Showing posts with label வெடிகுண்டு கலாசாரம். Show all posts
Showing posts with label வெடிகுண்டு கலாசாரம். Show all posts

Friday, December 11, 2015

சீனாவின் பெரும் செல்வந்தர்களில் ஒருவரைக் 'காணவில்லை'

பெரும்

சீனாவின் பெரும்  செல்வந்தர்களில் ஒருவர் காணாமல்போயுள்ளதாக கூறப்படுகின்றது.
அவர் காவல்துறையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக ஊகங்களும் பரவிவருகின்றன.
முதலீட்டுத் துறையில் மிகுந்த ஆர்வம் கொண்டவரான குவோ குவாங்சாங் சீனாவின் 'வாரன் பஃபட்' என்று அறியப்பட்டவர்.
நேற்று வியாழக்கிழமை மாலையிலிருந்து அவரைத் தொடர்புகொள்ள முடியாமல் இருப்பதாக அவரது ஃபோஸுன் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் பணியாளர்கள் சீன சஞ்சிகை ஒன்றுக்கு தெரிவித்துள்ளனர்.
தங்கள் நிறுவனத்தின் பங்குகளின் விற்பனையை இடைநிறுத்தி வைத்திருக்குமாறு ஹாங் காங் பங்குபரிவர்த்தனை நிர்வாகத்திடம் ஃபோஸுன் இண்டர்நேஷனல் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலதிக தகவல்களை பின்னர் வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
கடந்த ஆகஸ்டில், ஊழல் வழக்கு ஒன்றில் குவோ-வின் பெயரும் தொடர்புடுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.bbc.com/tamil/global/2015/12/151211_china_guo

Sunday, November 22, 2015

60 நாட்களில் ஆயிரம் பாலஸ்தீன சிறுவர்கள் மாயம்: சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவம்


Image result for israel

By DN, காஸா
First Published : 22 November 2015 09:46 PM IST

பாலஸ்தீன சிறுவர்களை கடத்திச் சென்று மூளைச்சலவை செய்து அவர்களை மனித வெடிகுண்டுகளாக பயன்படுத்தும் இஸ்ரேல் ராணுவத்தின் கொடூரச் செயல் அம்பலமாகியுள்ளது.

பாலஸ்தீனர்களுக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே சண்டை தொடர்ந்து நடந்து கொண்டேயிருக்கிறது. மிக நவீன இயந்திர துப்பாக்கி மற்றும் விமான தாக்குதல் மூலம் இஸ்ரேல் ராணுவம் அப்பாவி பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

அதேசமயம், எத்தகைய ஆயுதமுமின்றி கற்களை மட்டுமே சண்டையின் போது பாலஸ்தீனர்கள் பயன்படுத்துகின்றனர். கடந்த அக்டோபர் 1 முதல் நவம்பர் 20 வரையி லான 50 நாட்களில் 1038 பாலஸ்தீனர்கள் கொல்லப் பட்டுள்ளனர். ஆனால், இஸ்ரேலியர்கள் உயிரிழந்தவர்கள் 37 பேர் மட்டுமே.

இந்நிலையில், பாலஸ் தீனியர்கள் வீடுகளுக்குள் புகுந்து இஸ்ரேல் ராணுவம் சோதனை செய்து வருகிறது. பெண்கள் ஈவு இரக்கமின்றி அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். சிறுவர்கள் கடத்தி செல்லப்படுகின்றனர். சோதனை என்ற பெயரில் பாலஸ்தீன சிறுவர்களை பிடித்துச் செல்லும் இஸ்ரேலிய ராணுவத்தினர் அவர்களை மூளைச்சலவை செய்து மனித வெடிகுண்டாகவும், தீவிரவாத செயல்களுக்காகவும் பயன்படுத்துகின்றனர்.

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் இவ்வாறு பிடித்துச் செல்லப்பட்ட பாலஸ்தீன சிறுவர்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் அதிகம் ஆகும். ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீனத் துக்கான ஆராய்ச்சி மற்றும் பொது நிகழ்வுக்கான மையம் இந்த அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

கடத்திச் செல்லப்படும் பாலஸ்தீன சிறுவர்கள் முதலில் இஸ்ரேல் குழந்தை ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயிற்சியளிக்கப்பட்டு அதன்பின் மூளைச் சலவை செய்யப்பட்டு பல்வேறு நோக்கங்களுக்கு பயன்படுத்தப்படுவதாக அந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது

தினமணி

Saturday, November 21, 2015

மாலி ஹோட்டலில் பயங்கரம்: தீவிரவாதிகள் - ராணுவம் மோதலில் 18 பேர் பலி; 20 இந்தியர்கள் உட்பட 250 பேர் பத்திரமாக மீட்பு

பமாகோவில் ரேடிசன் புளூ ஹோட்டல் பகுதி. | படம்: ஏ.பி.

