Saturday, September 27, 2014

ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை சென்ற முதல், முதல்-அமைச்சர்


ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை சென்ற முதல், முதல்-அமைச்சர்



ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டு நேற்று 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதன் காரணமாக அவர் முதல்&அமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, முதல்&அமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்ற முதல் முதல்&அமைச்சர் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் பதவி இழந்த 2&வது அரசியல்வாதியாக அவர் திகழ்கிறார்.

சுடுகாட்டு கூரை வழக்கில் டெல்லி மேல்&சபை தி.மு.க. எம்.பி. டி.எம். செல்வகணபதி ஏற்கனவே பதவி இழந்துள்ளார்.

தண்டிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அப்பீல் செய்யும் 6 மாத காலம் பதவியில் தொடர முன்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதி அளித்தது. ஆனால் அந்த சட்டப்பிரிவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.


நீதிபதி  ஜான்  மைக்கேல்  டி.குன்கா

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா, கர்நாடக மாநிலம் மங்களூர் கோர்ட்டில் வக்கீலாக பணியைத் தொடங்கியவர், ஆவார். 2002&ம் ஆண்டு நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று பெல்காம் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். 

2009&ல் ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், பெங்களூர் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பெங்களூர் புறநகர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். பின்பு குன்காவை கர்நாடக அரசு, ஊழல் தடுப்புத் துறை பதிவாளராக நியமித்தது.

 அங்கிருந்து 2013&ம் ஆண்டு அக்டோபர் 31&ந் தேதி தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் இன்றும் ரத்து ஆகுமா?

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே கலவரம் வன்முறைகள் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களில் நேற்று மாலை மற்றும் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சினிமா காட்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து காலை 10 மணிக்கு முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment