒருவரான குட்சா உஷென்டி என்றழைக்கப்படும் ஜி.வி.கே.பிரசாத் அவரது மனைவியுடன் ஆந்திர மாநில போலீஸாரிடம் புதன்கிழமை சரணடைந்தார்.

நக்சல் செயல்களில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வந்த குட்சா உஷென்டி குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ. 20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று போலீஸார் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், குட்சா உஷென்டி அவரது மனைவியுடன் சரணடைந்துள்ளார். மாவோயிஸ்ட்டு சிறப்பு மண்டல குழுவின் செய்தித் தொடர்பாளராகவும், உயர்மட்டக் குழு உறுப்பினராகவும் பிரசாத் இருந்து வந்தாக கூறப்படுகிறது.     

செய்தி : தினமணி 

நடிகை ராதா புகார் வழக்கு :தொழில் அதிபர் பைசூலின் 4–வது முன்ஜாமீன் மனுவும் தள்ளுபடி

சுந்தரா டிராவல்ஸ்' படத்தில் அறிமுகமான நடிகை ராதா திருவல்லிக்கேணி தொழில் அதிபர் பைசூல் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் பைசூல் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி ‘செக்ஸ்’ உறவு வைத்துக் கொண்டார் என்றும், ரூ.50 லட்சம் பணத்தையும் மோசடி செய்து விட்டார் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பாக வடபழனி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தலைமறைவாக இருந்த பைசூலை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் 3 முறை கோர்ட்டில் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானது.

இதனால் எந்த நேரத்திலும் பைசூல் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இதற்கிடையே பைசூல் மீது பரபரப்பான குற்றச்சாட்டுகளை கூறி வந்த ராதா, யாரும் எதிர்பார்க்காத வகையில் மனம் மாறி தனது புகார் மனுவை வாபஸ் பெற்றார். இதுபற்றி அவரிடம் கேட்ட போது, ‘‘என்னதான் இருந்தாலும் பைசூல் எனது கணவர்தானே எத்தனை நாள்தான் அவர் ஓடி ஒளிவார் என்று விளக்கம் அளித்தார்.


இதனால் ராதா–பைசூல் விவகாரம் முடிவுக்கு வந்தது போல தெரிந்தது. இதன் பிறகு 2 நாட்கள் ராதாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. புகார் மனுவை வாபஸ் பெற்றவுடன் அவர் பைசூலுடன் போய் சேர்ந்து கொண்டார்.

இதன்பிறகு திடீரென ஒரு நாள், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்துக்கு தனது வக்கீல் அனந்தகுமாருடன் ராதா மீண்டும் வந்தார். அப்போது அவர், என்னை மிரட்டி புகார் மனுவை வாபஸ் பெறச் செய்தனர் என்னை தனி அறையில் அடைத்து வைத்து பைசூல் தன்னை சித்ரவதை செய்ததுடன், செல்போனையும் உடைத்துப் போட்டு விட்டார் என்று பரபரப்பான புதிய குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் ராதா–பைசூல் பிரச்சினை சிக்கலானது. இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்தது.

இதையடுத்து 4–வது முறையாக பைசூல் கோர்ட்டில் முன்ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். அதுவும் தள்ளுபடியானது.

போலீஸ் பிடியில் சிக்காமல் இருப்பதற்காக பைசூல் தொடர்ந்து தலை மறைவாகவே இருந்து வருகிறார். வழக்கமாக கோர்ட்டில் முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியானதும் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்ய போலீசார் வேகம் காட்டுவார்கள்.

ஆனால் 4 முறை முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியான பின்னரும், பைசூல் கைது செய்யப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை கிளப்பியிருக்கிறது. இதனை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராதா, போலீஸ் மீது குற்றச்சாட்டுகளை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. போலீசார் கண்ணை மறைத்து விட்டு இத்தனை நாளும் பைசூல் எங்கிருக்கிறார் என்பது மர்மமாகவே உள்ளது.

இது தொடர்பாக தி.நகர் துணை கமிஷனர் பகலவனிடம் கேட்ட போது, ராதா கொடுத்த புகாரின் அடிப்படையில் பைசூலை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். அவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை. பைசூலை பிடிப்பதற்காக 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றார்.                                                                                 

செய்தி : மாலைமலர் 

நீளமான கால்களுக்கான பட்டம் வென்ற பெண்

மிஸ் நீளமான கால்கள் பட்டத்தை வென்றார் சைபீரிய பெண் 

42 இஞ்ச் ஊசி போன்ற கால்களை கொண்ட சைபீரிய பெண் மிஸ் நீளமான கால்கள் பட்டத்தை ரஷ்யாவில் வென்றுள்ளார்.

இந்த போட்டியில் மொத்தம் 52 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் 18 வயதான பயிற்சி வழக்கறிஞர் அனாஸ்தாசியா பட்டம் வென்றுள்ளார் என்று செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த 18 வயது பெண் 1,600 பவுண்ட் பரிசு பெற்றுள்ளார். பரிசு தொகையின் ஒரு பகுதியைத் தொண்டு நிறுவனத்திற்கு உதவியாக அளிக்கிறேன் என்று அனாஸ்தாசியா உறுதி அளித்துள்ளார். மேலும், தனது பெற்றோர்களுக்குக் கிப்ட் பொருட்கள் வாங்கிக் கொடுப்பேன் என்று கூறியுள்ளார்.