மாகோவில் ரேடிசன் புளூ ஹோட்டல் பகுதி. | படம்: ஏ.பி.

மாலி தலைநகர் பமாகோவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த மோதலில் 18 பேர் பலியாயினர்.

அந்த ஹோட்டலில் தங்கியி ருந்த 20 இந்தியர்கள் உட்பட 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி கடந்த 1960-ம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது. 90 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் அந்த நாட்டில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அங்கு அல்-காய்தா ஆதரவு அமைப்பு உட்பட 5-க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

காவலர்கள் சுட்டுக்கொலை

இந்நிலையில் தலைநகர் பமாகோவில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் மீது நேற்று காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 10 தீவிரவாதிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த வாயில் காவலர்களை சுட்டுக் கொன்றனர்.

ஹோட்டலுக்குள் புகுந்த தீவிர வாதிகள் ஒவ்வொரு அறையாக தேடி அங்கு தங்கியிருந்தவர்களை பிணைக்கைதியாக பிடித்தனர். ஹோட்டல் ஊழியர்கள் 30 பேர், வாடிக்கையாளர்கள் 140 பேர் என மொத்தம் 170 பேரை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்.

ரேடிசன் புளூ ஓட்டலில் 20 இந்தியர்களும் தங்கியிருந்தனர். ஹோட்டல் அறையில் பரிதவித்த அவர்கள் அனைவரும் சில மணி நேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

20 இந்தியர்கள்

இதுகுறித்து இந்திய வெளி யுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாலி ஹோட்ட லில் தங்கியிருந்த 20 இந்தியர் களும் துபாய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அந்த ஹோட்டலில் நிரந்தர மாக தங்கியிருப்பவர்கள். அனை வரும் பத்திரமாக மீட்கப்பட்டுள் ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 170 பேரும் ஹோட்டலின் 7-வது தளத்தில் உள்ள அறையில் அடைக் கப்பட்டனர். அந்த தளத்தை நெருங்க முடியாமல் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-மவுராபிட்டன் பொறுப்பேற்றுள்ளது.

மாலி அதிபர் கெய்டா, சாத் நாட்டில் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்தார். தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தனது சுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு பமாகோவுக்கு திரும்பினார்.

80 பேர் விடுவிப்பு

மாலி ராணுவத்தைச் சேர்ந்த அதிரடிப் படை வீரர்கள் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். மாலியில் முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப் படை வீரர்களும் ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர். மாலி அதிரடி படைவீரர்கள் ஹோட்டலின் ஒவ்வொரு தளமாக முன்னேறினர்.

இதனிடையே ஹோட்டலில் தங்கியிருந்தவர்களில் புனித குர் ஆன் ஓதத் தெரிந்தவர்களை மட்டும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். அந்த வகையில் 80 பேர் விடுவிக்கப்பட்டனர். மாலி ராணுவ வீரர்களின் முயற்சி யால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 பேரும் மீட்கப் பட்டனர்.

அமெரிக்க அதிரடிப் படை

இதனிடையே அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் ஹோட்ட லுக்குள் அதிரடியாக நுழைந்து தீவிரவாதிகள் பிடியில் இருந்த 6 அமெரிக்கர்களை மீட்டனர்.

இந்த சண்டையில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை அமெரிக்க வீரர்கள் தலைமையேற்று நடத்தினர். இதை தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த சுமார் 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மாலி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


  இந்து

Tuesday, March 11, 2014

சத்த்தீச்கர் : நக்சல் தாக்குதலில் 16 பேர் பலி



சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸலைட்டுகள் செவ்வாய்க்கிழமை நடத்திய திடீர் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள் உள்பட 16 பேர் பலியானார்கள். மேலும் 3 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து வனப் பகுதிக்குள் தப்பியோடி விட்ட நக்ஸலைட்டுகளைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜீரம் நுல்லா வனப் பகுதியில் சிஆர்பிஎஃப் படையினர் 30 பேரும், மாநில போலீஸார் 14 பேரும் புதிதாக சாலை அமைக்கும் பணியில் செவ்வாய்க்கிழமை காலை ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை சுமார் 200 நக்ஸலைட்டுகள் திடீரென சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தினர். அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கண்ணிவெடிகளை வெடிக்க செய்ததுடன், பாதுகாப்பு படையினரையும் துப்பாக்கிகளால் சுட்டனர்.

