Thursday, November 26, 2015

ரூ.22 கோடியுடன் வேன் ஓட்டுநர் மாயம்


தில்லி நகரின் தென்கிழக்குப் பகுதியான கோவிந்தபுரியில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள வங்கிப் பணத்துடன் வேன் ஓட்டுநர் ஒருவர் வியாழக்கிழமை தப்பி ஓடியதால், பரபரப்பு ஏற்பட்டது.

 இதுகுறித்து காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்ததாவது
:
 தில்லியின் விகாஸ்புரி பகுதியில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் இருந்த ரூ.38 கோடி மதிப்புள்ள பணத்தை, நான்கு வேன்கள் மூலமாக வேறொரு பகுதிக்கு அந்த வங்கியின் அதிகாரிகள் வியாழக்கிழமை மாலை நேரத்தில் அனுப்பி வைத்தனர்.

 அவற்றில் ஒரு வேனுடன் அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வினய் படேல் என்பவர், கோவிந்தபுரி ரயில் நிலையம் அருகே இயற்கை உபாதைக்காக வண்டியை நிறுத்துமாறு கூறினார். அதையடுத்து, அரை சாலையோரத்தில் இறக்கி விட்ட அந்த வேன் ஓட்டுநர் பிரதீப் சுக்லா என்பவர், அடுத்த தெருவில் காத்திருப்பதாகத் தெரிவித்தார். ஆனால், திரும்பி வந்த பாதுகாவலர் வேனையும் ஓட்டுநரையும் காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த வேனில் ரூ. 22.5 கோடி மதிப்புள்ள பணம் இருந்ததாகக் கூறப்படுகிறது. வங்கியின் தரப்பில் போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

 அதைத் தொடர்ந்து, தில்லி போலீஸார் இரண்டு குழுக்களாகப் பிரிந்து தேடுதல் வேட்டையில் இறங்கினர். சிறிது நேரத்தில் பாதுகாவலர் வினய் படேலை இறக்கி விட்ட இடத்துக்கு அருகில் அந்த வேனை கண்டுபிடித்தனர். எனினும், ஓட்டுநரையும், வேனில் இருந்த பணப் பெட்டிகளையும் காணவில்லை.
தினமணி

No comments:

Post a Comment