அனாஸ்தாசியா நோவஸிபிர்ஸ்க் இன்ஸ்டியூட்டில் சட்டப்படிப்பு படித்து வருகிறார். தனது முழுக்கவனத்தையும் படிப்பிலே செலுத்தஉள்ளதாகவும், மாடலிங்துறை வாய்ப்புகளால் எனதுகவனம் திசைதிரும்பாது என்றும் அவர் கூறியுள்ளார்.                                                                                                                                      

செய்தி : தினத்தந்தி

பலமாக விட்டதோ கொட்டாவி ; கிழிந்ததோ நுரையீரல்

சீனாவில், பலமாகக் கொட்டாவி விட்ட, இளைஞரின் நுரையீரல் கிழிந்தது. 

சீனாவின், ஹீபி மாகாணத்தைச் சேர்ந்தவர், ஓயூ, 26. சில நாட்களுக்கு முன், காலையில் எழுந்ததும், பலத்த கொட்டாவி விட்டார். அதன் பின், அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டது. எனினும், அதைப் பொருட்படுத்தாமல், தொடர்ந்து தன் பணிகளில் கவனம் செலுத்தியுள்ளார். 

இந்நிலையில் ஓயூவுக்குத் தீடீரென, மூச்சுத் திணறல் ஏற்பட்டு, அவரால் சுவாசிக்க முடியாமல் போனது. இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், ஓயூவின் நுரையீரலின், காற்றுப்பை கிழிந்து, துளை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர். இதனால், காற்றுப்பையிலிருந்து வெளியேறும் காற்று, உடலின் மற்ற பாகங்களுக்குச் செல்வதால், அவருடைய நுரையீரல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வ௦ருகிறது.

செய்தி : தினமலர் 

16 வயதில் குழந்தை பெற்ற மாணவி,: ஜன்னல் மூலம் வீசிக் கொலை செய்தார்




ஆந்திர பிரதேசத்தில் உள்ள நிஜாமாபாத் மாவட்டத்தில் 16 வயது பள்ளி மாணவி குழந்தை பெற்றார். பின்னர், மாணவி ஜன்னலில் இருந்து குழந்தையை வீசியெறிந்ததில் அது இறந்துவிட்டது.

ஒரு அரசு பெண்கள் உறைவிடப்பள்ளியில் தங்கி படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவி, செய்யாய்கிழமை அதிகாலை குழந்தை பெற்றெடுத்தார். எனினும், பீதியடைந்த அந்த மாணவி, விடுதி கழிவறையின் ஜன்னலில் இருந்து குழந்தையைக் கீழேதூக்கியெறிந்தார். அக்குழந்தையை பள்ளி ஊழியர்கள் கண்டெடுத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அதுஇறந்துவிட்டது.

'முதல்கட்ட விசாரணையில், அந்த மாணவியின் அத்தைமகனுடன் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஆண்டு விடுமுறைக்கு பிட்லம் மண்டலில் உள்ள தனது வீட்டிற்குச் சென்றிருந்த மாணவி, அத்தை மகனுடன் உறவு கொண்டார். அதனால் அவர் கர்ப்பம் அடைந்தார்' என்று காவல்துறை தெரிவிக்கிறது.

மீண்டும் பள்ளிக்கு வந்த மாணவி, தனது ஆசிரியர்களிடம் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார். ஆனால் தனது கர்ப்பத்தை மறைத்துள்ளார். உடல்நலத்தை மருத்துவ ஊழியர்கள் சோதனை செய்வதும் நடைபெறவில்லை என்பது கவனிக்கத்தக்கது' என்று மேலும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

சிகிச்சைக்காக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவி மீது, குழந்தை பிறப்பைத் தடுப்பது அல்லது பிறந்த குழந்தையைக் கொல்வது என்ற குற்றத்திற்காக, இந்திய தண்டனைச் சட்டத்தின் 315ஆவது பிரிவின் கீழ் காவல்துறையினர் புகார் ஒன்றைப் பதிவு செய்துள்ளனர். 

மேலும், அவரது அத்தைமகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவரைக் கைதுசெய்வதற்கான முயற்சிகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.                                                                                                                                     
வெப்துனியா 

Wednesday, January 8, 2014

நாய் விழுங்கிய மோதிரத்தின் மதிப்பு 18,00,000 ரூபாய்

இங்கிலாந்தை சேர்ந்த ஒரு பெண்ணின் விலையுயர்ந்த திருமண வைர மோதிரத்தை அவருடைய செல்ல நாய் விழுங்கிய சம்பவம் நடந்துள்ளது. 

இங்கிலாந்தில் உள்ள டேவன் நகரை சேர்ந்த பெண் ஏஞ்சி கோலின்ஸ். இவருக்கு வயது 51. இவர் தனது வீட்டில் ஜாக் என்ற நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். 

இந்நிலையில் ஒரு நாள் தனது விரலில் இருந்த திருமண வைர மோதிரத்தை, மேசையின் மேல் வைத்துவிட்டு சமையலறைக்கு சென்று கைகளைச்  சுத்தம் செய்துவிட்டு திரும்பிய ஏஞ்சிக்கு அதிர்சசி காத்திருந்தது. 

