Thursday, September 4, 2014

போலீஸ் 'பூத்'தில் பெண்ணுடன் சிக்கிய எஸ்.ஐ.,க்கு இடமாற்றம்


ஓட்டேரி : ட்டேரியில், போலீஸ், 'பூத்'தில் பெண்ணுடன் நெருக்கமாக இருந்த எஸ்.ஐ.,யை, பகுதிவாசிகள் சிறைபிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓட்டேரி காவல் நிலைய சிறப்பு எஸ்.ஐ., காந்தி, 47. அவர், நேற்று முன்தினம் இரவு, பணி முடிந்து, பனந்தோப்பு ரயில்வே காலனியில் உள்ள போலீஸ் பூத்தில் கதவை மூடி, அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுடன் இருந்ததாக கூறப்படுகிறது.அதை பார்த்த பகுதிவாசிகள், போலீஸ் பூத்தின் கதவுக்கு பூட்டு போட்டு, புளியந்தோப்பு துணை ஆணையருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, காந்தியை, உடனடியாக பணிமாற்றம் செய்து, துணை கமிஷனர் உத்தரவிட்டார்.



wanRi : தினமலர்

எல்.ஐ.சி. பெண் ஏஜெண்டு கொலை: கொலையாளிகள் பற்றி துப்பு துலக்க 6 தனிப்படை


சென்னை எம்.ஜி.ஆர்.நகர் ஜாபர்கான்பேட்டை கங்காநகரைச் சேர்ந்தவர் விசாலாட்சி (63). எல்.ஐ.சி. ஏஜெண்டாக இருந்தார். இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டதால் இங்குள்ள அருள்சோழன் அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் தனியாக வசித்து வந்தார்.

இவரது வீடு கடந்த சில நாட்களாக பூட்டி கிடந்தது. விசாலாட்சி வெளியூர் சென்று இருக்கலாம் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். இந்த நிலையில் நேற்று இவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து வந்து வீட்டை திறந்து பார்த்தனர்.

வீட்டின் குளியல் அறையில் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் விசாலாட்சி பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த தங்க செயின், வைரக்கம்மல், வளையல்கள் கொள்ளை போய் இருந்தது. 240 கிராம் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

விசாலாட்சி தங்க நகைக்காக கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அன்றைய தினம் 2 பேர் விசாலாட்சியுடன் பேசிக்கொண்டு இருந்தனர். அதன் பிறகுதான் இந்த கொலை நடந்து இருக்கிறது.

யாரோ தெரிந்தவர்கள் இந்த கொலையை செய்து நகைகளை கொள்ளையடித்து இருக்கலாம் என கருதப்படுகிறது. இந்த கொலை குறித்து எம்.ஜி.ஆர்.நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொலையாளிகளை பிடிக்க தியாகராயநகர் துணை கமிஷனர் பகலவன் மேற்பார்வையில் அசோக் நகர் உதவி கமிஷனர் தலைமையில் 6 இன்ஸ்பெக்டர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

தெரிந்த நபர்கள் இந்த கொலையை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தில் குடியிருப்பு காவலாளிகள், ஏ.சி. மெக்கானிக்கர், பால்காரர்கள் என 15 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 நன்றி :மாலைமலர்

Tuesday, September 2, 2014

ரூ.20 லட்சம் பணத்துக்காக கணவனை சங்கிலியால் கட்டிப்போட்ட மனைவி கைது: உடந்தையாக இருந்த மகன்களும் கைது


ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ஒருவரை அவருடைய மனைவி மற்றும் மகன்கள் 20 லட்சம் பணம் கேட்டு வீட்டுக்குள் நாய் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.17 நாட்கள் அவரை மனிதாபிமானமற்ற முறையில் சித்ரவதை செய்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

பெங்களூரில் உள்ள ஸ்ரீனிவாசநகரை சேர்ந்த வெங்க டேஷ்(60). கர்நாடக‌ காவல் துறையில் உதவி காவல் ஆய்வாள‌ராக 35 ஆண்டுகள் பணியாற்றிய இவர் கடந்த ஜூன் மாதம் ஓய்வு பெற்றார். வெங்கடேஷூக்கு நாகரத்னா என்ற மனைவியும் சேத்தன், ரஞ்சன் என்ற இரு மகன்களும் உள்ளனர். இவர்களுக்கு ஜே.பி.நகர் அருகே 5 வீடுகள் உள்ளன.

இதன் மூலம் மாதம் ரூ. 50 ஆயிரம் வாடகை வருகிறது. மேலும் கனகபுரா அருகே இருக்கும் 5 ஏக்கர் நிலத்தின் மூலம் ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வருமானம் கிடைக்கிறது. எம்.டெக் படித்துள்ள அவரது மூத்த மகன் சேத்தன் ஹெச்.பி. மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். 

மென்பொருள் பொறியியலாளரான இளைய மகன் ரஞ்சன், இன்போசிஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.திருமணம் ஆகாத இருவரும் மாதம் ரூ.50 ஆயிரத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். ஆதலால் வெங்கடேஷ் குடும்பத்தில் பணத்திற்கு பஞ்சமில்லை.

பணத்துக்காகச் சண்டை

வெங்கடேஷ் ஓய்வு பெற்றதில் இருந்து வீட்டில் பணம் தொடர்பான பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடந்த ஜூலை மாத இறுதியில் அவருக்கு ஓய்வுக்கால நிதியாக ரூ.20 லட்சம் கிடைத்தது. இந்தப் பணத்தில் இன்னொரு வீடு வாங்க அவரது மனைவியும் மகன்களும் விரும்பியுள்ளனர். அதற்கு வெங்கடேஷ் மறுத்துள்ளார்.

கடந்த மாதம் 11-ம் தேதி இரவு ரூ.20 லட்சம் பணத்தை வழங்கும்படி வெங்கடேஷிடம் மனைவியும் மகன்களும் கேட்டுள்ளனர். இப்போதைக்கு வீடு தேவையில்லை என வெங்கடேஷ் மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி மற்றும் மகன்கள் சேர்ந்து அவரை அடித்துள்ளனர். அதன் பிறகு அவருடைய படுக்கையறையில் நாய் சங்கிலியால் கட்டி வைத்துள்ளனர்.

‘ரூ.20 லட்சம் பணத்தை எங்கள் பேரில் காசோலை எழுதி கொடு. எங்களுக்கு பணம் கிடைத்த உடனே, உன்னை அவிழ்த்து விடுகிறோம்.இல்லையென்றால் சாகும் வரை இதே கதிதான்' என அவரது மூத்த மகன் சேத்தன் கூறியுள்ளார்.சரியான முறையில் உணவும் நீரும் வழங்கவும் மறுத்துள்ளனர். வெங்கடேஷ் பசியால் துடித்து சத்தமிட்டபோது அவரது மனைவி நாகரத்னா உணவு கொடுத்துள்ளார். மேலும் இயற்கை உபாதைகளை கழிக்கவும் விடவில்லை.ஆதலால் அதே இடத்தில் கழித்துள்ளார்.

17 நாட்களுக்கு பிறகு விடுதலை

இந்நிலையில் அவரது தம்பி ராமசந்திரா வெங்கடேஷைத் தேடி வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது அவர் காணாமல் போய்விட்டதாக இளையமகன் ரஞ்சன் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் வெங்கடேஷின் அறைக்குள் ராமசந்திராவை நுழைய அனுமதிக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பெங்களூர் மாநகர கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து கிரிநகர் போலீஸாருக்கு வெங்கடேஷை தேடும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸார் வெங்கடேஷின் வீட்டில் சோதனை நடத்தினர்.அப்போது ஒரு அறை பூட்டப்பட்டிருந்தது.அதனை திறந்தபோது துர்நாற்றம் வீசியது.உள்ளே ஒரு கட்டிலில் நாய் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் வெங்கடேஷ் தாடியுடன் இருந்துள்ளார்.

அவரை அங்கிருந்து மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அதனைத் தொடர்ந்து கடந்த 30-ம் தேதி அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

பின்னர் உறவினர் வீட்டில் பதுங்கியிருந்த நாகரத்னா, மூத்த மகன் சேத்தனை போலீஸார் கைது செய்த‌னர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். தலைமறைவாக இருந்த இளையமகன் ரஞ்சன் திங்கள்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.

சேர்ந்து வாழ விரும்பவில்லை

சம்பவம் குறித்து வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது,

“பணத்துக்காக சொந்த குடும்பமே என்னை கொல்ல முயற்சித்தது. இனி இவர்களுடன் சேர்ந்து வாழ மாட்டேன். இவர்களுக்காக காலம் முழுக்க கஷ்டப்பட்டு கோடிக்கணக்கில் சம்பாதித்து வைத்திருக்கிறேன். ஆனால் என்னை ஒரு கைதியை விட மிக மோசமாக வீட்டுக்குள்ளே சிறை வைத்துவிட்டனர். அவர்கள் மூவருக்கும் சட்டப்படி தக்க தண்டனை வழங்க வேண்டும்''என்றார்.
ரூ.20 லட்சம் பணத்தை எங்கள் பேரில் காசோலை எழுதி கொடு. எங்களுக்கு பணம் கிடைத்த உடனே உன்னை அவிழ்த்து விடுகிறோம்.இல்லையென்றால் சாகும் வரை இதே கதிதான்' என அவரது மூத்த மகன் சேத்தன் கூறியுள்ளார்.சரியான முறையில் உணவும் நீரும் வழங்கவும் மறுத்துள்ளனர்.

நன்றி : தி இந்து

ஹைதராபாத் நட்சத்திர விடுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை


தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் தொழிலதிபருடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல்துறையினரிடம் பிடிபட்டார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் பிரபல நடிகை விபச்சாரத்தில் ஈடுபடுவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்படி காவல்துறை ஆணையர் உள்ளிட்ட அதிரடிப்படையினர் அந்த ஹோட்டலில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல நடிகை காவல் துறையினரிடம் பிடிபட்டார். நடிகைக்கு இடைத்தரகராகச் செயல்பட்ட துணை இயக்குனர் பாலு என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

அந்த நடிகை பல தெலுங்கு படங்களில் நடித்திருப்பதாகவும், கொல்கத்தாவைச் சேர்ந்தவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்தனர். ஆனால் நடிகையின் பெயரையோ, தொழிலதிபரின் பெயரையோ வெளியிட காவல்துறையினர் மறுத்துவிட்டனர்.

இடைத்தரகராக செயல்பட்ட பாலு சில தெலுங்கு படங்களில் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். அவர் இந்த ஒப்பந்தத்துக்காக நடிகை சார்பில் ரூ.1 லட்சம் பேரம் பேசியுள்ளார்.

அந்தத் தொகையில் அவருக்கு ரூ.15 ஆயிரத்தை கொடுத்துவிட்டு மீதியை அந்த நடிகை வைத்துக்கொண்டதாக காவல் துறையினரிடம பாலு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த நடிகையை மறுவாழ்வு இல்லத்திற்கு அனுப்பியதாகவும், பாலு விபச்சார தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அதிரடிப்படை காவல் கூடுதல் துணை ஆணையர் தெரிவித்தார்.

 நன்றி : http://tamil.webdunia.com/


Monday, September 1, 2014

பள்ளிக் கழிப்பறையில் தீக்குளித்து மாணவி தற்கொலை


வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே பள்ளிக் கழிப்பறையில் 6-ஆம் வகுப்பு மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேர்ணாம்பட்டு பாகர் உசேன் வீதியைச் சேர்ந்தவர் பெயிண்டர் கண்ணபிரான். இவரது மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு ஹரிணி (11), ஜனனி என இரு மகள்கள். மஞ்சுளா இறந்து விட்டதால், ஆம்பூரைச் சேர்ந்த சித்ராவை, கண்ணபிரான் 2-ஆவது திருமணம் செய்து கொண்டார். அவர், தற்போது ஆம்பூரில் தாய் வீட்டில் உள்ளார்.
ஹரிணி, அங்குள்ள அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். திங்கள்கிழமை காலை, வீட்டிலிருந்து பாட்டிலில் மண்ணெண்ணெய் எடுத்து வந்த ஹரிணி, பள்ளிக் கழிப்பறைக்குள் சென்று தனது உடல் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு அங்கு வந்த மாணவர்கள், ஹரிணி தீக்குளித்த விவரத்தை தலைமையாசிரியை ஆயிஷா பேகத்திடம் கூறினர்.
அவரது தகவலின்பேரில், போலீஸார் வந்து மாணவியை மீட்டு அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு, சிகிச்சை பலனின்றி மாணவி ஹரிணி இறந்தார். தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி.விஜயகுமார், டிஎஸ்பி இ.விஜயகுமார் ஆகியோர் அங்கு வந்து நேரடியாக விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக பேர்ணாம்பட்டு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பள்ளிக் கழிப்பறையில் மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி : தினமணி

மனைவியால் 'செக்ஸ்' கொடுமை: மும்பை இளைஞருக்கு விவாகரத்து


மும்பை : மனைவியின், அபரிமிதமான, 'செக்ஸ்' ஆசையை பூர்த்தி செய்ய முடியாமல், களைப்படைந்த கணவன், கோர்ட்டில் விவாகரத்து பெற்ற சம்பவம் நடந்துள்ளது.

