Saturday, September 27, 2014

பெங்களூர் தனி கோர்ட்டு தீர்ப்பு துளிகள்...



கோர்ட்டு அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் காலை 5 மணி முதல்


அ.தி.மு.க. தொண்டர்கள், பத்திரிகையாளர்கள் குவியத்தொடங்கினர். பத்திரிகையாளர்களை மட்டும் கோர்ட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தூரம்வரை அனுமதித்தனர். அ.தி.மு.க.வினரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு முன்பே நிறுத்திவிட்டனர்.

* தமிழக அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆகியோர் கோர்ட்டு வளாகத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட்டு அறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருடைய வக்கீல்கள் 16 பேர் மட்டும் கோர்ட்டுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.

* மதியம் 12 மணி முதல் வழக்கின் தீர்ப்பு வெளிவரத்தொடங்கியதும், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் முகம் வாடத்தொடங்கியது. அங்குள்ள மரத்தடியில் அமர்ந்திருந்து ஒருவருக்கொருவர் சோகமாக பேசிக்கொண்டனர்.

* மதியம் 12.30 மணியளவில் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்திடம் சிறிது நேரம் பேசிவிட்டு, மீண்டும் கோர்ட்டுக்குள் சென்றுவிட்டார்.

* பகல் 1 மணியளவில் முதல்&அமைச்சர் ஜெயலலிதாவின் காரில் பொருத்தப்பட்டிருந்த தேசியகொடி அகற்றப்பட்டது.

* மதியம் 2 மணியளவில் கோர்ட்டு அறையில் இருந்து வெளியே வந்த ஜெயலலிதா, தனது காரில் அமர்ந்திருந்து மதிய உணவு சாப்பிட்டார். சசிகலா, சுதாகரன், இளவரசி கோர்ட்டுக்குள் உள்ள அறையில் உட்கார்ந்து சாப்பிட்டனர்.

* 3.30 மணிக்கு தீர்ப்பு வெளியானபோது, அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது. ஒருசில எம்.எல்.ஏ.க்கள் வாயை பொத்திக்கொண்டு கதறி அழத்தொடங்கிவிட்டனர்.

* முதல்-அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரை போலீசார் தனித்தனியாக ஜெயிலுக்கு அழைத்துச்சென்றனர். அப்போது முதல்-அமைச்சர் நடந்து செல்வதை பார்த்து, பெண் எம்.எல்.ஏ.க்கள் உள்பட அனைவரும் கதறி அழுதனர்.

* ஜெயலலிதாவை ஜெயிலில் அடைத்தபின்பு, இரவு 9 மணி ஆகியும், அ.தி.மு.க.வினர் ஜெயில் வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர்.

* ஜெயிலில் அடைக்கப்பட்டவர்களுக்கு மாற்றுத்துணி உள்ளிட்ட தேவையான பொருட்களை சிறை அதிகாரிகள் மூலம் வக்கீல்கள் கொடுத்து அனுப்பினர்.

நன்றி :- தினத்தந்தி

ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை சென்ற முதல், முதல்-அமைச்சர்


ஊழல் வழக்கில் பதவி இழந்து சிறை சென்ற முதல், முதல்-அமைச்சர்



ஊழல் செய்து சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனிக் கோர்ட்டு நேற்று 4 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இதன் காரணமாக அவர் முதல்&அமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்றுள்ளார்.
இதையடுத்து ஊழல் வழக்கில் தண்டனை பெற்று, முதல்&அமைச்சர் பதவியை இழந்து சிறைக்கு சென்ற முதல் முதல்&அமைச்சர் என்ற பெயர் அவருக்கு கிடைத்துள்ளது.

இதேபோன்று தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் பதவி இழந்த 2&வது அரசியல்வாதியாக அவர் திகழ்கிறார்.

சுடுகாட்டு கூரை வழக்கில் டெல்லி மேல்&சபை தி.மு.க. எம்.பி. டி.எம். செல்வகணபதி ஏற்கனவே பதவி இழந்துள்ளார்.

தண்டிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் அப்பீல் செய்யும் 6 மாத காலம் பதவியில் தொடர முன்பு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் அனுமதி அளித்தது. ஆனால் அந்த சட்டப்பிரிவை சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ரத்து செய்து விட்டது குறிப்பிடத்தக்கது.