மேசையின் மீது இருந்த வைர மோதிரத்தை அவருடைய செல்ல நாய் ஜாக் வாயில் கவ்வியிருந்தது. இவர் நாயருகே செல்வதற்கு முன் அது மோதிரத்தை விழுங்கிவிட்டது.

இதனால் பதற்றம் அடைந்த அப்பெண் உடனடியாக நாயை தூக்கிக்கொண்டு கால்நடை மருத்துவமனைக்கு சென்றார். அப்போது மருத்துவர், நாயின் வயிற்றில் இருந்து மோதிரத்தை வெளியேற்றுவது கடினம் என தெரிவித்துவிட்டார்.

செல்ல நாயை இழக்க விரும்பாத ஏஞ்சி, சில நாட்கள் கழித்து நாயின் கழிவுகளைச் சுத்தம் செய்யும்போது மோதிரத்தை கண்டுபிடித்தார். அவர் தொலைத்த மோதிரத்தின் விலை 18,000 பவுண்டுகள்  -இந்திய மதிப்பில் சுமார் 18,00,000 ரூபாய் -  என்பது குறிப்பிடத்தக்கது.                                                                         

செய்தி : வெப்துனியா 

Tuesday, January 7, 2014

2013 – ஓர் பார்வை


டிசம்பர் 21, 2012 உலகம் அழிந்து விடும் என்ற மூட நம்பிக்கையை தகர்த்து எறிந்து, வெற்றிகரமாக 2013ம் ஆண்டையும் நிறைவு செய்து விட்டோம்.
இந்த ஆண்டில் ஏராளமான வளர்ச்சிகளை சந்தித்திருந்தாலும், உலகையே உலுக்கும் வண்ணம் நிகழ்வுகள் நடந்து கொண்டு தான் இருந்தன. தொழில்நுட்ப வளர்ச்சியில் மனிதர்கள் அதி உச்சத்தை அடைந்து கொண்டிருந்தனர் என்றே சொல்லலாம்.


புத்தாண்டில் நிகழ்ந்த சோகம்

ஜனவரி 01: புத்தாண்டு என்றாலே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் தான். உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் வானவேடிக்கைகளுடனும், இசை நிகழ்ச்சிகளுடனும் புத்தாண்டை வரவேற்கின்றனர். இவ்வாறு ஐவரி கோஸ்டில் நடந்த நிகழ்வு ஒன்று, சந்தோஷத்தை சோகமாக மாற்றியது.
மைதானத்தில் கூடியிருந்த மக்கள் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு முண்டியடித்துக் கொண்டு செல்கையில், 60 பேர் பலியானதுடன், 200 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த சோகம்: 60 பேர் பலி

பரபரப்பை ஏற்படுத்திய மர்ம உருண்டைகள்

பிப்ரவரி 05: அரிசோனா பாலைவனப் பகுதி மட்டுமல்லாது, உலகத்தையே அதிர வைத்தது மர்ம உருண்டைகள். பார்ப்பதற்கு ஊதா நிறத்தில் பளிங்கு உருண்டைகள் போல காட்சியளித்தன. இவற்றை பிழியும் போது நீர்போன்ற திரவம் அதனுள்ளிருந்து வெளியானதாக இதனை கண்டறிந்த ஜெரடைன்  என்ற பெண் தெரிவித்திருந்தார்.
அரிசோனா பாலைவனத்தில் மர்ம உருண்டைகள்

புதிய போப்

120 கோடி கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைவராக இருந்த போப் 16-ம் பெனடிக்ட், முதுமை காரணமாக பிப்ரவரி மாதம் 28ம் திகதி தனது பதவியை துறந்தார். இதனை தொடர்ந்து புதிய போப் ஆண்டவராக அர்ஜென்டினாவின் பியுனோஸ் ஏரெஸ் நகர் ஆர்ச் பிஷப் ஜார்ஜ் மரியோ பெர்கோக்லியோ தெரிவு செய்யப்பட்டார்.
இவர் முதலாம் பிரான்சிஸ் என்ற பெயரை தெரிவு செய்ததையடுத்து, போப் முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படுகிறார். பதவியேற்றவுடன், அங்கிருந்த மக்களுக்கு நன்றிகூறி, அன்பும் சகோரத்துவமும் வளர உலகம் வழிகாண வேண்டும் என கேட்டுக் கொண்டார். முதலாம் பிரான்சிஸ் என அழைக்கப்படவுள்ளார் புதிய போப்

அமெரிக்காவை உலுக்கிய பொஸ்டன் குண்டுவெடிப்பு

ஏப்ரல் 15: மக்கள் மிக உற்சாகமாகவும், ஆர்வமாகவும் கலந்து கொள்ளும் பழமையான மரதன் போட்டி தான் பொஸ்டன் மரதன். வருடந்தோறும் ஏப்ரல் மாதம் மூன்றாம் திங்களன்று நடைபெறும் இப்போட்டியில், இந்தாண்டும் 27,000 மக்கள் கலந்து கொண்டனர். ஆனால் எதிர்பாராத நிகழ்வு அனைவரையும் உலுக்கியது, ஆம் குண்டுவெடிப்பு. இதில் மொத்தம் 5 பேர் பலியானதுடன், 280 பேர் படுகாயம் அடைந்தனர். ஆசை, கனவுகள் அனைத்தும் சுக்குநூறாக சிதறி இரத்தக்காடாக காட்சியளித்தது.
அமெரிக்கா பொஸ்டன் மரதன் போட்டியில் பயங்கர குண்டுவெடிப்பு

