Wednesday, August 31, 2016

37 வயது இளம்பெண்ணுக்கு 10-வது பிரசவம்: கணவரின் குடிப் பழக்கத்தால் எதிர்காலத்தை இழந்த குழந்தைகள் - இந்து நாளிதழ்



மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நேற்று 37 வயது இளம்பெண் 10-வது பிரசவத்துக் காக உயிருக்கு ஆபத்தான நிலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ரவி (40). இவர் கட்டிட வேலைக்குச் செல்கிறார். இவரது மனைவி பாப்பம்மாள்(37). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உதயகுமார்(18), பவித்ரா(16), மணிவண்ணன்(15), நர்மதா (13), தனலெட்சுமி(9), போதும் பொண்ணு ( 8), சுவேதா( 5 ), அரிஷ் (4) ஆகிய 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். 5-வதாக பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது. 8 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். 4 முறை வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளது. 5 முறை மருத்துவமனையில் நடந்துள்ளது.

தற்போது 10-வது முறையாக பாப்பம்மாள் கர்ப்பமடைந்துள்ளார். இவருக்கு ரத்த ஒட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு 9 மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

பாப்பம்மாள் கணவர் குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர். ஒழுங்காக வேலைக்கு செல்வ தில்லை. வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. பாப்பம்மாளை யும் மிரட்டி கருத்தடை செய்ய விடாமல் தானும் கருத்தடை செய்ய மறுத்துள்ளார்.

தற்போதும் குடிபோதையில் ஊரில் ஏற்பட்ட ஒரு தகராறில் ரவி கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.

அதனால், மதுரை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த செவிலியர்கள் 2 பேர்தான் பாப்பம்மாளை பிரசவத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அவர் களும், இவரை இங்கு சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றுவிட்டதால் ஆதரவற்ற நிலையில் பாப்பம்மாள் 10-வது பிரசவத்துக்காக காத்திருக் கிறார்.

பாப்பம்மாளுக்கு ரத்த சோகை நோய் இருப்பதால் பிரசவம் சிக்கலாக உள்ளது. அவரது 8 குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மருத்துவர்கள் அவரையும், அவரது வயிற்றில் இருக்கும் மற்றொரு குழந்தையும் காப்பாற்ற போராடி வருகின்றனர்.

குழந்தைகளுக்காக என்னை காப்பாற்றுங்கள்

பாப்பம்மாள் கூறியதாவது: நானும், எனது கணவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஒன்றாக கூலி வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். அதனால், என் பெற்றோர் இப்போதுவரை என்னிடம் பேச மாட்டார்கள். எந்த உதவியும் செய்வதில்லை. அவரது உறவினர்களும் பேச மாட்டார்கள். எந்த ஆதரவும் இல்லை. மது பழக்கத்துக்கு அடிமையாகி கணவரும் வீட்டுச் செலவுக்கும் பணமும் கொடுப்பதில்லை. இரவு அளவுக்கு அதிகமாக அவர் குடித்துவிட்டு வந்து கட்டாயப்படுத்துவார். அதனால், குழந்தைகள் பிறப்பதை என்னால் தடுக்க முடியவில்லை. குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்த அவர், மருத்துவர்களிடம் என்னுடைய குழந்தைகளுக்காக என்னை காப்பாற்றுங்கள் என தெரிவித்தது உருக்கமாக இருந்தது

ஒருதலைக் காதலால் கொடூரம்: இளம்பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை ! -இந்து


தூத்துக்குடியில் தன்னை காதலிக்க மறுத்த இளம் பெண்ணை அரிவாளால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்துவிட்டு இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறியதாவது:

தூத்துக்குடி இந்திரா நகரைச் சேர்ந்த நியூமேன் மகள் என்.பிரான்சினா (24). இவர் சண்முகாபுரத்தில் உள்ள ஒரு தனியார் மழலையர் பள்ளியில் 3-ம் வகுப்பு ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பிரான்சினாவை அதே பகுதியைச் சேர்ந்த கீகன் ஜோஸ் (26) என்ற இளைஞர் ஓராண்டுக்கும் மேலாக ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பலமுறை பிரான்சினாவிடம் காதலைச் சொல்லியும் அவர் கீகனை ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்து தொடர்ந்து தொந்தரவு செய்துள்ளார் கீகன்.

ஒருகட்டத்தில் கீகனின் தொல்லை தாங்காமல் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார் பிரான்சினா. அந்தப் புகாரின் பேரில் கீகனை வரவழைத்து எச்சரிக்கை செய்துள்ளனர் போலீஸார்.

