Wednesday, November 18, 2015

புதுப்பேட்டையின் அவலங்கள் ! ஸ்டாலின் இதைப் படித்தால் சீர் செய்யும் பணிகளைத் தி.மு.க. துவக்கக்கூடும் !




               கூவத்தில் குதித்து இறந்த கூலித் தொழிலாளி                                                                
சென்னை புதுப்பேட்டை வரதராஜபுரத்தை சேர்ந்தவர் தாஸ் (38). 
முகநூலில் புதுப்பேட்டை...

"Engr.Sulthan" <er_sulthan@yahoo.com>: Nov 18 03:17PM  

குலசை சமூகச் சிந்தனையாளர்   பொறியாளர்  சுல்தான்.


சென்னையில் தீண்டத் தகாத பகுதி புதுப்பேட்டை:

மின்தமிழ்க்குழுமத்திலிருந்து

எந்தவிதமான அரசு நியாய விலைக் கடைகளும்(கூட்டுறவு அங்காடிகள்) இல்லாத பகுதி இது.

அரசு திறந்துள்ள பண்ணை பசுமை காய்கறி கடைகள் 92 ல் ஒரு கடை கூட புதுப்பேட்டை, சிந்தாதிரிப்பேட்டை பகுதிகளில் கிடையாது..

திறக்கப்பட்ட இடங்களில் பெரும்பான்மையானது மேல்மட்ட வர்க்கம் வாழும் பகுதி மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகம் வாழும் பகுதி. உ_ம் மைலாப்பூர் திருவான்மியூர் போன்ற இடங்கள்..

இதில் புதுப் பேட்டை மட்டும் இரண்டு மாநகராட்சி வார்டுகளை உள்ளடக்கிய பகுதி...அரசு வழங்கும் இலவசங்களும் கடைசியாக மிஞ்சியது மட்டுமே இங்கு அரைகுறையாக வழங்கப் படும்..

கவுன்சிலரோ அவரது தேவைகளை மட்டுமே பார்த்துக் கொள்கிறார்..இதற்கே அவருக்கு நேரம் பத்தவில்லை..

வசூல் மன்னர்...எங்க சட்டமன்ற உறுப்பினர் (திமுக) தொகுதி பக்கம் வந்ததே இல்லை..அவருக்கு பாஜக நடத்தும் விநாயக சதுர்த்தி போன்ற விழாக்களில் கலந்து கொள்ளவே நேரம் சரியாக இருக்கிறது.. 

அவரது தொகுதி பெயர் கூட நினைவிருக்குமா என்பதே சந்தேகந்தான்..அரசியல் வாடை இன்றி இப் பகுதி பொது மக்களில் ஒருவனாக என் ஆதங்கத்தை பதிவிடுகிறேன்.. 

எல்லா விஷயங்களிலும் இப் பகுதியை பொறுத்தவரை அரசு மெத்தனமாகவும், மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும் செயல் படுகிறது.. போராடி பெற்றுத் தர வேண்டிய சட்ட மன்ற, மாமன்ற உறுப்பினர்களோ யாருக்கோ வந்த விதியென்று மௌனச் சாமியார்களாகி விட்டனர் என்பது தான் கொடுமை..

இப்பகுதி மக்களும் போராட வலிமையற்ற அப்பாவிகள் என்று தான் சொல்ல வேண்டும்..ஆம் நாங்கள் ஒதுக்கப்பட்ட பின் தங்கிய, தீண்டத் தகாத மக்களாகி விட்டோம் அரசை பொறுத்தவரை... 

அரசியல் வாதிகளே! வாக்குச் சீட்டு என்பது மைலாப்பூர் காரனுக்கும், புதுப்பேட்டை காரனுக்கும் ஒரே மதிப்புள்ளது தான்... வாயும் வயிறும் ஒன்று தான்..நினைவில் கொள்ளவும்..

இதே சட்டமன்ற உறுப்பினர் திரும்பவும் 2016 ல் இத் தொகுதியில் நின்றால் எ்ங்கள் வாக்கு அவருக்கில்லை...