வங்கதேசத்தை மிரள வைத்த கட்டிட விபத்து

ஏப்ரல் 24: வழக்கம் போல் 8 மாடியில் மிக பிரம்மாண்டமாய் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது ராணா பிளாசா. அன்றைய தினத்தை யாருமே எதிர்பார்த்திருக்க மாட்டார்கள், திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள்ளாகவே, நூற்றுக்கணக்கான மக்கள் இறந்து கிடந்தனர். உடனடியாக விரைந்து வந்த மீட்பு படையினர் துரிதமாக செயல்பட்டு இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டாலும், 1129 பேர் பரிதாபமாக பலியாகினர்.
வங்கதேச கட்டிட விபத்து

மரணத்தை எதிர்த்து போராடிய வீரப் பெண்மணி

ஜீலை 12: பாகிஸ்தானில் பெண் குழந்தைகளின் கல்விக்காக போராடி, தலிபான்களின் துப்பாக்கி சூட்டுக்கு ஆளாகி, மீண்டும் உயிர் பெற்று கம்பீரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார் மலாலா. என்னதான் மிரட்டல்கள் வந்தாலும், கல்விக்காக போராடும் மலாலாவை தேடி விருதுகள் குவிந்த வண்ணம் உள்ளது.
இவரது பிறந்தநாளான ஜீலை 12ம் திகதியை மலாலா தினமாக அறிவித்து ஐ.நா கௌரவப்படுத்தியது. சுருக்கமாக, மரணத்தின் வாசலுக்கே சென்று திரும்பி வந்தவர் என்று தான் சொல்ல வேண்டும்

கடவுள் எனக்கு கொடுத்த இரண்டாவது வாழ்க்கை – முதன்முறையாக மலாலா பேட்டி

“தீவிரவாதிகள் பயப்படுகின்றனர்” ஐ.நா சபையில் மலாலா பேச்சு

சொர்க்கத்தில் அவதரித்த குட்டி இளவரசர்

ஜீலை 22: பிரிட்டன் இளவரசர் வில்லியமின் மனைவி கேட் மிடில்டன் கர்ப்பமாக இருந்ததில் இருந்தே, என்ன குழந்தை பிறக்கும் என்றெல்லாம் சூதாட்டம் களைகட்டியது.
ராஜகுடும்பம் மட்டுமின்றி, மக்கள் அனைவரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்க, ஜீலை மாதம் 22ம் திகதி அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
பிரித்தானியாவை வருங்காலத்தில் ஆளப்போகும் குட்டி இளவரசருக்கு ஜார்ஜ் அலெக்ஸாண்டர் லூயிஸ் என பெயர் சூட்டி மகிழ்ந்தனர், உலகம் முழுவதிலும் இளவரசருக்கு பரிசுகள் வந்து குவிந்த வண்ணம் இருந்தன.

ஜார்ஜ் என்ற பெயரை கொண்டு அழகான பொம்மைகள் கடைகளை அலங்கரித்தன, கணனி வைரசே உலா வர ஆரம்பித்து விட்டது என்றால் பாருங்களேன்.
அழகான ஆண் குழந்தை பெற்றெடுத்தார் இளவரசர் வில்லியம் மனைவி கேத் இவர்கள் செய்த பாவம் தான் என்ன ?

ஆகஸ்ட் 21: கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆரம்பமான போராட்டம் இன்றும் முடியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.. இதில் லட்சக்கணக்கான மக்கள் பலியாகி இருப்பதுடன், மில்லியன் கணக்கானவர்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். குறிப்பாக ஆகஸ்ட் மாதம் 21ம் திகதி இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதில், ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் உறங்கி கொண்டிருக்கும் போதே பலியாயினர். இதற்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்பு தெரிவித்தன, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போர் தொடுக்க தயாராக இருந்தன. இதற்கிடையே இரசாயன ஆயுதங்களை அழிக்க சிரியா சம்மதம் தெரிவித்ததால், மாபெரும் போர் தவிர்க்கப்பட்டது. இதற்கு ரஷ்யா தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரத்த காடாக மாறிய சிரியா: 46,000 பேர் பலி

சிரியாவில் இரசாயனக் குண்டு தாக்குதல்! தூக்கத்திலேயே பலியான அப்பாவிகள்

சிரிய இரசாயன தாக்குதல்: அமெரிக்கா - ரஷியா ஒப்பந்தம்

கென்யா வெஸ்டர்மால் தாக்குதல்

செப்டம்பர் 21: கென்யாவின் நைரோபியில் உள்ள வெஸ்ட் கேட் என்ற மாலுக்குள் புகுந்த தீவிரவாதிகள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவத்தில் 72 பேர் பலியானதுடன், கென்யா மட்டுமல்லாது உலக நாடுகளையும் நிலைகுலையச் செய்தது. தகவல் அறிந்த சென்ற இராணுவப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் சண்டை மூண்டது. இதனை நடத்தியது முஜாஹிதின் என்ற தீவிரவாத அமைப்பே. சோமாலியாவில் கென்ய படையினர் நடத்திய தாக்குதலுக்கு பழிக்குப்பழியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்தனர்.

