Tuesday, March 4, 2014

சென்னை : பெண்களைக் கட்டிப்போட்டு 40 சவரன், 1 லட்சம் கொள்ளை




சென்னை, இராயப்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த பெண்களைக் கத்திமுனையில் மிரட்டி, கட்டிப்போட்டு, 40 சவரன் நகைகள், 1 லட்சம் பணத்தைக் கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகள் செக்யூரிட்டியைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றனர்.

இராயபேட்டை பாலாஜி நகர் அனுமந்தப்ப தெருவில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர் கலீலுர் ரஹ்மான். இவர் துபாயில் பணியாற்றி வருகிறார். வீட்டில் அவரது மனைவி, தாய் சகோதரி மற்றும் உறவினர் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 7.30 மணியளவில் இவர்களது அடுக்குமாடி குடியிருப்பில் நுழைந்த 2 ஆசாமிகள் கத்திமுனையில் அங்கிருந்த பெண்களை மிரட்டி உள்ளனர். பயந்துபோன பெண்கள் அலறினர். அவர்களைக் கட்டிப்போட்டுவிட்டு, அவர்கள் அணிந்திருந்த மற்றும் பீரோவில் இருந்த ^9 லட்சம் மதிப்புள்ள 40 சவரன்  நகைகள், ^1 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளை அடித்துச் சென்றனர். 

சத்தம் கேட்டு வந்த செக்யூரிட்டி தடுக்கவே அவரைப் பிடித்துக் கீழே தள்ளி விட்டு கொள்ளையர்கள் தப்பிவிட்டனர். கத்தியை வீட்டிலேயே போட்டுவிட்டுச் சென்றுள்ளனர். அவர்கள் முகமூடி போட்டு இருந்ததால் யார் என்று வீட்டிலுள்ள பெண்களால் அடையாளம் காட்ட முடியவில்லை. 

கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தன்பேரில் இராயப்பேட்டை போலீசார் வந்து விசாரணை நடத்தினர். நேற்று காலை மீண்டும் தடயவியல் நிபுணர்கள் வந்து வீட்டை ஆராய்ந்தனர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கத்தியில் கைரேகை பதிந்துள்ளதா என்று ஆய்வு செய்கின்றனர், 

குடியிருப்பில் உள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளையும் பார்த்து வருகின்றனர். சென்னையின் மையப்பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புக்குள் முகமூடி அணிந்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருப்பது, அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது. 

தினகரன்

No comments:

Post a Comment