Wednesday, August 31, 2016

37 வயது இளம்பெண்ணுக்கு 10-வது பிரசவம்: கணவரின் குடிப் பழக்கத்தால் எதிர்காலத்தை இழந்த குழந்தைகள் - இந்து நாளிதழ்



மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனையில் நேற்று 37 வயது இளம்பெண் 10-வது பிரசவத்துக் காக உயிருக்கு ஆபத்தான நிலை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திண்டுக்கல் பாரதிபுரத்தை சேர்ந்தவர் ரவி (40). இவர் கட்டிட வேலைக்குச் செல்கிறார். இவரது மனைவி பாப்பம்மாள்(37). இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு உதயகுமார்(18), பவித்ரா(16), மணிவண்ணன்(15), நர்மதா (13), தனலெட்சுமி(9), போதும் பொண்ணு ( 8), சுவேதா( 5 ), அரிஷ் (4) ஆகிய 5 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். 5-வதாக பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது. 8 குழந்தைகள் உயிருடன் இருக்கின்றனர். 4 முறை வீட்டிலேயே பிரசவம் நடந்துள்ளது. 5 முறை மருத்துவமனையில் நடந்துள்ளது.

தற்போது 10-வது முறையாக பாப்பம்மாள் கர்ப்பமடைந்துள்ளார். இவருக்கு ரத்த ஒட்டம் மிகவும் குறைவாக இருப்பதால் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டு 9 மாத கர்ப்பிணியாக உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளார்.

பாப்பம்மாள் கணவர் குடிப் பழக்கத்துக்கு அடிமையானவர். ஒழுங்காக வேலைக்கு செல்வ தில்லை. வீட்டுச் செலவுக்கு பணம் கொடுப்பதில்லை. பாப்பம்மாளை யும் மிரட்டி கருத்தடை செய்ய விடாமல் தானும் கருத்தடை செய்ய மறுத்துள்ளார்.

தற்போதும் குடிபோதையில் ஊரில் ஏற்பட்ட ஒரு தகராறில் ரவி கைது செய்யப்பட்டு, திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட் டுள்ளார்.

அதனால், மதுரை அரசு மருத்துவமனையில் ஆதரவற்ற நிலையில் திண்டுக்கல்லை சேர்ந்த செவிலியர்கள் 2 பேர்தான் பாப்பம்மாளை பிரசவத்துக்கு அழைத்து வந்துள்ளனர். அவர் களும், இவரை இங்கு சிகிச்சைக்கு சேர்த்துவிட்டு சென்றுவிட்டதால் ஆதரவற்ற நிலையில் பாப்பம்மாள் 10-வது பிரசவத்துக்காக காத்திருக் கிறார்.

பாப்பம்மாளுக்கு ரத்த சோகை நோய் இருப்பதால் பிரசவம் சிக்கலாக உள்ளது. அவரது 8 குழந்தைகளின் எதிர்காலத்துக்காக மருத்துவர்கள் அவரையும், அவரது வயிற்றில் இருக்கும் மற்றொரு குழந்தையும் காப்பாற்ற போராடி வருகின்றனர்.

குழந்தைகளுக்காக என்னை காப்பாற்றுங்கள்

பாப்பம்மாள் கூறியதாவது: நானும், எனது கணவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஒன்றாக கூலி வேலைக்கு சென்ற இடத்தில் காதலித்துத் திருமணம் செய்துகொண்டோம். அதனால், என் பெற்றோர் இப்போதுவரை என்னிடம் பேச மாட்டார்கள். எந்த உதவியும் செய்வதில்லை. அவரது உறவினர்களும் பேச மாட்டார்கள். எந்த ஆதரவும் இல்லை. மது பழக்கத்துக்கு அடிமையாகி கணவரும் வீட்டுச் செலவுக்கும் பணமும் கொடுப்பதில்லை. இரவு அளவுக்கு அதிகமாக அவர் குடித்துவிட்டு வந்து கட்டாயப்படுத்துவார். அதனால், குழந்தைகள் பிறப்பதை என்னால் தடுக்க முடியவில்லை. குழந்தைகளை வளர்க்க முடியாமல் சிரமப்படுகிறேன் என கண்ணீர் மல்க தெரிவித்த அவர், மருத்துவர்களிடம் என்னுடைய குழந்தைகளுக்காக என்னை காப்பாற்றுங்கள் என தெரிவித்தது உருக்கமாக இருந்தது

No comments:

Post a Comment