இந்தத் தாக்குதலில் 11 சிஆர்பிஎஃப் படை வீரர்கள், 4 போலீஸார் உள்பட 16 பேர் பலியாகினர். அவர்களில் சிஆர்பிஎஃப் படைக்கு தலைமை தாங்கி வழிநடத்திய இன்ஸ்பெக்டர் சுபாஷ் என்பவரும் ஒருவராவார். மேலும் 3 பேர் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்தனர்.

பின்னர் தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் படையினர் மற்றும் போஸீஸாரின் உடல்கள் அருகே கிடந்த துப்பாக்கிகளை நக்ஸலைட்டுகள் கொள்ளையடித்துக் கொண்டு வனப்பகுதிக்குள் தப்பியோடி விட்டனர். தப்பியோடும்போது அப்பகுதியில் இருந்த 3 வாகனங்களை நக்ஸலைட்டுகள் தீவைத்து எரித்து விட்டனர்.

நக்ஸலைட்டுகள் தரப்பில் உயிரிழப்பு ஏற்பட்டதா? அல்லது யாரேனும் காயமடைந்தனரா ?என்பது குறித்து தகவல் இல்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தண்டேவாடா பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்பு படையினர் 76 பேர் பலியாகினர். 2013ஆம் ஆண்டு மே மாதம் பஸ்தர் பகுதியில் நக்ஸலைட்டுகள் நடத்திய மற்றொரு தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் வி.சி. சுக்லா மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து நக்ஸலைட்டுகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.

இந்தத் தாக்குதலை நக்ஸலைட்டுகள் இயக்கத்தை சேர்ந்த ராமண்ணா, சுரீந்தர் மற்றும் தேவா ஆகிய 3 பேர் தலைமை தாங்கி நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடந்த மாதம் 17ஆம் தேதி நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் உள்ள மாநிலங்களுக்கு, புலனாய்வுப் படை எச்சரிக்கை விடுத்திருந்தது. அந்த எச்சரிக்கையை உறுதிப்படுத்தும் வகையில் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியிருப்பது சத்தீஸ்கரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேடும் பணி தீவிரம்: தாக்குதல் நடத்திவிட்டு வனப்பகுதிக்குள் தப்பியோடிவிட்ட நக்ஸலைட்டுகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சிஆர்பிஎஃப் படையினர் மற்றும் போலீஸார் ஏராளமானோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஜெகதால்பூர் மற்றும் ராய்ப்பூரில் இருந்து 2 விமானப்படை விமானங்களும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் நடைபெற்ற பகுதியை பார்வையிடுவதற்காக சிஆர்பிஎஃப் டிஜிபி திலீப் திரிவேதி மற்றும் ஐஜி ஜுல்பிகர் ஹாசன் ஆகியோர் அப்பகுதிக்கு விரைந்துள்ளனர்.

சத்தீஸ்கர் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலத்தில் நக்ஸல்கள் ஆதிக்கமுள்ள சோனேபத்ரா, சாந்தௌலி, மிர்ஜாபூர் ஆகிய 3 மாவட்டங்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளன.

பிரணாப் வலியுறுத்தல்: இந்நிலையில் நக்ஸல்கள் தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, சத்தீஸ்கர் மாநில ஆளுநர் சேகர் தத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், நக்ஸல்கள் தாக்குதலில் பாதுகாப்புப் படையினர், போலீஸார் பலியானது குறித்த செய்தியை கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்ததாகவும், பாதுகாப்புப் படையினர் மீது இதுபோன்ற தாக்குதலில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவத்துக்கு கடும் அதிர்ச்சி தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, நக்ஸலைட்டுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கும் என்றும், அந்த இயக்கம் தயக்கமின்றி ஒடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் கூறுகையில், "இந்தத் தாக்குதல் கோழைத்தனமானது' என்றார்.

