Monday, October 27, 2014

கேராளவில் தத்துக் குழந்தைகளுக்கு தட்டுப்பாடு: 72 குழந்தைகளுக்கு 800 தம்பதிகள் விண்ணப்பம்


கேராளாவில் 800  குழந்தையில்லாத தம்பதிகள் குழந்தைகளை தத்தெடுக்க காத்திருப்பதாகவும் ஆனால் தத்து குழந்தைகள் கிடைப்பது அரிதானதாகவும் வெறும்  72 ஆதரவற்ற குழந்தைகளே இருப்பதாகவும் ஒரு ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
மேலும் சட்ட நடைமுறைகள் அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தம்பதிகள் தெரிவிக்கின்றனர். மேலும் சமூகர் ஆர்வலர்கள் கூறும் போது அனாதை, மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும் சட்ட விரோத தத்தெடுப்புகள் தொடர்கின்றன. மருத்துவமனைகள் நர்சிங் ஹோம் களில் சட்ட விரோதமான தத்தெடுப்புகள்: நிறைய நடக்கின்றன.
இதை தடுக்க புதிய விதிமுறைகளையும் கடுமையான சட்டங்களையும் ஏற்படுத்த வேண்டும் என ஒரு சமூக ஆர்வலர் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் கேரளாவில் செயல்படும் அனுமதியில்லாத குழந்தைகள் காப்பகங்களில் இருந்து கிட்டத்தட்ட 600 குழந்தைகள் பல்வேறு மோசமான இடங்களுக்கு தத்து அளிக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில், உரிய விளக்கம் அளிக்கும்படி கேரள அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நன்றி :- தினமணி

No comments:

Post a Comment