Tuesday, January 7, 2014

ரயிலில் தொடரும் தீ விபத்து ; இன்று 2 ரயிலில் தீ: 9 பேர் பலி


 கடந்த 10 நாட்களில் இன்றுடன் 3 வது ரயிலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில்வே நிர்வாகம் கூடுதல் கவனம் எடுத்து மேலும் தீ விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

கடந்த மகாராஷ்ட்டிராவில் இருந்து பெங்களூரூ சென்ற ரயில், ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே விபத்து நடந்தது. இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். 

இந்நிலையில் இன்று காலை பந்தராவில் இருந்து டேராடூன் புறப்பட்டு சென்ற ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. மும்பை அருகே தானே மாவட்டத்தில் தானுரோடு ஸ்டேஷன் அருகே சென்ற போது ரயில் பெட்டியில் தீ பிடித்தது. இதில் 3 பெட்டிகள் முழுமையாக எரிந்து சாம்பலானது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் கருகி பலியாயினர். பலர் காயமுற்றுள்ளனர். அருகில் உள்ள தானு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

விபத்து நடந்த இடத்திற்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்துள்ளனர். தற்போது ரயிலில் தீ அணைக்கப்பட்டது. ரயில் விபத்து குறித்து முழுமையாக விசாரித்த பின்னரே தீ விபத்துக்கான காரணம் தெரிய வரும் என ரயில்வே மண்டல அதிகாரி கூறினார். 

விபத்தில் சிக்கி பலியானவர் குடும்பத்தினருக்கு நிவாரணமாக ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூன்கார்கே உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். 

இதற்கிடையில் லக்னோவில் ஒரு ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால் உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. 

கூடுதல் கவனம் தேவை: ரயிலில் தொடரும் தீ விபத்துக்கான சரியான காரணம் கண்டறியப்பட வேண்டும். 

மேலும் ரயிலில் தீ பற்றும் பொருட்கள் கொண்டு செல்லக்கூடாது என்ற உத்தரவு முறையாக, கடுமையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். 

மின்சாதனம் தொடர்பான காரணமாக இருந்தால் ரயில்வே மெக்கானிக் பிரிவு மற்றும் மின் பிரிவு ஊழியர்கள் அனைத்து ரயில்களிலும் முழு அளவில் ஆய்வு நடத்தப்பட வேண்டும். 

இன்னும் நாம் சுணக்கமாக இருந்தால் விபத்துக்கள் தொடரத்தான் செய்யும்.      
செய்தி : தினமலர் 


No comments:

Post a Comment