Sunday, March 9, 2014

கோவிலுக்கு வசூலாக வேண்டிய தொகை மக்கள் பார்வைக்கு

appar thirukkovil
sundar
8, மார்ச் ,2014 , சனிக்கிழமை. அருமை நண்பர் சுந்தர்   புருஷோத்தமன் அழைத்தன் பேரில் , சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள அப்பர்சாமி திருக்கோவிலுக்குச் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சென்னையிலே இருந்தும், அந்தப்பகுதி வழியே பலமுறை சென்றிருந்தும், அச்சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையையும், அப்பர்சாமிக் கோவிலையும் இன்றுதான் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது.  . அவன்தாள் வணங்க அவனருள் வேண்டும் என்று மாணிக்கவாசகர் திருவாசகத்தில் கூறுவதன் பொருளை அனுபவாயிலாக உணர முடிந்தது. நண்பருக்கு நன்றி.
 சென்னை மயிலாப்பூரில் , திருவள்ளுவர் சிலைக்கு எதிர்ப்புறமாக அமைந்துள்ளது 'மயிலை அருள்மிகு அப்பர்சாமி உடனுறை விஷாலாட்சி அம்பாள்  திருக்கோவில். பரபரப்பும் ,நெருக்கடியும் நிறைந்த நெடுஞ்சாலை. சாலையை விடுத்துக் கோவிலுக்குள் சென்றுவிட்டால் நிலவும் அமைதியே ஆனந்தமளிக்கும்.. கோவில்வெளிப் புறவழியில் மெளனமாக அமர்ந்திருந்தாலே போதும். மனம் அமைதி பெறும். குழப்பங்கள் நீங்கும். தெளிவு பிறக்கும்.  தியான மண்டபமும் திருக்கோவிலுள் அமைந்துள்ளது பிறிதொரு சிறப்பு.
tn44appa004
திருக்கோவிலின் நிர்வாக அலுவலகத்தின் முன்புறம் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த அறிவிப்புப் பலகையும்  , அதில் இடம்பெற்றிருந்த தகவல்களுமே இன்றைய இந்தப் பதிவுக்கான  அகத்தூண்டுதல்.
மயிலை அப்பர்கோவில் பரம்பரை  அறங்காவலர்,  துணிச்சலாக யார் யாரிடமிருந்து எவ்வளவு தொகை  வசூலாக வேண்டியுள்ளது என்பதை நிர்வாக அலுவலகம் முன்பாக அறிவிப்புப் பலகையில் எழுதி வைத்துள்ளார்.  அதனையே மேற்கண்ட  படத்தில்  காண்கின்றோம்.
மேற்காணும் அறிவிப்புப் பலகையில் எழுதிவைத்துள்ளபடி ,  மயிலை அருள்மிகு அப்பர் சுவாமி திருக்கோவிலுக்கு  வசூலாக வேண்டிய  மொத்தத் தொகை ரூ.68,79,577. 
திருக்கோவில்களுக்குச் சொந்தமான இடங்களிலிருந்து வரவேண்டிய வருமானம் முறையாக வசூலாவதில்லை. அவற்றை வசூலித்திட நேர்மையான முறைகளில் முயற்சிகள் தொடர்வதும் இல்லை.
இது  நல்லதோர்  முயற்சி. வழிகாட்டுதலும் ஆகும்.    இதே வழி முறைதனை இதர திருக்கோவில் நிர்வாகங்களும் பின்பற்ற வேண்டும் .
சமூகத்தில் அவப்பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற சுய மரியாதையுள்ளோர்  மட்டுமாவது உடனே  கோவிலுக்குக் கொடுக்கவேண்டிய பாக்கிகளைக் கொடுக்கத் துவங்குவர்.
இம்முயற்சியை மேற்கொண்டுள்ள மேற்படி மயிலை அப்பர்சுவாமிகள் உடனுறை விஷாலாட்சி அம்மையார் திருக்கோவில் பாரம்பரிய அறங்காவலர் P.V.இராஜ்குமார் அவர்களை மனமாரப் பாராட்டுகின்றோம்.
எல்லாம்வல்ல மயிலை அப்பர்சுவாமிகள் உடனுறை விஷாலாட்சி அம்மன் திருவருட் கருணையால் பாக்கித்தொகை விரைவில் வசூலாகும் என்றும் நம்பிக்கை கொள்வோம்.
சமயக்குரவர் நால்வர் , தக்கோலம்
சமயக்குரவர் நால்வர் , தக்கோலம்

No comments:

Post a Comment