Wednesday, February 19, 2014

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: குண்டுவெடிப்பில் உயிரிழந்தோரின் குடும்பத்தினர் எதிர்ப்பு



1991 ஆம் ஆண்டு ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்பூதூரில் குண்டுவைத்து கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில், குற்றவாளிகள் 7 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இதற்கு அப்போது குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

மேலும்  ராஜிவ் கொலை வழக்கில், தமிழர்கள் என்ற அடிப்படையில் குற்றவாளிகள் 7 பேரும் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி என்றால் ராஜிவுடன் சேர்ந்து உயிரிழந்தவர்கள் தமிழர்கள் இல்லையா? அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தமிழர்கள் இல்லையா என்று வேதனையுடன்  அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தினமணி

No comments:

Post a Comment