கென்யாவில் தீவிரவாதிகள் தாக்குதல்: பலி எண்ணிக்கை உயர்வு

பாகிஸ்தானை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்

செப்டம்பர் 24: பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தையே நிலைகுலையச் செய்தது மிக மோசமான நிலநடுக்கம். 7.7 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி மிக சக்திவாய்ந்த அளவில் ஏற்பட்டதால், கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. இதில் 825 பேர் பலியானார்கள், 700 பேர் படுகாயம் அடைந்தனர். சரியான பாதை இல்லாமல் மீட்புப் பணிகள் தாமதமாகின, லட்சக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டார்கள்.. இதனைத்  தொடர்ந்து குவாடர் துறைமுகத்துக்கு அப்பால் கரையோரப்பகுதியில் சிறிய தீவு ஒன்றும் உருவானது.

பாகிஸ்தானில் பூமியதிர்வு

அதிர்ந்து போன பிலிப்பைன்ஸ்

நவம்பர் 09, அக்டோபர் 15: பிலிப்பைன்சை இந்த ஆண்டு இரண்டு இயற்கைச் சீற்றங்கள் ஆட்டம் காண வைத்தன. முதலில் நிலநடுக்கம் அதிலிருந்து மீண்டு வருவதற்குள் புயல்.பிலிப்பைன்சின் மத்தியப் பகுதியில் அமைந்திருக்கும் போஹோல் தீவில், அக்டோபர் 15ம் திகதி கார்மன் நகரில் நிலநடுக்கம் வந்தபோது காலை 8:12 மணி.
ரிக்டர் அளவுகோலில் 7.2 அலகுகளாகப் பதிவான இந்நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் நொறுங்கின, சாலைகள் சேதம் அடைந்தன, பாலங்கள் இடிந்து விழுந்தன.
பெரும் உயிர்ச்சேதம் தடுக்கப்பட்டாலும், 222 பேர் பலியானார்கள், 976 பேர் காயமடைந்தார்கள். இதிலிருந்து மீண்டு வருவதற்குள், நவம்பர் 09ம் திகதி ஹையான் புயலை நாட்டையே புரட்டி போட்டது. 6,009 மக்களின் உயிரை காவு வாங்கிச் சென்றது, எங்கு பார்த்தாலும் பிணக்குவியலும், அழுகுரலுமாக  இருந்தன.

பிலிப்பைன்சில் இன்று பயங்கர நிலநடுக்கம்

பிலிப்பைன்சை புரட்டி போட்ட புயல்

காலத்தால் அழியாத கறுப்பு மலர்

டிசம்பர் 05: தென் ஆப்ரிக்கா மட்டுமல்லாது உலக நாடுகளில் உள்ள மக்கள் அனைவராலும் விரும்பப்படும் மகத்தான தலைவர் நெல்சன் மண்டேலா. இவர் டிசம்பர் மாதம் 5ம் திகதி உள்ளூர் நேரப்படி இரவு 8.50 மணிக்கு காலமானார்.

உலக மக்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது இவரது மரணம், அன்னாரது உடல் சொந்த கிராமமான குனு என்ற கிராமத்தில், ராணுவ குண்டுகள் முழங்க, குடும்பத்தினரின் பாரம்பரிய சடங்குகளுடன் 15ம் திகதி அடக்கம் செய்யப்பட்டது

“ஒரு உயிர் எப்போது விடுதலை பெறுகிறதோ அப்போதுதான் அது மனிதனாகிறது. விடுதலையை யாராலும் கொடுக்க முடியாது, போராடித்தான் பெற்றாக வேண்டும்” என்ற வைர வரிகள் அவரது மறைவுக்குப் பின்னும் ஓங்கி ஒலித்துக் கொண்டு தான் இருக்கின்றது.

விடுதலைப் போராட்ட வீரர் நெல்சன் மண்டேலா காலமானார் நெல்சன் மண்டேலாவின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது

ரகசியமாக உளவு பார்க்கும் அமெரிக்க உலக நாடுகள் பலவற்றையும் குறிப்பாக நட்பு நாடுகளையும் கூட அமெரிக்கா உளவு பார்த்தது அம்பலமானது. இத்தகவல்களை அமெரிக்க உளவுத்துறையில் பணியாற்றிய எட்வர்டு ஸ்னோடென் என்பவர் வெளியிட்டார். எனவே இவரை கைது செய்யும் அபாயம் எழுந்ததால், தற்போது ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ளார். குறிப்பாக ஜேர்மன் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலின் தொலைபேசி அழைப்புகளை 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுக் கேட்டது தெரியவந்தது.
ஏன் இவ்வாறு செய்தது என்பதற்கு பல்வேறு விளக்கங்கள் கொடுத்தாலும், நாடுகளுடனான நட்புறவில் விரிசல் விழும் நிலை அமெரிக்காவுக்கு ஏற்பட்டது.
10 ஆண்டுகளாக ஒட்டுக் கேட்கும் அமெரிக்கா

செவ்வாயில் குடியேற விருப்பமா?

உலக நாடுகள் பலவும் போட்டிக் போட்டுக் கொண்டு செவ்வாய் கிரகத்தை ஆராய்ந்து வருகின்றன. நாசாவால் அனுப்பப்பட்ட கியூரியாசிட்டி என்ற விண்கலம், செவ்வாயில் மலர்கள், நீளமான ஆறு மற்றும் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அறிகுறிகள் இருப்பதை படம் பிடித்து அனுப்பியது. இதற்கிடையே சில நிறுவனங்கள் செவ்வாயில் மக்கள் குடியேறுவதற்கான கவுண்ட் டௌனயும் ஆரம்பித்து விட்டன.