சிறிது காலம் தொந்தரவு கொடுக்காமல் இருந்திருக்கிறார் கீகன். இந்நிலையில்தான் பிரான்சினாவுக்கு வீட்டில் அவருக்கு திருமணம் நிச்சயக்கப்பட்டது.

வரும் 8-ம் தேதி பிரான்சினாவுக்கு திருமணம் நடைபெறவிருந்தது. இதனால் ஆத்திரமடைந்த கீகன் கடந்த ஒரு வாரமாகவே பிரான்சினா செல்லும் இடமெல்லாம் பின் தொடர்ந்திருக்கிறார்.

பிரான்சினா ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் செல்லும் முன் அருகில் இருக்கும் தூய பேதுரு தேவாலயத்தில் பிரார்த்தனை செய்துவிட்டுச் செல்வது வழக்கம். அதேபோல் இன்றும் அவர் தேவாலயத்துக்குச் சென்றார். காலை 8.30 மணியளவில் தேவாலயத்துக்குள் இருந்த பிரான்சினாவை கீகன் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். இதில் அவரது கழுத்து, தலை, முகம் ஆகிய பகுதிகளில் படுகாயம் ஏற்பட்டது. அங்கிருந்து மீட்கப்பட்ட அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அடுத்த சில மணி நேரங்களில் அவரது உயிர் பிரிந்தது.

தேவாலயத்தில் பிரான்சினாவை வெட்டி சாய்த்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்ற கீகன் அவரது அண்ணன் வீட்டுக்குச் சென்று அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tuesday, August 30, 2016

தற்கொலைக்கு முயன்றவர் பிழைத்தார்: நடந்து சென்ற மூதாட்டி இறந்தார்



சென்னை: தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்து மாடியில் இருந்து கீழே குதித்த இளைஞர், மூதாட்டி மீது விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி இறந்தார்.

சென்னை அசோக்நகர் நல்லான்குப்பத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 2-ஆவது தளத்தில் வசிக்கும் ஆட்டோ ஓட்டுநர் செல்வம் (35). அவர் வீட்டின் அருகே சாரதா (75) என்பவர் வசித்து வந்தார்.

செல்வத்துக்கும், அவர் மனைவிக்கும் இடையே ஞாயிற்றுக்கிழமையன்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டை விட்டு வெளியே சென்று மது அருந்திவிட்டு வீடு திரும்பியுள்ளார். இதை அவரது மனைவி கண்டித்ததால் மனமுடைந்த செல்வம், தற்கொலை செய்வதற்காக குடியிருப்பின் 4-ஆவது மாடிக்குச் சென்று அங்கிருந்து கீழே குதித்துள்ளார். அப்போது தரைதளத்தில் சென்று கொண்டிருந்த மூதாட்டி சாரதா மீது செல்வம் விழுந்துள்ளார். இந்தச் சம்பவத்தில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அங்கிருந்தவர்கள் சாரதாவை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் செல்வம் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து குமரன்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலைக்கு முயன்றது மற்றும் கொலை வழக்கில் கைதாகும் நிலையில் ஓட்டுநர் செல்வம் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நன்றி :- தினமணி


கணவரை சிக்க வைக்க மகள் கடத்தப்பட்டதாக நாடகமாடிய தாய் !



வடமேற்கு தில்லியில் தனது 2 வயது மகளை உறவினர் வீட்டில் தங்க வைத்துவிட்டு, அவர் கடத்தப்பட்டதாக தாய் நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது.

இதுதொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

ஸ்வரூப் நகரைச் சேர்ந்த ஒரு பெண், போலீஸில் கடந்த வெள்ளிக்கிழமை ஒரு புகார் அளித்தார். அதில், "கருத்துவேறுபாடு காரணமாக எனது கணவரை பிரிந்து பெற்றோர் வீட்டில் வாழ்ந்து வருகிறேன். எனது 2 வயது குழந்தையுடன் மார்க்கெட்டுக்கு சென்றிருந்த போது, அவளை யாரோ கடத்தி சென்றுவிட்டனர். எனது கணவர்தான் கடத்தியிருக்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

அதனடிப்படையில் போலீஸார் விசாரணையை தொடங்கினர். சிறுமியின் புகைப்படத்தை தருமாறு அந்த பெண்ணிடம் கேட்டனர். ஆனால், அந்த பெண்ணோ, அவரது குடும்பத்தினரோ சிறுமியின் புகைப்படத்தை தரவில்லை. இது, போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும், மார்க்கெட் பகுதியிலுள்ள சிசிடிவி கேமராவில், அந்த பெண் தனியாக செல்வது போன்றே காட்சிகள் பதிவாகி இருந்தது.