அரசியல் கடந்த, பசியின் ஞானமிது..

குறிப்பு: 80% இஸ்லாமியர்கள் வாழும் பகுதி இது...#மறக்கடிக்கப்பட்ட_புதுப்பேட்டை_மக்கள்

#################################நான்கு நாட்களுக்கு பிறகு இன்று தான் சூரியன் முகம் காட்டுகிறது..மகிழ்ச்சி!

மழை பெய்த சுவடே இல்லாமல் ஒரு தெரு...ஆம் புதுப்பேட்டையில் எங்க தெரு தான் 

இது..மழை பெய்த அடுத்த விநாடியே அனைத்து நீரும் அருகில் உள்ள சென்னையின் ஜீவ நதி கூவத்தில் வடிந்து விடும்..ஒருநாளும் தண்ணீர் சிறிதும் தேங்காத எங்க தெரு இது.. .#தெரு_பெருமை

புதுப்பேட்டை – ஒரு நாளில்

Posted: July 20, 2010 in Uncategorized
0
படம் : புதுப்பேட்டை
பாடல் : ஒரு நாளில்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
ஒரு நாளில் வாழ்க்கை இங்கே எங்கும் ஓடி போகாது
மறு நாளும் வந்து விட்டால் துன்பம் தேயும் தொடராது
எத்தனை கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும்
அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்
ஹோ..கரு வாசல் விட்டு வந்த நாள் தொட்டு ஹோ..
ஒரு வாசல் தேடியே விளையாடு ஹோ..
கண் திறந்து பார்த்தால் பல கூத்து ஓ..
கண் மூடி கொண்டால் ஹோ…

போர்க்களத்தில் பிறந்து விட்டோம்
வந்தவை போனவை வருத்தம் இல்லை
காட்டினெலே வாழ்கின்றோம்
முட்களின் வலி ஒன்றும் மரணம் இல்லை
இருடினிலே நீ நடக்கையிலே
உன் நிழலும் உன்னை விட்டு விலகி விடும்
நீ மட்டும் தான் இந்த உலகத்திலே
உனக்கு துணை என்று விளங்கிவிடும்
தீயோடு போகும் வரையில்
தீராது இந்த தனிமை
கரை வரும் நேரம் பார்த்து
கப்பலில் காத்திருப்போம்
எரிமலை வந்தால் கூட
ஏறி நின்று போர் தொடுப்போம் ஹோ…
அந்த தெய்வ ரகசியம் புரிகிறதே ஹோ…
இங்கும் எதுவும் நிலை இல்லை கரைகிறதே ஹோ…
மனம் வெட்ட வெளியிலே அலைகிறதே ஹோ…
அந்த கடவுளை கண்டால் வோ ஹோ…

அது எனக்கு இது உனக்கு
இதயங்கள் போடும் தனி கணக்கு
அவள் எனக்கு இவள் உனக்கு
உடல்களும் போடும் புதிர் கணக்கு
உனக்கும் இல்லை இது எனக்கும் இல்லை
படைத்தவனே இங்கு எடுத்துகொள்வான்
நல்லவன் யார் அட கெட்டவன் யார்
கடைசியிலே அவன் முடிவு செய்வான்
பழி போடு உலகம் இங்கே…
பலி ஆன உயிர்கள் எங்கே..
உலகத்தின் ஓரம் நின்று
அத்தனையும் பார்த்திருபோம்
நடப்பவை நாடகம் என்று நாமும் சேர்ந்து நடித்திருப்போம் ஹோ…
பல முகங்கள் வேண்டும் சரி மாட்டி கொள்வோம் ஹோ..
பல திருப்பம் தெரியும் அதில் திரும்பி கொள்வோம் ஹோ..
கதை முடியும் போக்கில் அதை முடித்துகொள்வோம் ஹோ…
மறு பிறவி வேண்டுமா ஹோ…

=====

No comments:

Post a Comment