செவ்வாயில் மலர்களா? கியூரியாசிட்டியின் புதிய படம்

செவ்வாய் கிரகத்தில் நீளமான ஆறு கண்டுபிடிப்பு

இதற்கு மத்தியிலும் பல்வேறு அதிசயமான நிகழ்வுகளும் உலகில் நடந்தேறிய வண்ணம் இருந்தன. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்ற பழமொழிக்கு ஏற்றவாறு புத்தாண்டை இனிதே வரவேற்போம்!!!

Last update: 2013-12-28 17:56:50

http://www.newsonews.com/



ரயிலில் தொடரும் தீ விபத்து ; இன்று 2 ரயிலில் தீ: 9 பேர் பலி


 கடந்த 10 நாட்களில் இன்றுடன் 3 வது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து மேலும் தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

கடந்த மகாராஷ்ட்டிராவில் இருந்து பெங்களூரூ சென்ற ரயில், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே விபத்து நடந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் இன்று காலை பந்தராவில் இருந்து டேராடூன் புறப்பட்டு சென்ற ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை அருகே தானே மாவட்டத்தில் தானுரோடு ஸ்டேஷன் அருகே சென்ற போது ரயில் பெட்டியில் தீ பிடித்தது. இதில் 3 பெட்டிகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் கருகி பலியாயினர். பலர் காயமுற்றுள்ளனர். அருகில் உள்ள தானு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். தற்போது ரயிலில் தீ அணைக்கப்பட்டது. ரயில் விபத்து குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே தீ விபத்துக்கான காரணம் தெரிய வரும் என ரயில்வே மண்டல அதிகாரி கூறினார். 

விபத்தில் சிக்கி பலியானவர் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன்கார்கே உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையில் லக்னோவில் ஒரு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

கூடுதல் கவனம் தேவை: ரயிலில் தொடரும் தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட வேண்டும். 

மேலும் ரயிலில் தீ பற்றும் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்ற உத்தரவு முறையாக, கடுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். 

மின்சாதனம் தொடர்பான காரணமாக இருந்தால் ரயில்வே மெக்கானிக் பிரிவு மற்றும் மின் பிரிவு ஊழியர்கள் அனைத்து ரயில்களிலும் முழு அளவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். 

இன்னும் நாம் சுணக்கமாக இருந்தால் விபத்துக்கள் தொடரத்தான் செய்யும்.      
செய்தி : தினமலர் 


காதலிக்கு ஆச்சரியமளிக்கத் திட்டமிட்டு வாஷிங் மெஷினுள் சிக்கிய வினோதம்



ஆஸ்திரேலியாவில் இளைஞர் ஒருவர் காதலி வீடு திரும்பும்போது அவருக்கு அதிர்ச்சி அளிக்க, விளையாட்டுத்தனமாக வாஷிங் மெஷினுள் அமர்ந்திருக்கிறார். 

அவர் அதனுள் சிக்கிக்கொள்ள மீட்பு குழுவினர் அவர் மீது எண்ணெய்யை ஊற்றி அவரை வெளியேற்றிய வினோதம் நடந்துள்ளது. 

வடக்கு மெல்போர்னில் இளைஞர் ஒருவர் தனது காதலிக்காக வீட்டில் காத்திருந்தார். காதலிக்கு அதிர்ச்சி அளிக்க வாஷிங் மெஷினுக்குள் நிர்வாணமாக ஒளிந்து கொண்டுள்ளார். ஆனால், காதலி வீட்டிற்குள் நுழைந்ததும் அவரால் வாஷின் மெஷினிலிருந்து வெளியே வரமுடியவில்லை. 

இதனை அடுத்து அந்நாட்டு தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் மருத்துவ குழுவோடு சம்பவ இடத்திற்கு விரைந்து இளைஞரை மீட்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். 

இளைஞரை மீட்க சரியான வழியை யோசித்த குழுவினர், அவர் மீது ஆலிவ் எண்ணெய்யை ஊற்றி வெளியேற்றினர். இளைஞர் மெஷினிலிருந்து வெளியேறும் வரை அவர் மீது ஆலிவ் எண்ணெய் ஊற்றப்பட்டது. 

பின்னர், அதிலிருந்து வெளியே வந்த அந்த இளைஞர், தான் விளையாட்டுத்தனமாக இவ்வாறு செய்ததாகவும், தன்னால் ஏற்பட்ட தொந்தரவுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.                             

