Thursday, November 26, 2015

சென்னை உயர்நீதிமன்றத்தில் கவிஞர் வைரமுத்து நேரில் ஆஜர்

நீதிபதிகள் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் கவிஞர் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.


கடந்த மாதம் சென்னையில் டி.நகரில் முன்னாள் நீதிபதி கைலாசத்தின் பிறந்த நாள் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வைரமுத்து, நீதிபதிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பு விலைபோய் விடுகின்றனர் என்று கூறியிருந்தார். இதுதொடர்பாக திரைப்பட ஃபைனான்சியர் முகன் சந்த் போத்ரா என்பவர் வைரமுத்து மீது உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும் படி நீதிபதி சதீஷ்குமார் அக்னிஹோத்ரி அமர்வு உத்தரவிட்டது
இந்த வழக்கு விசாரணை இன்று வந்தது, வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் சுதாகரன், பி.என்.பிரகாஷ் அடங்கிய அமர்வு முன் வைரமுத்து ஆஜராகி தன்னுடைய விளக்கத்தை அளித்தார். இதனை தொடர்ந்து அவர் மீதான அவதூறு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

http://tamil.webdunia.com/

No comments:

Post a Comment