Friday, March 14, 2014

குறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம்

போதிய உறக்கமின்மை காரணமாக ஏற்படும் குறட்டை, மூச்சுத்திணறல் குறித்த சர்வதேச மருத்துவக் கருத்தரங்கம் சென்னை கீழ்ப்பாக்கம் ஹோட்டல் பெவர்லியில் வரும் 15, 16-ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

உலக உறக்க விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சென்னை கீழ்ப்பாக்கம் கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது.

இக்கருத்தரங்கில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவைச் சிகிச்சை நிபுணர்கள் பங்கேற்று குறட்டை பிரச்னை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.

இக்கருத்தரங்கில் பங்கேற்க இதுவரை 150 டாக்டர்கள் பதிவு செய்துள்ளனர். உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், நெஞ்சுவலி ஆகியவற்றைத் தடுப்பதற்குரிய வழிகள் மற்றும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளுதல் ஆகியவை பற்றியும், நவீன சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.

முன்னதாக, கே.கே.ஆர். காது, மூக்கு, தொண்டை மருத்துவமனை சார்பில் உறக்கமின்மை பிரச்னையால் ஏற்படும் குறட்டை மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றுக்காக பிப்ரவரி 12-ஆம் தேதி மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் தேர்வு செய்யப்பட்ட நோயாளிகளுக்கு கே.கே.ஆர். மருத்துவமனையில் செய்யப்படும் அறுவைச் சிகிச்சை, கருத்தரங்கம் நடைபெறும் ஹோட்டலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டு டாக்டர்களுக்கு விளக்கப்படும் என்றார் டாக்டர் கே.கே.ராமலிங்கம்.

தினமணி

No comments:

Post a Comment