செய்திகள் " வெப்துனியா



Sunday, January 5, 2014

மதுரை அருகே கஞ்சா வியாபாரிகள் மோதல்: இருவர் கொலை

மதுரை அருகே கஞ்சா விற்பதில் இருதரப்பினர் மோதிக்கொண்டதில் சனிக்கிழமை இரவு 2 பேர் கொலை செய்யப்பட்டனர். காயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மதுரை வண்டியூர் யாகப்பாநகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன்கள் செந்தில்பாண்டியன், முருகன். இருவரும் சில்வர் பட்டரை வைத்திருப்பதுடன், கஞ்சா வியாபாரமும் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. மேலும், கடந்த ஆண்டு மே மாதம் கஞ்சா வியாபாரம் குறித்து போலீஸில் புகார் தெரிவித்த வண்டியூர் பகுதியைச் சேர்ந்த மதியழகன் கொலை வழக்கில் செந்தில்பாண்டியன் உள்ளிட்டோருக்கு தொடர்பு இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், வண்டியூர் பகுதியைச் சேர்ந்த அய்யாவு மகன் உதயா என்ற உதயகுமார் (27). இவருக்கு மனைவி, ஒரு குழந்தை உள்ளனர். தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார். உதயா மீது அதே பகுதியைச் சேர்ந்த பார்த்திபன் என்பவரது கொலை உள்ளிட்ட பல வழக்குகள் உள்ளன.

கடந்த சில நாள்களுக்கு முன்பு கருப்பாயூரணி பகுதியில் 26 கிலோ கஞ்சாவை போலீஸார் கைப்பற்றினர். இதுதொடர்பாக உதயா உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிந்தனர். போலீஸாருக்கு தங்களைப் பற்றி செந்தில்பாண்டியனே தகவல் தெரிவித்திருக்கவேண்டும் என உதயா தரப்பினர் நினைத்துள்ளனர்.

இதையடுத்து செந்தில்பாண்டியனை கடந்த டிசம்பரில் ஒரு கும்பல் தாக்கியது. இதில் அவர் பலத்த காயமடைந்தார்.

இந்த வழக்கில் உதயா, முருகன், சோனை, வேலு ஆகியோர் சேர்க்கப்பட்டனர். உதயா, வேலு தலைமறைவாகிவிட்டனர். முருகன், சோனை இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இந்நிலையில், உதயா தரப்பினர் 12 பேர் சனிக்கிழமை இரவு பயங்கர ஆயுதங்களுடன் செந்தில்பாண்டியனின் சில்வர் பட்டரைக்கு சென்றுள்ளனர். அங்கு வெளியே நின்றிருந்த திருவாதவூரைச் சேர்ந்த கண்ணன் என்ற கருங்காலிக் கண்ணன் (39) என்பவரை வெட்டியுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே கண்ணன் உயிரிழந்தார். மேலும், அங்கு பெட்ரோல் குண்டையும் வீசியதாகக் கூறப்படுகிறது. ஆனால், பெட்ரோல் குண்டு வெடிக்கவில்லை.

இதையறிந்து, சில்வர் பட்டரைக்குள் இருந்த செந்தில்பாண்டியன் தரப்பினர் ஆயுதங்களுடன் வெளியே வந்து உதயா தரப்பினரைத் தாக்கியுள்ளனர். இதில் உதயா மற்றும் அவரது நண்பர்கள் சபரி (24), மணிகண்டன் (24), அருண்குமார் (23) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

தகவலறிந்து வந்த போலீஸார் காயமடைந்தவர்களை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டுவந்தனர். ஆனால், வழியிலேயே உதயா உயிரிழந்தார். சபரி, மணிகண்டன், அருண்குமார் ஆகியோர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவஇடத்தில் ஊரக காவல் கண்காணிப்பாளர் வே. பாலகிருஷ்ணன் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

போலீஸ் தடியடி: உதயா, கண்ணன் ஆகியோர் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறை முன்பு மாநகர் காவல் துணை ஆணையர் சமந்த்ரோஹன் ராஜேந்திரா தலைமையில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

பிரேதபரிசோதனைக்கு பிறகு சடலத்தை வாங்க மறுத்து உதயா தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

மேலும், துணை ஆணையர் உள்ளிட்டோரை நாகரீகமற்ற முறையில் பேசியதையடுத்து கூட்டத்தினரை தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பிறகு, உதயா, கண்ணன் இருவரது சடலமும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக ஆர். குமார், பாண்டி, மாரிமுத்து, பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

செய்தி : தினமணி 

100ரூ திருடியதற்காக சிறுமியை அடித்தே கொன்ற கொடூரம்

பாகிஸ்தானில் ஒரு வீட்டில் வேலை செய்து வந்த 10 வயது சிறுமி 100ரூ திருடியதற்காக அவரை கொடூரமாக துன்புறுத்தி கொலைசெய்த நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தானில் உள்ள லாகூர் கண்டோன்மென்ட் பகுதியை சேர்ந்தவர் அல்டாப் மகமூத். இவரது வீட்டில் ஒகாரா மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த 3 மாதமாக வீட்டு வேலை செய்து வந்தாள். இவள் வீட்டில் இருந்த 100 ரூபாயைத் திருடியதாகத் தெரிகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த அல்டாப் மகமூத், அவரது மனைவி நசீரா, மகன் இப்ரார் ஆகியோர் சேர்ந்து பிளாஸ்டிக் குழாயால் அவளைச் சரமாரியாக அடித்து உதைத்தனர். உடலில் காயங்கள் ஏற்பட்ட அவள் பரிதாபமாக இறந்தாள்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அல்டாப் மகமூத், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.                                       
செய்தி : வெப்துனியா

Saturday, January 4, 2014

வட கொரிய அதிபரின் மாமனார் 120 நாய்களுக்கு இரையாக்கப்பட்டாரா?




