Thursday, September 4, 2014

எல்.ஐ.சி. பெண் ஏஜெண்டு கொலை: கொலையாளிகள் பற்றி துப்பு துலக்க 6 தனிப்படை


சென்னை எம்.ஜி.ஆர்.நகர் ஜாபர்கான்பேட்டை கங்காநகரைச் சேர்ந்தவர் விசாலாட்சி (63). எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தார். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இங்குள்ள அருள்சோழன் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீடு கடந்த சில நாட்களாக பூட்டி கிடந்தது. விசாலாட்சி வெளியூர் சென்று இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தனர்.

வீட்டின் குளியல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் விசாலாட்சி பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க செயின், வைரக்கம்மல், வளையல்கள் கொள்ளை போய் இருந்தது. 240 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

விசாலாட்சி தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அன்றைய தினம் 2 பேர் விசாலாட்சியுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகுதான் இந்த கொலை நடந்து இருக்கிறது.

யாரோ தெரிந்தவர்கள் இந்த கொலையை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கொலை குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க தியாகராயநகர் துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் அசோக் நகர் உதவி கமிஷனர் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தெரிந்த நபர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடியிருப்பு காவலாளிகள், ஏ.சி. மெக்கானிக்கர், பால்காரர்கள் என 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 நன்றி :மாலைமலர்

No comments:

Post a Comment