ராகுல் கண்டனம்: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறுகையில், "இந்தத் தாக்குதல் முட்டாள்தனமானது. தாக்குதலில் உயிரிழந்த பாதுகாப்பு படையினரின் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்' என்றார்.

பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், "இந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தை பாஜக கண்டிக்கிறது. தேர்தலுக்கு முன்னதாக நக்ஸலைட்டுகள் தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

சட்டப்பேரவை தேர்தலின்போது இதேபோல் நக்ஸலைட்டுகள் தாக்குதலை நடத்தினர். ஆனால் அவர்களின் திட்டம் அப்போது தோல்வியடைந்தது. அதுபோல் மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தற்போதும் நக்ஸல்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த முறை போன்று இம்முறையும் அவர்கள் தோல்வியடைவர்' என்றார்.

மாநில அரசே பொறுப்பு- காங்கிரஸ்: காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில்," தேர்தலுக்கு முன்னதாக தாக்குதல் நடத்துவதை நக்ஸல்கள் வழக்கமாக கொண்டுள்ளதாக பாஜக தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் தவிர்க்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பாகும்' என்றார்.

தினமணி

Tuesday, December 3, 2013

பீகாரில் மாவோயிஸ்ட் கண்ணிவெடி தாக்குதல் : 6 போலீசார் பலி



 பீகாரின் அவுரங்கபாத் மாவட்டத்தில், ரோந்துப் பணி மேற்கொண்டிருந்த 6 போலீசார், மாவோயிஸ்ட்களின் கண்ணி வெடித் தாக்குதலில் பலியாகியுள்ளதாகவும், இறந்தவர்களில் தண்ட்வா காவல் நிலைய அதிகாரி அஜய் குமாரும் ஒருவர் என்றும் காவல்துறை ஆய்வாளர் சுஷில் கோப்டே தெரிவித்துள்ளார்.

நபிநகர் பகுதியிலிருந்து, தண்ட்வா காவல் நிலையத்திற்கு 6 போலீசாரும் திரும்புகையில், உத்ரி கோல் நகர் என்ற இடத்தின் அருகே குண்டு வெடித்தது. இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என கோப்டே தெரிவித்தார்.

மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியான அவுரங்கபாத், பாட்னாவிலிருந்து 200கிமீ தொலைவில், ஜார்கண்ட் மாநிலத்தின், பலமு மாவட்ட எல்லையை ஒட்டியுள்ளது                                                                                     

தி இந்து - 04 - 12 - 2013

Saturday, November 30, 2013

6-பேர் பலி. கூடங்குளம் அணு உலைப் பாதுகாப்பு ?

 

 பாதுகாக்கப்பட்ட பகுதியான கூடங்குளம் அணு உலை அருகே, இடிந்தகரை சுனாமி காலனியில், நாட்டு வெடிகுண்டு வெடித்து, 6 பேர் பலியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தால் அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறி யாகியுள்ளது. இந்தக் கிராமத்தில் நாட்டு வெடிகுண்டுகளைத் தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளத்தில், அணு உலை அமைந்திருக்கும் இடத்தி லிருந்து 2 கி.மீ. தொலைவில், இடிந்தகரை சுனாமி காலனி அமைந்துள்ளது. கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடை பெறும் போராட்டங்களில், சுனாமி காலனி மக்களும் பங்கெடுத்தனர். இப்போராட்டம் நடைபெற்றுவந்த நேரத்தில், அருகிலுள்ள கூத்தன்குழி கிராமத்தில், கடந்த செப்டம்பர் மாதம், இரு தரப்பு மீனவர்கள் மோதல் உச்சத்தை அடைந்தது. இதனால், ஒரு தரப்பினர் அங்கிருந்து வெளியேறி, இடிந்தகரை சுனாமி குடியிருப்பு பகுதிக்கு குடிபெயர்ந்தனர்.

கூத்தன்குழி மீனவர்கள் சிலர் நாட்டு வெடிகுண்டுகள் தயாரிப்பதும், அவை அவ்வப்போது வெடித்து உயிர் பலி, காயங்கள் நேருவதும் தொடர்ந்து நடைபெற்று வந்தன. இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன், சுனாமி காலனிக்கு வந்து குடிபெயர்ந்தவர்களும் வெடிகுண்டுகள் தயாரிக்கக் கூடும் என்று அங்குள்ளவர்கள் அஞ்சினர்.