நீதிபதி  ஜான்  மைக்கேல்  டி.குன்கா

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்கா, கர்நாடக மாநிலம் மங்களூர் கோர்ட்டில் வக்கீலாக பணியைத் தொடங்கியவர், ஆவார். 2002&ம் ஆண்டு நீதிபதிகள் தேர்வில் வெற்றி பெற்று பெல்காம் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் அங்கிருந்து லோக் ஆயுக்தா கோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். 

2009&ல் ஹார்வா மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், பெங்களூர் குடும்ப நல கோர்ட்டு நீதிபதியாக பணி இடம் மாற்றம் செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து பெங்களூர் புறநகர் மாவட்ட நீதிபதியாக பணியாற்றினார். பின்பு குன்காவை கர்நாடக அரசு, ஊழல் தடுப்புத் துறை பதிவாளராக நியமித்தது.

 அங்கிருந்து 2013&ம் ஆண்டு அக்டோபர் 31&ந் தேதி தமிழக முதல்&அமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு முழுவதும் சினிமா காட்சிகள் இன்றும் ரத்து ஆகுமா?

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு சிறைத்தண்டனை அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆங்காங்கே கலவரம் வன்முறைகள் நடைபெற்றது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் சினிமா தியேட்டர்களில் நேற்று மாலை மற்றும் இரவுக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) சினிமா காட்சிகள் தொடர்ந்து ரத்து செய்யப்படுமா? என்பது குறித்து காலை 10 மணிக்கு முடிவு செய்து அறிவிக்கப்படும் என்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

Friday, September 26, 2014

கணவனை கழுத்தை நெரித்துக்கொன்றுவிட்டு நெஞ்சுவலியில் செத்ததாக நாடகமாடிய மனைவி, கள்ளக்காதலனுடன் கைது

சென்னை பள்ளிக்கரணையில் கணவரைக் கொலை செய்துவிட்டு நெஞ்சுவலியால் இறந்துவிட்டதாக நாடகமாடிய மனைவி, கொலைக்கு உதவிய கள்ளக் காதலர் கைது செய்யப்பட்டனர்.


இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது: பள்ளிக்கரணை நன்மங்கலம் அருகே உள்ள ஜி.பி.சாமிநகரைச் சேர்ந்தவர் சத்யநாராயணன். இவர் கட்டடத் தொழிலாளி. இந்நிலையில் சத்யநாராயணன் கடந்த 22-ம் தேதி நெஞ்சு வலியால் இறந்துவிட்டதாக அவரது மனைவி அம்சரேகா தெரிவித்தார்.
ஆனால், சத்யநாராயணனின் சாவில் சந்தேகமடைந்த அவரது சகோதரி அஞ்சலை பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார், வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், அம்சரேகா, தனது கள்ளக்காதலர் கோடம்பாக்கம் காந்திநகர் 10-ஆவது தெருவைச் சேர்ந்த ஆறுமுகத்துடன் (38) சேர்ந்து சத்தியநாராயணனின் கழுத்தை நைலான் கயிறால்இறுக்கிக் கொலை செய்திருப்பது தெரியவந்ததால் ரேகாவையும், ஆறுமுகத்தையும் வியாழக்கிழமை கைது செய்தனர்.
நன்றி :-தினமணி

Saturday, September 20, 2014

2 வயது மகனைக் கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை

2 வயது மகனை கொன்று கர்ப்பிணி தாய் தற்கொலை

திருச்சி, செப்.20–திருச்சி வயலூர் ரோடு பாரதிநகர் 11 வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவகுருநாதன்.(வயது 31) இவர் காட்டூரில் உள்ள தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சுதா (28) இவர்களுக்கு 2 வயதில் கவுதம் என்ற மகன் இருந்தார். சுதா தற்போது 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

நேற்று சிவகுருநாதன் காட்டூரில் வேலை முடிந்து சாப்பாட்டிற்காக மதியம் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தார். அப்போது சுதாவும், மகன் கவுதமும் வீட்டில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மகன் கவுதம் கழுத்தில் கத்தியால் அறுக்கப்பட்டிருந்தது. சுதா தூக்கில் பிணமாக தொங்கினார். எனவே மகன் கவுதமை கழுத்தை கத்தியால் அறுத்து கொன்று விட்டு சுதா தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

இது குறித்து திருச்சி புத்தூர் அரசு ஆஸ்பத்திரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். கர்ப்பிணி தாய் சுதா, 2 வயது மகனை கொடூரமாக கொன்று தற்கொலை செய்ய காரணம் என்ன?என்று போலீசார் விசாரணை நடத்தினர்.

சுதாவின் கணவர் சிவகுருநாதன்,பெற்றோர் ராஜூ,செண்பகம் மற்றும் உறவினர்களிடம் இன்ஸ்பெக்டர் சீதாராமன் இன்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

சுதாவின் பெற்றோருக்கு சொந்த ஊர் கும்பகோணம் ஆகும். அவரது பெற்றோர் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர் தோட்டம் பின் புறம் உள்ள ரவி என்பவரது உறவினர் வீட்டில் தங்கி குடும்பம் நடத்தினர்.
அப்போது அங்கு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த சிவகுருநாதன் உடன் சுதாவுக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்தனர். தற்போது திருச்சியில் வாழ்ந்து வந்தனர்.

வயலூர் ரோடு பாரதி நகர் வீட்டிற்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு தான் குடி வந்துள்ளனர். நேற்று முன்தினம் மாலை சிவகுருநாதன் கர்ப்பிணியான சுதாவை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று டாக்டரிடம் காட்டியுள்ளார்.

நேற்று காலை சிவகுருநாதன் வழக்கம் போல் வேலைக்கு சென்ற போது சுதா வாசலில் நின்று டாட்டா காட்டியுள்ளார். மதியம் சிவகுருநாதன் சாப்பாட்டிற்கு வருவதாக கூறி சென்றுள்ளார். மதிய சாப்பாட்டிற்கு வந்த போது தான் சுதாவும்,கவுதமும் பிணமாக கிடந்துள்ளனர்.

இடையில் மாநகராட்சியில் இருந்து மக்கள் தொகை கணக்கு எடுக்க ஆட்கள் வந்து சென்றுள்ளனர். 12.30 மணி வரை சுதாவை அக்கம் பக்கத்தினர் பார்த்துள்ளனர். அதன் பிறகு தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. வசதி குறைவான வாழ்க்கையில் மன அழுத்தத்தில் இருந்த சுதா மகன் கவுதமை கழுத்தை அறுத்துக் கொன்று தற்கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இருப்பினும் காலையில் கணவரை சந்தோஷமாக வழியனுப்பி விட்டு அக்கம் பக்கத்தினரிடம் பேசிக் கொண்டிருந்த சுதா மகனை கொன்று விட்டு தற்கொலை செய்யும் அளவிற்கு தூண்டப்பட்ட காரணம் என்ன?என்பது மர்மமாக உள்ளது.

இது தொடர்பாக போலீசார் கணவர் சிவகுருநாதன், சுதாவின் பெற்றோர் ராஜூ–செண்பகம் மற்றும் அக்கம் பக்கத்து வீட்டினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.வீட்டில் ரத்தக்கறை படிந்த கத்தி மற்றும் தூக்கு கயிறு ஆகியவற்றை கைப்பற்றி உள்ளனர். தடையவியல் துறை போலீசாரும் கை ரேகைகளை ஆய்வு செய்தனர். இன்று சுதா, கவுதமின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பிரேத பரிசோதனையின் முடிவில் சுதா,கவுதமின் சாவில் மர்மங்கள் விலகும் என்று போலீசார் கூறினர்.

நன்றி : மாலைமலர்

Thursday, September 18, 2014

கறுப்பு பண விவகாரம்: பாராளுமன்ற குழு ஆய்வு





வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கியுள்ள கறுப்பு பணத்தை மீட்டு கொண்டு வர மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு உள்ளது. இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு கடந்த மே மாதம் சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்து உள்ளது. இந்த குழு கணக்கில் வராத பணம் தொடர்பாக விசாரணை குழுவுக்கு ஏற்கனவே சில சிபாரிசுகளை வழங்கி இருக்கிறது.