மும்பையை சேர்ந்த பெயர், முகவரி குறிப்பிடப்படாத இளைஞர், இந்த ஆண்டு ஜனவரியில், குடும்ப நல கோர்ட்டை அணுகி, மனு ஒன்றை அளித்தார். அதில், குறிப்பிடப்பட்டிருந்ததாவது: எனக்கும், என் மனைவிக்கும், 2012ல் திருமணம் நடந்தது. திருமணம் ஆன பிறகு தான் அவளுக்கு, செக்சில் அதிக ஆர்வம் இருப்பது எனக்கு தெரிய வந்தது. அதிலும், இயற்கைக்கு மாறான செக்சில் அவள் அதிக விருப்பம் கொண்டிருக்கிறாள்.தினமும் மூன்று முறை சேர்ந்த பிறகும் அவளுக்கு திருப்தி கிடைப்பதில்லை. இதனால் என்னை, அசிங்கமாக பேசியும், திட்டியும் வருகிறாள். எனக்கு உடல் நலம் சரியில்லாமல் இருந்தாலும், உடலுறவு வைத்துக் கொள்ள கட்டாயப்படுத்துகிறாள்.அவளின் வேட்கையை என்னால் சரி செய்ய முடியவில்லை.

குடல்வால் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, சில நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் என்னை அறிவுறுத்தினர். அந்த நாட்களில் கூட அவள் என்னை விடவில்லை. அவளின் அந்த தொந்தரவால், நான் களைப்படைந்து விட்டேன்.மனநோயாக இருக்கலாம் என கருதி, டாக்டரிடம் செல்லலாம் என அழைத்தால், வர மாட்டேன் என அடம் பிடிக்கிறாள். 'என்னைப் பற்றி யாரிடமாவது சொன்னால், கொன்று விடுவேன்' என, மிரட்டுகிறாள்.நான் செக்சுக்கு மறுத்தால், வேறு யாரிடமாவது சென்று விடுவேன் என மிரட்டுகிறாள். அவளிடம் இருந்து எனக்கு விவாகரத்து வேண்டும்.இவ்வாறு அந்த இளைஞர் கோரியிருந்தார். வழக்கு விசாரணைக்கு பல முறை அழைத்து, 'சம்மன்' அனுப்பிய பிறகும், அந்தப் பெண் ஆஜராகாததால், அவளின் கணவனுக்கு அவளிடம் இருந்து விவாகரத்து வழங்கி, குடும்ப நல கோர்ட் நீதிபதி, லட்சுமி ராவ், கடந்த வாரம் உத்தரவிட்டார்.

நன்றி : தினமலர்

பள்ளிக்கு சென்ற ஆசிரியை பட்டபகலில் மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம்



உத்தரபிரதேசத்தில் காலை பள்ளிக்கு சென்ற ஆசிரியை மர்ம கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்.


தங்க செயின் பறிப்பு



உத்தரபிரதேச மாநிலம் மெயின்பூரி மாவட்டம் நாக்லா மாது என்ற கிராமத்தில் இளம்பெண் ஒருவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். பள்ளிக்கு ஆசிரியை தினம் நடந்து வந்துள்ளார். இதனை சிலர் நோட்டமிட்டுள்ளனர். எப்போதும் போல் இன்றும் பள்ளிக்கு ஆசிரியை நடந்து வந்துள்ளார். 



அப்போது மர்ம நபர்கள் மூன்று பேரை அவர் வழிமறித்து தங்க செயினை பறித்துள்ளனர். மேலும், ரூ. 5 ஆயிரத்தை பறித்துள்ளனர். அப்போது ஆசிரியை சத்தம் போட்டுள்ளார். செயின் மற்றும் பணத்தை கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து அவர்களுடன் போராடியுள்ளார். அப்போது அந்த குண்டர்கள் ஆசிரியை கடுமையாக தாக்கியுள்ளனர். 



பாலியல் பலாத்காரம்



பின்னர் ஆசிரியை சாலையில் ஓரம் இருந்த புதருக்கு கரகரவென இழுத்துச் சென்றுள்ளனர். அங்கு ஆசிரியையை அந்தக் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. ஆசிரியிடம் இருந்த செயின் மற்றும் பணத்தை அவர்கள் பறித்துக் கொண்டு சென்றுவிட்டனர். அப்போது ஆசிரியையின் சத்தம் கேட்டு அப்பகுதியாக சென்றவர் குற்றவாளி ஒருவனை மடக்கி பிடித்தார். 



மற்றவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி சென்ற மற்ற குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பாதிக்கப்பட்ட ஆசிரியை மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப் பட்டுள்ளார். என்று போலீசார் தெரிவித்துள்ளனர். உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்துவிட்டது. என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினாலும், அங்கு தொடர்ந்து பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் நடத்த வண்ணம் உள்ளது.

நன்றி : தினத்தந்தி