மாதா பெயரில் சத்தியம்

இதுகுறித்து ஊர் கமிட்டி நிர்வாகிகள் விவாதித்து, வெடிகுண்டு தயாரிக்க கூடாது என, கூத்தன்குழி பகுதியிலிருந்து வந்தவர்களிடம், மாதா கோயிலில் சத்தியம் வாங்கிய பிறகே, சுனாமி காலனியில் அவர்களை தொடர்ந்து தங்கவைத்தனர். ஆயினும், அங்கு வெடிகுண்டு தயாரிப்பது, மிகப்பெரிய தொழிலாகவே தொடர்ந்தது.

கூத்தன்குழி கிராமத்தை சேர்ந்த ஜெனி என்பவரது பெயரிலுள்ள வீட்டில், செவ்வாய்க்கிழமை மாலை சிலர், நாட்டு வெடிகுண்டுகளை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். தயாரான வெடிகுண்டுகளை வேறு சிலர் பெட்டிகளில் அடுக்கி, நாட்டுப்படகு மூலம், கூத்தன்குழிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீரென்று நாட்டு வெடிகுண்டுகள் வெடித்து சிதறியதில், அந்த வீடு தரைமட்ட மானது. அருகிலுள்ள ரோஸ்லின், ராணி, மரிய அல்போன்ஸ், அன்பரசி ஆகியோரது வீடுகளும் சேதமடைந்தன.

6 பேர் உயிரிழப்பு

வெடிகுண்டுகள் வெடித்து நாலாபுறமும் கற்கள் சிதறிய வேகத்தில், அருகில் பீடி சுற்றிக்கொண்டிருந்த, சகாயம் மனைவி ரோஸ்லின் (35), அவரது குழந்தைகள் சுபிசா (10), சுபிசன் (2) தூக்கி வீசப்பட்டனர். இதில் சுபிசாவும், சுபிசனும் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். ரோஸ்லின் பலத்த காயமடைந்தார்.

இதுபோல், வெடிகுண்டுகள் வைக்கப் பட்டிருந்த வீட்டிலிருந்த கூத்தன்குழியை சேர்ந்த யாகப்பன்(32), மோசஸ் மகன் வளன் (27), சந்தானசூசை மகன் மகிமைராஜ் (31) ஆகியோரும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் வளன், மகிமைராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கால்கள் துண்டிக்கப்பட்ட யாகப்பன், நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

மேலும், சுனாமி காலனியை சேர்ந்த தொம்மை மனைவி பிரமிளா (35) என்பவரும் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். வெடிகுண்டுகள் வெடித்த போது, அவ்வழியாக சென்றுகொண்டிருந்த சந்தியாகு மகன் விஜயன்(18), இயேசு

மரிய சூசை (45) பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.

மெட்டல் டிடெக்டர் சோதனை

திருநெல்வேலியிலிருந்து, மோப்ப நாயுடன் வந்திருந்த வெடிகுண்டு நிபுணர்கள், இடிபாடுகள் காணப்பட்ட பகுதியில் மெட்டல் டிடெக்டர்களுடன் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பைகளில் அடைக்கப்பட்டிருந்த வெடி

மருந்து பொருட்கள் சிக்கின. 20 மீட்டர் தொலைவில் கிடந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றும் கைப்பற்றப்பட்டது. வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட வீடுகளில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர்.

கோரக்காட்சிகள்

வெடிகுண்டுகளும், வெடிப்பொருட்க ளும் ஒருசேர வெடித்ததால் அந்த காலனி பகுதியே நிலநடுக்கத்தால் அதிர்ந்தது போன்று உணர்ந்ததாக அங்குள்ளவர்கள் தெரிவித்தனர். இடிபாடுகளுடன் இறந்தவர்களின் உடல் பாகங்களும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.

அணு உலைக்கு ஆபத்து

இடிந்தகரையில் நடந்த இச்சம்பவம் மூலம், அங்கு வெடிகுண்டுகள் பெருமளவில் தயாரிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது. மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய, கூடங்குளம் அணு உலைக்கு, 2 கி.மீ., தொலைவிலேயே வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டதும், அவை வெடித்துச் சிதறியிருப்பதும், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தனை காலமாக, இதை எப்படி போலீசார் கட்டுப்படுத்த தவறினர் என்பதும், இதனால், அணு உலை பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதும், அந்தப் பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது.

நன்றி ;- தி இந்து ,  28 - 11 - 2013