கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் காலை 5 மணி முதல்
அ.தி.மு.க. தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் குவியத்தொடங்கினர். பத்திரிகையாளர்களை மட்டும் கோர்ட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம்வரை அனுமதித்தனர். அ.தி.மு.க.வினரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்திவிட்டனர்.
* தமிழக அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய வக்கீல்கள் 16 பேர் மட்டும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
* மதியம் 12 மணி முதல் வழக்கின் தீர்ப்பு வெளிவரத்தொடங்கியதும், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முகம் வாடத்தொடங்கியது. அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்து ஒருவருக்கொருவர் சோகமாக பேசிக்கொண்டனர்.
* மதியம் 12.30 மணியளவில் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றுவிட்டார்.
* பகல் 1 மணியளவில் முதல்&அமைச்சர் ஜெயலலிதாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த தேசியகொடி அகற்றப்பட்டது.
* மதியம் 2 மணியளவில் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, தனது காரில் அமர்ந்திருந்து மதிய உணவு சாப்பிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி கோர்ட்டுக்குள் உள்ள அறையில் உட்கார்ந்து சாப்பிட்டனர்.
* 3.30 மணிக்கு தீர்ப்பு வெளியானபோது, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருசில எம்.எல்.ஏ.க்கள் வாயை பொத்திக்கொண்டு கதறி அழத்தொடங்கிவிட்டனர்.
* முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை போலீசார் தனித்தனியாக ஜெயிலுக்கு அழைத்துச்சென்றனர். அப்போது முதல்-அமைச்சர் நடந்து செல்வதை பார்த்து, பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் கதறி அழுதனர்.
* ஜெயலலிதாவை ஜெயிலில் அடைத்தபின்பு, இரவு 9 மணி ஆகியும், அ.தி.மு.க.வினர் ஜெயில் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர்.
* ஜெயிலில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்துணி உள்ளிட்ட தேவையான பொருட்களை சிறை அதிகாரிகள் மூலம் வக்கீல்கள் கொடுத்து அனுப்பினர்.
நன்றி :- தினத்தந்தி
No comments:
Post a Comment