வட கொரியா முதலில் கம்யூனிச நாடல்ல. கம்யூனிசம் என்பது பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளையும், சுதந்திரத்தையும் உறுதி செய்யும் அமைப்பு முறையாகும். வட கொரிய நாட்டில் ஒருவகையான சர்வாதிகார ஆட்சியே நடைபெறுகிறது. அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் வட கொரியா கம்யூனிச நாடு என்று மக்களைத் திசைதிருப்பும் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன. வடகொரியாவில் நடைபெறும் தவறுகளை கம்யூனிசத்தின் தவறுகள் எனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றன.

அண்மையில் வட கொரிய அதிபர் தனது மாமானாரை 120 நாய்களுக்கு இரையாக்கிக் கொலைசெய்தார் என்ற தகவல்கள் உலகின் பல ஊடகங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தின.

இச்செய்தி பொய்யானது என சில நாட்களின் பின்னர் வாஷிங்டன் போஸ்ட் போன்ற ஊடகங்களே ஒப்புக்கொள்ள ஆரம்பித்தன.

உண்மையில் நடைபெற்றது என்ன?

ஹொங்கொங்கைத் தளமாகக் கொண்ட Wen Wei Po என்ற ஊடகம் முதலில் இச் செய்தியை வெளியிட்டது. ஹொங்கொங்கில் வெளியாகும் 21 ஊடகங்களில் நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை 19 வது இடத்தையே வகிக்கின்றது. தகவலை எங்கிருந்து பெற்றோம் என்ற எந்த ஆதாரமும் இன்றி வெற்றுச் செய்தியாக இந்த ஊடகம் செய்தியை வெளியிட்டது.

செய்தி வெளியான பின்னரும் எந்த சீன ஊடகமும் இச் செய்தி குறித்து மூச்சுக்கூட விடவில்லை. அதே வேளை ஐரோப்பிய ஊடகங்கள் இச்செய்தியை முக்கியத்துவப்படுத்தி வெளியிட்டன. இப்போது சில தென்னிந்திய ஊடகங்களிலும் இச் செய்தி தலைகாட்ட ஆரம்பித்திருக்கின்றது.

ஹொங்கொங் ஊடகத்தில் செய்தி வெளியாகி ஒரு மாதத்தின் பின்னரேயே ஏனைய ஊடகங்கள் செய்திகளை எந்த ஆதராமும் இன்றி வெளியிட ஆரம்பித்தன. இன்று வரைக்கும் அதற்கான ஆதாரம் வெளியிடப்படவில்லை.

இவ்வாறான போலிப் பிரச்சரங்கள் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகின்றன. ஐரோப்பா முழுவதும் கம்யூனிசப் பீதியால் அதிகாரவர்க்கம் மீண்டும் அச்சம் கொள்ள ஆரம்பித்துள்ளைமையையே இவ்வாறான திட்டமிட்ட அவதூறுகள் தெரிவிக்கின்றன.

No, Kim Jong Un probably didn’t feed his uncle to 120 hungry dogs
Google+
http://inioru.com/

Friday, January 3, 2014

நாளுக்கு நாலு பலாத்கார சம்பவங்கள்: தில்லியில் நடக்கும் கொடூரம்




தில்லி போலீஸார் வெளியிட்ட செய்திக் குறிப்பின்படி, தலைநகர் தில்லியில் நாளுக்கு நான்கு பாலியல் பலாத்காரக் குற்றங்கள் நடைபெறுகிறதாம்.

கடந்த நான்கு வருடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகி வந்துள்ளன. தில்லியில் 2013ம் வருடத்தில் 1559 பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய வருடத்தை விட 129.26 சதவீதம் அதிகம்.  2012ல்  680 வழக்குகள் பதிவாயின.

2013ல் பதிவான பலாத்கார வழக்குகளில் 96 சதவீதம் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமான நபர்களாகவே உள்ளனர். 58 வழக்குகளில் மட்டுமே தெரியாத வழிப்போக்கர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் 1398 வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளதாம்.

2011ல் 572 வழக்குகளும், 2010ல் 585 வழக்குகளும் 2009ல் 459 வழக்குகளும், பதிவாகியுள்ளன. பெண்களுக்கு எதிரான குற்றங்கள்ள் 412.56 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தில்லி போலீஸார் வெளியிட்ட செய்தியில் தெரியவந்துள்ளது.                                                                                                                     

செய்தி : தினமணி 

PENSIONERS MESSIAH V.S. DEVASUNDARAM IS NO MORE





Centenarian Sri V.S. Devasundaram, Hon. Patron of AIFPA passed away in the wee hours of 10th December 2013. 

The giant pillar of the edifice, AIFPA that he built in 1979 as founder Organizing Secretary, has crumbled leaving the pensioners community in pall of gloom. 

The Dearness Relief that we enjoy today for compensating the erosion of pension was due to his canny and ingenious presentation of the matter along with the late Pitamaha Krishnamurthy Iyer, also a Centenarian, before the Prime Minister Mrs. Indira Gandhi. 

Admiring his bubbling energy, enthusiasm and untiring services to the cause of pensioners, the Central Railway Pensioners Associations rightly described him as “Pensioners’ Messiah”. 

He was awarded the “Life Time Achievement Award” by the Probus Club while Gurusamy Forum honoured him with a Purse & Scroll. 

AIFPA with obeisance pay homage to the departed leader and pray that his soul be at peace.