Saturday, November 21, 2015

மாலி ஹோட்டலில் பயங்கரம்: தீவிரவாதிகள் - ராணுவம் மோதலில் 18 பேர் பலி; 20 இந்தியர்கள் உட்பட 250 பேர் பத்திரமாக மீட்பு

பமாகோவில் ரேடிசன் புளூ ஹோட்டல் பகுதி. | படம்: ஏ.பி.

மாகோவில் ரேடிசன் புளூ ஹோட்டல் பகுதி. | படம்: ஏ.பி.

மாலி தலைநகர் பமாகோவில் உள்ள நட்சத்திர ஹோட்டல் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு ராணுவம் பதிலடி கொடுத்தது. இந்த மோதலில் 18 பேர் பலியாயினர்.

அந்த ஹோட்டலில் தங்கியி ருந்த 20 இந்தியர்கள் உட்பட 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி கடந்த 1960-ம் ஆண்டில் பிரான்ஸிடம் இருந்து விடுதலை பெற்றது. 90 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் அந்த நாட்டில் 2012-ம் ஆண்டில் இருந்து உள்நாட்டு குழப்பம் நீடித்து வருகிறது. அங்கு அல்-காய்தா ஆதரவு அமைப்பு உட்பட 5-க்கும் மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.

காவலர்கள் சுட்டுக்கொலை

இந்நிலையில் தலைநகர் பமாகோவில் உள்ள ரேடிசன் புளூ ஐந்து நட்சத்திர ஹோட்டல் மீது நேற்று காலை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். சுமார் 10 தீவிரவாதிகள் ஏ.கே.47 ரக துப்பாக்கிகளுடன் ஹோட்டலுக்குள் நுழைந்தனர். அங்கிருந்த வாயில் காவலர்களை சுட்டுக் கொன்றனர்.

ஹோட்டலுக்குள் புகுந்த தீவிர வாதிகள் ஒவ்வொரு அறையாக தேடி அங்கு தங்கியிருந்தவர்களை பிணைக்கைதியாக பிடித்தனர். ஹோட்டல் ஊழியர்கள் 30 பேர், வாடிக்கையாளர்கள் 140 பேர் என மொத்தம் 170 பேரை தீவிரவாதிகள் சிறைபிடித்தனர்.

ரேடிசன் புளூ ஓட்டலில் 20 இந்தியர்களும் தங்கியிருந்தனர். ஹோட்டல் அறையில் பரிதவித்த அவர்கள் அனைவரும் சில மணி நேரத்துக்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனர்.

20 இந்தியர்கள்

இதுகுறித்து இந்திய வெளி யுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மாலி ஹோட்ட லில் தங்கியிருந்த 20 இந்தியர் களும் துபாய் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அந்த ஹோட்டலில் நிரந்தர மாக தங்கியிருப்பவர்கள். அனை வரும் பத்திரமாக மீட்கப்பட்டுள் ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள் ளது.

தீவிரவாதிகள் பிடியில் சிக்கிய 170 பேரும் ஹோட்டலின் 7-வது தளத்தில் உள்ள அறையில் அடைக் கப்பட்டனர். அந்த தளத்தை நெருங்க முடியாமல் தீவிரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தா ஆதரவு அமைப்பான அல்-மவுராபிட்டன் பொறுப்பேற்றுள்ளது.

மாலி அதிபர் கெய்டா, சாத் நாட்டில் சுற்றுப் பயணம் மேற் கொண்டிருந்தார். தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து அவர் தனது சுற்றுப் பயணத்தை பாதியில் ரத்து செய்துவிட்டு பமாகோவுக்கு திரும்பினார்.

80 பேர் விடுவிப்பு

மாலி ராணுவத்தைச் சேர்ந்த அதிரடிப் படை வீரர்கள் ஹோட்டலை சுற்றி வளைத்தனர். மாலியில் முகாமிட்டுள்ள ஐ.நா. அமைதிப் படை வீரர்களும் ஹோட்டலை சுற்றி பாதுகாப்பு அரண் அமைத்தனர். மாலி அதிரடி படைவீரர்கள் ஹோட்டலின் ஒவ்வொரு தளமாக முன்னேறினர்.

இதனிடையே ஹோட்டலில் தங்கியிருந்தவர்களில் புனித குர் ஆன் ஓதத் தெரிந்தவர்களை மட்டும் தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். அந்த வகையில் 80 பேர் விடுவிக்கப்பட்டனர். மாலி ராணுவ வீரர்களின் முயற்சி யால் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 12 பேரும் மீட்கப் பட்டனர்.

அமெரிக்க அதிரடிப் படை

இதனிடையே அமெரிக்க அதிரடிப்படை வீரர்கள் ஹோட்ட லுக்குள் அதிரடியாக நுழைந்து தீவிரவாதிகள் பிடியில் இருந்த 6 அமெரிக்கர்களை மீட்டனர்.

இந்த சண்டையில் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தாக்குதலை அமெரிக்க வீரர்கள் தலைமையேற்று நடத்தினர். இதை தொடர்ந்து தீவிரவாதிகளின் பிடியில் சிக்கியிருந்த சுமார் 250 பேர் பத்திரமாக மீட்கப்பட்டதாக மாலி பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது.


  இந்து

No comments:

Post a Comment