இதையடுத்து, புகார் அளித்த பெண்ணிடம் போஸீஸார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்த 2 வயது குழந்தையை யாரும் கடத்தவில்லை என்பதும், அப்பெண்ணின் உறவினர் வீட்டில் தங்க வைக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. தனது கணவரை போலீஸில் சிக்க வைக்க வேண்டும் என்றே அப்பெண் கடத்தல் நாடகமாடியது தெரியவந்தது என்றார் அந்த அதிகாரி.

நன்றி :- தினமணி

பொறியியல் கல்லூரி மாணவி அடித்துக் கொலை: முன்னாள் மாணவர் கைது !

கரூர் அருகே செவ்வாய்க்கிழமை தனியார் பொறியியல் கல்லூரிக்குள் நுழைந்து மாணவியை அடித்துக் கொன்ற முன்னாள் மாணவரை போலீஸார் கைது செய்தனர்.
சிவகங்கை மாவட்டம், மானாமதுரையைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகள் சோனாலி (19). கண்ணன் இறந்து விட்டார். சோனாலி, கரூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்தார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் உதயகுமார் (21). இதே கல்லூரியில் படித்த இவர், சோனாலியை ஒருதலையாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. மூன்றாமாண்டு படித்து வந்த உதயகுமார் மீது கல்லூரி நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததாகவும், இதனால் அவர் கடந்த நவம்பர் மாதம் முதல் கல்லூரிக்கு வரவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை கல்லூரிக்கு வந்த உதயகுமார், வகுப்பறைக்குச் சென்று சோனாலியிடம் தனது காதலை ஏற்குமாறு கூறியுள்ளார். ஆனால், சோனாலி அதை ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த உதயகுமார் அங்கிருந்த மரக்கட்டையால் சோனாலியின் தலையில் தாக்கியுள்ளார். இதைத் தடுக்க முயன்றவர்களையும் தாக்கிவிட்டு உதயகுமார் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாராம்.
இதில், பலத்த காயமடைந்த சோனாலியை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சோனாலி உயிரிழந்தார். கரூர் நகர போலீஸார் வழக்குப் பதிந்து உதயகுமாரைக் கைது செய்தனர்.
நன்றி :- தினமணி

Friday, December 11, 2015

சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரைக் 'காணவில்லை'

பெரும்

சீனாவின் பெரும்  செல்வந்தர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஊகங்களும் பரவிவருகின்றன.
முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர்.
நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக அவரது ஃபோஸுன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பணியாளர்கள் சீன சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விற்பனையை இடைநிறுத்தி வைத்திருக்குமாறு ஹாங் காங் பங்குபரிவர்த்தனை நிர்வாகத்திடம் ஃபோஸுன் இண்டர்நேஷனல் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களை பின்னர் வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்டில், ஊழல் வழக்கு ஒன்றில் குவோ-வின் பெயரும் தொடர்புடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.bbc.com/tamil/global/2015/12/151211_china_guo

Thursday, November 26, 2015

ரூ.22 கோடியுடன் வேன் ஓட்டுநர் மாயம்


தில்லி நகரின் தென்கிழக்குப் பகுதியான கோவிந்தபுரியில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள வங்கிப் பணத்துடன் வேன் ஓட்டுநர் ஒருவர் வியாழக்கிழமை தப்பி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது
:
 தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்த ரூ.38 கோடி மதிப்புள்ள பணத்தை, நான்கு வேன்கள் மூலமாக வேறொரு பகுதிக்கு அந்த வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

 அவற்றில் ஒரு வேனுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வினய் படேல் என்பவர், கோவிந்தபுரி ரயில் நிலையம் அருகே இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்துமாறு கூறினார். அதையடுத்து, அரை சாலையோரத்தில் இறக்கி விட்ட அந்த வேன் ஓட்டுநர் பிரதீப் சுக்லா என்பவர், அடுத்த தெருவில் காத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், திரும்பி வந்த பாதுகாவலர் வேனையும் ஓட்டுநரையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த வேனில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கியின் தரப்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து, தில்லி போலீஸார் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிறிது நேரத்தில் பாதுகாவலர் வினய் படேலை இறக்கி விட்ட இடத்துக்கு அருகில் அந்த வேனை கண்டுபிடித்தனர். எனினும், ஓட்டுநரையும், வேனில் இருந்த பணப் பெட்டிகளையும் காணவில்லை.
தினமணி