இந்த நிலையில், பாராளுமன்ற நிதிக்குழு கறுப்பு பணத்தை வெளிக்கொண்டு வருவதற்காக இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், கறுப்பு பணத்தை தடுப்பது போன்றவை குறித்து ஆய்வு செய்ய தீர்மானித்து இருக்கிறது. நிதி நிறுவன மோசடிகள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட இருப்பதால், அது தொடர்பான விவரங்களை அளிக்கக்கோரி நிதி அமைச்சகம், கம்பெனிகள் விவகார அமைச்சகம், இந்திய ரிசர்வ் வங்கி, பங்கு பரிவர்த்தனை அமைப்பு ஆகியவற்றுக்கு ஏற்கனவே நோட்டீசு அனுப்பப்பட்டு உள்ளது.

நன்றி : தினத்தந்தி

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பெண் பலாத்காரம்: காரில் சென்ற போது நண்பர்கள் வெறிச்செயல்


தில்லியில் நண்பர்களுடன் சென்ற பெண் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லியில் உள்ள ஒரு காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் பெண் காவலர் ஒருவரின் மகள்  நேற்று நண்பர்கள் 3 பேருடன் காரில் சென்று இருக்கிறார் அப்போது குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அப்பெண்ணுக்கு அவர்கள் கொடுத்துள்ளனர். இதனை குடித்ததும் மயங்கிவிழுந்த அந்த பெண்ணை 3 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் தில்லியில் உள்ள  நேரு மேம்பாலம் அருகே தூக்கி போட்டு சென்று விட்டனர். அவ்வழியாக சென்ற ஆட்டோ டிரைவர் மயக்க நிலையில் இருந்த அந்த பெண்ணை கண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து  அங்கு வந்த போலீஸார்  அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியாகியுள்ளது. மேற்கொண்டு தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணைக்கு பின்னர் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நன்றி : தினமணி

Wednesday, September 17, 2014

அஸ்ஸாம் முன்னாள் டிஜிபி துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை

சங்கர் பரூவா

அஸ்ஸாம் மாநில முன்னாள் டிஜிபி சங்கர் பரூவா, துப்பாக்கியால் சுட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டார்.
சாரதா நிதி நிறுவன மோசடியில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் பாதுகாப்பு அளித்ததாக எழுந்த புகாரில், இவரை சி.பி.ஐ. கண்காணித்து வந்தது.
இதுகுறித்து குவாஹாட்டி நகர மூத்த காவல்துறைக் கண்காணிப்பாளர் ஏ.பி. திவாரி புதன்கிழமை தெரிவித்ததாவது:
துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் உள்ளூர் மருத்துவமனைக்கு பரூவா கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஆகையால் இதுகுறித்து மேற்கொண்டு எதுவும் தெரிவிக்க இயலாது. விசாரணை முடிவடைந்த பிறகே, முழுத் தகவலும் தெரிவிக்கப்படும் என்றார் அவர்.
கடந்த வாரம் நெஞ்சு வலி ஏற்பட்டதை தொடர்ந்து, மருத்துவமனையில் சங்கர் பரூவா அனுமதிக்கப்பட்டார். நீண்ட சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து புதன்கிழமை காலையில்தான் அவர் வீடு திரும்பியுள்ளார்.
இதுகுறித்து பரூவாவின் உறவினர் ஒருவர் தெரிவிக்கையில், "மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அரை மணி நேரத்துக்குள், மொட்டை மாடிக்கு சென்ற பரூவா, கைத்துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டார். இதையடுத்து உள்ளூர் மருத்துவமனைக்கு அவரை உறவினர்கள் கொண்டு சென்றனர்' என்றார்.
சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு, அஸ்ஸாமில் சங்கர் பரூவா பாதுகாப்பு அளித்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து அவரது வீட்டில் சி.பி.ஐ. கடந்த மாதம் சோதனை நடத்தியது.
இதனால் மோசடியில் பரூவாவைத் தொடர்புபடுத்தி, ஊடகங்கள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டதால், மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாக குடும்பத்தினர் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தில்லியில் சி.பி.ஐ. செய்தித் தொடர்பாளர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "பரூவாவிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தவும் இல்லை. அவருக்கு சம்மனும் அனுப்பவில்லை' என்றார்.
நன்றி : தினமணி